Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
பூமி பூஜை – முக்கியத்துவம், வழிபாட்டுமுறை மற்றும் வழிபடுவதற்கான பூஜை பொருட்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பூமி பூஜை – முக்கியத்துவம், வழிபாட்டுமுறை மற்றும் வழிபடுவதற்கான பூஜை பொருட்கள்

Posted DateJanuary 22, 2024

பொதுவாக நாம் நிலம் வாங்கி வீடு அல்லது வேறு கட்டிடம் கட்டினால், அல்லது விவசாயம் செய்தால், முதலில் பூமி பூஜை செய்ய வேண்டியது அவசியம். இது பூமி தேவிக்கு நாம் செலுத்தும் மரியாதை அல்லது சிறப்பு சடங்கு ஆகும்.  அவ்வாறு செய்வதன் மூலம் பூமா தேவியின் ஆசிகளை நாம் பெற முடியும். இந்த பூஜை செய்வதன் மூலம் செழிப்பும் அமைதியும் கிட்டும். அது மட்டும் இன்றி, நாம் கட்டிட வேலை செய்யும் போது நிலத்தில் வாழும் புழு பூச்சிகளுக்கு நம்மால் தீங்கு ஏற்படலாம். அதற்கு மன்னிப்பு கேட்கும் நோக்கமாக இந்த சடங்கு அமையலாம்.

வாஸ்து பூஜை

இந்த பூஜையை வாஸ்து பூஜை என்றும் கூறுவார்கள். பொதுவாக பூமி பூஜை செய்வது வாஸ்து நாள், நேரம் பார்த்து தான் செய்வார்கள். பூமி தொடர்பான பணிகளை துவங்குவதற்கு முன் வாஸ்து புருஷனை வணங்கி விட்டு துவங்க வேண்டும் என்பார்கள்.

வாஸ்து புருஷன் மற்றும் வாஸ்து நாட்கள்

யார் வாஸ்து புருஷன்? வாஸ்து புருஷன், வாஸ்து பகவான், பூமிநாதன் என பல பெயர்களாலும் அழைக்கப்படுவது ஒரு பூதமாகும். சிவ பெருமானிடம் வரம் பெற்ற இந்த பூதத்திற்கு, பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை சாப்பிடு என்றும், சாஸ்திரப்படி கட்டப்படாத வீட்டில் வசிப்பவர்களை வாட்டு என்றும் வரம் அளித்தார். இந்த பூதமே வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மையையும், சாஸ்திரங்களை மீறுபவர்களுக்கு துன்பத்தையும் தருகிறது. எப்போதும் பூமிக்கு அடியில் தூங்கிக் கொண்டிருக்கும் வாஸ்து பகவான், வருடத்திற்கு 8 நாட்கள் மட்டுமே கண் விழிப்பார். இதை வாஸ்து நித்திரை விடும் காலம் என்பார்கள். இந்த நாட்களையே வாஸ்து நாட்கள் என்றும், பூமி தொடர்பாக பணிகளை துவக்குவதற்கு ஏற்ற நாள் என்றும் சொல்கிறோம்.

பஞ்ச பூதங்கள்

பூமி பூஜையின் போது பஞ்ச பூதங்களும் கருத்தில் கொண்டு பூஜை நடத்தப்படுகிறது. நெருப்பு,, நிலம், நீர், காற்று, ஆகாயம் இவை பஞ்ச பூதங்கள் ஆகும். மனித வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட இந்த கூறுகளின் சமநிலை பராமரிக்கப்படும் போது நன்மை பெறலாம்.

பூமி பூஜையின் பலன்கள்.

வாஸ்து நேரம் பார்த்து பூமி பூஜை செய்வதன் மூலம் நாம் மேற்கொள்ளும் காரியம் தடையின்றி நடக்கும். அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் பெருகும். கட்டுமானப் பணிகள் சரியான நேரத்தில் முடியும். எந்தவொரு தொந்தரவும் இருக்காது. விவசாய நிலமாக இருந்தால் நல்ல விளைச்சல் மற்றும் நல்ல சாகுபடி கிட்டும். பூமி பூஜை செய்து கட்டும் வீட்டில் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும். வளமான மற்றும் செழிப்பான வாழ்க்கை வாழ முடியும்.

பூமி பூஜைக்கான விதிமுறைகள்

இந்த பூமி பூஜையை குடும்பத் தலைவர் செய்ய வேண்டும். அவரது மனைவியும் கலந்து கொள்ள வேண்டும். அதாவது இருவரும் சேர்ந்து சடங்குக்கு உட்கார  வேண்டும். முதலில் பூஜை செய்வதற்கான நாள் மற்றும் நேரத்தை ஜோதிடர் மூலம் குறித்துக் கொள்ள வேண்டும். பிறகு பூஜை விதிமுறை அறிந்த பூசாரியை நியமித்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் நிலத்தில் காணப்படும் குப்பை கூளங்களை அகற்ற வேண்டும். முள் செடிகள் இருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். குழி,  மற்றும் துளைகள் இருந்தால் அவற்றை மூடி சமநிலைப படுத்த வேண்டும்.

பூமி பூஜை செய்வதற்கு உகந்த தமிழ் மாதங்கள

சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம்.

வாஸ்து விழிப்பு நாள்: 

சித்திரை 10-ம் தேதி சூரியன் உதயமான நேரத்திலிருந்து 5 நாழிகைக்குப் பிறகும் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும்), வைகாசி 21- ம் தேதி 8 நாழிகைக்குப் பிறகும், ஆடி 11- ம்தேதி 2 நாழிகைக்குப் பிறகும், ஆவணி 6 – ம் தேதி 21 நாழிகைக்குப் பிறகும், ஐப்பசி 11- ம் தேதி 2 நாழிகைக்குப் பிறகும், கார்த்திகை 8- ம் தேதி 10 நாழிகைக்குப் பிறகும்,தை 12 – ம் தேதி 8 நாழிகைக்குப் பிறகும், மாசி 22 – ம் தேதி 8 நாழிகைக்குப் பிறகும் வரும் நேரமே வாஸ்து விழிப்பு நேரமாகும். 

இந்த நாட்களில் வாஸ்து பகவான் மூன்றே முக்கால் நாழிகை விழித்திருக்கின்றார். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். அதாவது ஒன்றரை மணி நேரம் வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார்.

இந்த ஒன்றரை மணி நேரத்தில் முதல் 18 நிமிடங்கள் காலைக் கடன்களை முடித்து குளிப்பார். அடுத்த 18 நிமிடங்கள் பூஜை செய்வார். அதற்கு அடுத்த 18 நிமிடங்கள் சாப்பிடுவார். பின்னர் 18 நிமிடங்கள் வெற்றிலை பாக்குப் போடுவார். கடைசி 18 நிமிடங்கள் ஆட்சி செய்வார். இந்த நேரத்தில் பூமி பூஜை போட்டு வீடு கட்டத் தொடங்கினால், வேலைகள் வெகு சீக்கிரம் முடியும். 

பூஜைக்குத் தேவையான  பொருட்கள்

1.சாமி படங்கள் ( விநாயகர் அவசியம் வேண்டும்.)

2.வெற்றிலை பாக்கு

3.மஞ்சள், குங்குமம், சந்தனம்

4.பழம், தேங்காய்

5.ஊதுவத்தி

6.கற்பூரம்

7.கங்கா ஜலம்

8.விளக்கு

9.திரி

10.நெய் அல்லது எண்ணெய்

11.தண்ணீர்

12.நவரத்தினங்கள்

13.அரிசி

14.தூபம்

15.சிகப்பு நூல்கண்டு

16.நாணயங்கள்

17.ஆரத்தி தட்டு

18.பஞ்ச தாது

19.பஞ்ச பாத்திரம்

20.மாவிலை

21.வாழை இலை

22.எலுமிச்சை

பூஜைக்கான இடம் தேர்வு செய்தல்

பூமி பூஜைக்கு உகந்த இடத்தைக் கண்டறிய வேண்டும். காலையில் குளித்த பின் அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். கங்காஜல் கொண்டு சுத்திகரிப்பு செய்யவேண்டும். கட்டுமான தளத்தின் வடகிழக்கு மூலையில் வெவ்வேறு தெய்வங்களை (வாஸ்து புருஷன்) குறிக்கும் 64-பகுதி வரைபடத்தை உருவாக்கவும்.

வாஸ்து திசை

பூஜையை ஏற்பாடு செய்பவர் கிழக்கு திசையை நோக்கியும், பூசாரி வடக்கு திசை நோக்கியும் அமர்ந்திருக்க வேண்டும். பூமி பூஜையை தகுதியான அர்ச்சகர் மட்டுமே செய்ய வேண்டும்.  பூஜைக்கு அனுபவம் வாய்ந்த பூசாரி அவசியம், இது அனைத்து வாஸ்து தோஷங்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அகற்ற உதவுகிறது.

விநாயகர் பூஜை

விநாயகப் பெருமான், எந்தவொரு பூஜையையும் அல்லது வேலையையும் தொடங்குவதற்கு முன் பரவலாக வழிபடப்படுகிறார், ஏனெனில் அவர் நல்ல தொடக்கத்தின் கடவுளாகவும், தடைகளை அகற்றுபவராகவும் கருதப்படுகிறார். குலதெய்வத்தை வழிபடுவது செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகிறது மற்றும் வீட்டைக் கட்டுவதில் எந்த தடையும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

கலச பூஜை

ஒரு கலசம் அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, அதன் மேல் மாவிலை அல்லது வெற்றிலையை தேங்காயுடன் வைக்க வேண்டும். லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக நாணயங்களும் வெற்றிலைகளும் கலசத்திற்குள் வைக்கப்படுகின்றன. வாஸ்து படி, கலசம் .பிரபஞ்சத்தை அடையாளப்படுத்துகிறது.

பூமி பூஜை

புனிதமான முஹுர்தத்தில், கணபதி பூஜை மற்றும் ஹோமம் உட்பட முக்கிய பூமி பூஜை சடங்குகள் நடத்தப்படுகிறது. பொதுவாக, பூஜையில் திசைகளின் கடவுள், திக்பாலகர்கள் நாகர்கள், பஞ்சபூதங்கள் வழிபாடு அடங்கும். மற்றும் குல தெய்வ வழிபாடு (குடும்ப தெய்வம்). சங்கல்பம், ஷட்கர்மா, பிரான் பிரதிஷ்டை மற்றும் மாங்க்லிக் திரவிய ஸ்தாபனம் போன்ற சடங்குகள் நடத்த வேண்டும். பூஜையின் போது, பூக்கள், அட்சதை (பச்சை அரிசி), குங்குமம், மஞ்சள், சந்தனம், தூபக் குச்சிகள், கலவா (புனித நூல்), பழங்கள், வெற்றிலை, பாக்கு, இனிப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தி வேத மந்திரங்கள்  ஓதி பூஜைகள் நடத்த வேண்டும். பூமி பூஜைக்கு வந்தவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பழங்கள் வழங்கப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து பலிதானம் அல்லது சிறப்புப் பிரசாதம், ஹலா கர்ஷானா அல்லது தளத்தை சமன் செய்தல் மற்றும் அனுகுரா-ரூபனா அல்லது விதைகளை விதைத்தல் போன்ற பிற சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. ஷிலான்யாஸம் அல்லது அடிக்கல் நாட்டுவது அடுத்த கட்டத்தில் செய்யப்படுகிறது. வாஸ்து படி, அடிக்கல் நாட்டு விழாவின் போது அந்த இடத்தில் நான்கு செங்கற்கள் போடப்படுகின்றன.