செய்வினை என்பது சில தீய எண்ணம் படைத்தவர்கள் எதிர்மறை சக்திகளை தங்களுக்கு யார் வேண்டாதவர்களோ அல்லது யாரின் முன்னேற்றத்தை தடுக்க வேண்டும் என்று நினைகிறார்களோ அவர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். மாந்திரீகம், தாந்ரீகம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி செய்யும் பூஜைகளை செய்வினை என்கிறோம்.
தெளிந்த நீரோடை போல ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில் திடீரென்று சில பின்னடைவுகள் நாம் சந்திக்க நேரும். சில-பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரலாம். இவை எல்லாம் நாம் தாங்கிக் கொள்ளும் வகையில் இருக்கும் வரை நாமே அந்த சூழ்நிலையை சரி செய்து கொள்வோம். ஆனால் சில சமயங்களில் நம்மால் தாங்க முடியாத அளவு தொடர் பிரச்சினைகள் வந்தால் அப்பொழுது நம்மால் அதை எதிர் கொள்ள முடியாமல் உதவிக் கரம் தேடுவோம். இவ்வாறு தொடர் தோல்விகள் அல்லது பிரச்சனை அல்லது நோய்களுக்கு செய்வினை காரணம் என்று கூறலாம்.
செய்வினை செய்வது என்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது எனலாம். செய்வினை பல வகைகளில் செய்யப்படுகிறது. சிலர் துஷ்டசக்திகளை தங்களின் எதிரிகளுக்கு எதிராக ஏவி விடுவார்கள். இன்னும் சிலர் யந்திர தகடுகளை மந்திர உச்சாடனம் செய்து வைப்பார்கள். இதனால் தாங்கள் செய்வினையால் தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என தெரியாமலேயே அந்த நபர் பல விதமான துன்பங்களை சந்தித்து வருவதுண்டு. சொல்ல முடியாத பல பிரச்சனைகளில் சிக்கி தவிப்பார்கள்.
செய்வினை அறிகுறிகள்
தொழில் முடக்கம், வீட்டில் சண்டை சச்சரவுகள், அடிக்கடி கெட்ட கனவுகள், நோயால் பாதிப்பு, குல தெய்வ கோவிலுக்கு செல்வதில் தடை போன்றவை செய்வினையால் ஏற்படும் பாதிப்புகள் அல்லது பிரச்சினைகள். பூஜை பொருட்கள் அழுகிப் போதல், அடிக்கடி பால் பொங்குதல், கூடவே யாரோ இருப்பது போல இருப்பது, தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போல இருப்பது, தூங்கும் போது நம்மை அமுக்குவது/ எழுப்புவது போல இருத்தல் இவை எல்லாம் ஏவல். பில்லி, சூனியம் செய்ததால் ஏற்படும் பாதிப்பு.
மேலே சொன்ன இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் செய்வினையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் செய்வினையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மேலும் உறுதி செய்து கொள்ள சில எளிய வழிகளை சோதித்து பார்க்கலாம்.
வீட்டில் துளசி செடியை நட்டு வளர்க்க வேண்டும். அதற்கு தினமும் நீர் ஊற்றி வளர்க்க வேண்டும். செடி பட்டுப் போகாமல் வளர்ந்தால் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி உள்ளது. மற்றும் தீய சக்திகள் எதுவும் இல்லை என உணரலாம். செடி பட்டுப் போனால் தீய சக்திகள் உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் அம்மன் கோவிலில் இருந்து ஒரு எலுமிச்சை பழத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வாருங்கள். அதனை உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த எலுமிச்சைப் பழம் அழுகாமல் வாடினால் செய்வினை எதுவும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். பழம் அழுகினால் செய்வினை உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.
முழு எலுமிச்சம் பழம் மூன்றை எடுத்து தலை முதல் கால் வரை உடல் முழுவதும் உருட்டி மூன்று முச்சந்திகளில் போட்டு அதைக் காலால் மிதித்து திரும்பி பார்க்காமல் வீட்டுக்கு வந்து வெளியே குளித்து விட்டு பிறகு வீட்டினுள் சென்று சாமி கும்பிட்டால் தீய சக்திகள் நம்மை விட்டு விலகி விடும். நல்ல கச்திகள் நம்முள் பரவி விடும்.
வீட்டில் கடல் நீரை தெளித்து விடவும். கடல் நீர் இல்லாத பட்சத்தில் நீரில் சிறிது கல்லுப்பை போட்டுக் கரைத்து அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும்.
ஞாயிறு அல்லது வியாழக்கிழமை மாலை நிலைவாசலில் கல்லுப்பு பரப்பி அதன் மீது தேங்காய் வைத்து கற்பூரம் ஏற்றி இந்த வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் விலக வேண்டும் என சொல்லி அரிவாளால் தேங்காயை வெட்டி தூரத்தில் கொண்டு போய் தேங்காய், உப்பினை போட்டு விட வேண்டும். நீர் நிலைகளிலும் போடலாம்.
செய்வினை பாதிப்பு இருந்தால், குளக்கரைக்கு சென்று ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து, உங்களின் குலதெய்வத்தை நினைத்து, உங்கள் தலையை சுற்றி, பின்புறமாக எறிந்து விட வேண்டும். பிறகு அந்த குளத்தில் நீராடி, உங்களின் இஷ்ட தெய்வத்தை தரிசித்து வந்தால் செய்வினை கோளாறுகள் நீங்கும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025