விருச்சிக ராசி அன்பர்களே! குடும்ப சூழலில் பதட்டமும் அசௌகரியமும் காணப்படும். இதற்கு புரிந்துணர்வின்மை காரணமாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் சுமுக உறவு இருக்க வாய்ப்பில்லை.
இந்த மாதம் முதல் பாதியில் நீங்கள் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். இலக்குகளை அமைத்துக் கொண்டு அதை நோக்கி முன்னேறுவீர்கள். உங்கள் நம்பிக்கை உங்கள் வெற்றிக்கு காரணமாக இருக்கும். நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். விடா முயற்சி, நேர்மறை எண்ணம், மற்றும் உங்கள் மன உறுதி இந்த மாதம் பளிச்சிடும். உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் சரி, தொழில் மற்றும் உத்தியோகத்திலும் சரி நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேறுவீர்கள். என்றாலும் சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரும். உங்கள் மன உறுதி மூலம் தடைகளை தவிடு பொடி ஆக்குவீர்கள். எனவே இந்த மாதம் உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். உங்களின் புதுமையான ஆற்றல், வாய்ப்புகளை கிரகிக்கும் திறன் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் உங்கள் எதிர்காலம் குறித்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிறு ஆரோக்கிய உபாதைகளை சந்திக்க நேரலாம்.
கணவன் மனைவி உறவு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். அந்நியோன்யமும் தாம்பத்திய சுகமும் இருக்கும். இந்த மாதம் நீங்கள் உங்கள் எண்ணங்கள், மற்றும் கருத்துகளை உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்வீர்கள். அதன் மூலம் கருத்து வேறுபாடுகள் மறையும். நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உறவின் ஆழமும் நெருக்கமும் அதிகரிக்கும். இந்த மாதம் நீங்கள் சிறு மகிழ்ச்சியையும் கொண்டாடுவீர்கள். என்றாலும் குடும்ப உறுப்பினர்களுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் எழலாம். என்றாலும் நேர்மையான அன்பு மற்றும் அரவணைப்பு மூலம் நீங்கள் பிரச்ச்சினைகளை தீர்த்து அமைதியை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உறவில் நல்லிணக்கம் காண வெளிப்படையாக பழகுவது நல்லது. இந்த மாதம் நீங்கள் உங்கள் துணையுடன் குறுகிய தூர பயணம் மேற்கொள்வீர்கள்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உங்கள் வரவு செலவுகளை பட்ஜெட் அமைத்து நிர்வகிப்பது நல்லது. ஏனெனில் இந்த மாதம் நீங்கள் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரலாம். பரிசுகள், உல்லாசப் பயணங்கள் அல்லது கூட்டாளிகளின் முயற்சிகளுக்கான ஆதரவு ஆகியவை காரணமாக செலவுகள் ஏற்படலாம். உங்கள் செலவுகளை நீங்கள் கண்காணிக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். நிலுவையில் இருக்கும் கடன்களை அடைத்து முடிக்க இது ஏற்ற தருணம். கடன் சார்ந்த வட்டியைக் குறைப்பதற்கான வழிவகை செய்துகொள்வீர்கள். இந்த மாத பிற்பகுதியில் நீங்கள் எதிர்பாராத பண வரவைக் காணலாம். அது பரம்பரை சொத்து, லாட்டரி அல்லது இலாபகரமான ஒப்பந்தங்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த நிதி ஆதாயங்கள் மூலம் உங்கள் சேமிப்பு உயரலாம்.இந்த மாதம் நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு நிதி ரீதியாக உதவி செய்வீர்கள். பொருளாதார ஸ்திரத்தன்மையை பராமரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
இந்த மாதம் உங்களின் உத்தியோக நிலையைப் பொறுத்தவரை மிதமான பலன்கள் கிட்டும். சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரும். என்றாலும் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் ஏற்படும் சவால்களை சந்திக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் சில பிரச்சினைகள் காரணமாக மோதல்களை சந்திக்க நேரலாம். கருத்து வேறுபாடுகள் எழலாம். புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலம் இந்த சூழலை நீங்கள் சமாளிக்கலாம். உங்களின் இயல்பான உறுதிப்பாடு மற்றும் புதிய சிந்தனை உங்களுக்கு கை கொடுக்கும். இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிபுணர்கள் அல்லது வழிகாட்டிகளின் ஆலோசனை பெற்று விடா முயற்சியுடன் செயல்பட்டு முன்னேற்றம் காணலாம். தகவமைப்பு மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் வெளிப்படும்.
இந்த மாதம் கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில் நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்வது, சரியான சிந்தனைகள், வணிக பேச்சு வார்த்தைகள் நடத்துவது வெற்றிகரமான முயற்சிக்கு அடித்தளமாக இருக்கும். தொழில் புரியும் இடத்தில் பணியாளர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டாலும் நீங்கள் உங்கள் தலைமைத்துவத் திறன் மூலம் அதனை சமாளிக்கலாம். வெளிப்படையாகப் பேசுவது, சமரச பேச்சு, திருப்திகரமான செயல்பாடு மற்றும் குழுவாகப் புரிந்துணர்வுடன் பணி புரிவது நீண்ட கால வெற்றிக்கு வழி வகுக்கும். இந்த மாதம் நிதி சவால்கள் எழலாம், ஆனாலும் பொருளாதார வளம் பிரகாசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடன் வழங்குபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் செயல்பாட்டு மூலதன நெருக்கடியை நிர்வகிப்பதற்கான ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கருத்தில் கொள்வது ஆகியவை இந்த மாதத்திற்கான ஆலோசனையாகும்.
உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : சூரியன் பூஜை
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக மற்றும் முதன்மை கவனம் செலுத்த வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, பதட்டமற்ற செயல்பாடு உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக தக்க வைக்க உதவும். எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் உடலை வலுப்படுத்த உடற்பயிற்சி, கால்சியம் நிறைந்த உணவு எடுத்துக் கொள்வது அவசியும். உங்கள் ரத்த அழுத்த அளவை பராமரிக்க வேண்டும். வழக்கமான மருத்துவ ஆலோசனை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேவை. பணியிட மன அழுத்தம் உங்கள் நல்வாழ்வில் தற்காலிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், உங்களின் மன வலிமை பிரகாசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒய்வு, சுய-கவனிப்பு மற்றும் அன்புக்குரியவர்களின் ஆதரவவு உங்கள் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை
மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில்வார்கள் என்றாலும் இந்த மாதம் தங்கள் முயற்சிகளில் சில சவால்களை சந்திக்க நேரலாம். ஒரு சில மாணவர்கள் தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்வார்கள். அதன் காரணமாக ஈகோ மற்றும் அதீத நம்பிக்கை இருக்கலாம். இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொள்ளும் திறனை தடுக்கலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள் விரும்பிய முடிவுகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வெளிநாட்டில் கல்வி பயில வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் தாங்கள் நினைக்கும் அல்லது விரும்பும் பல்கலைக் கழகங்களில் அனுமதி பெறுவதில் தற்காலிகத் தடைகள் இருக்கும். .
கல்வியில் சிறந்து விளங்க : விஷ்ணு பூஜை
சுப தேதிகள் : 8, 9, 10, 11, 14, 15, 16, 17, 18, 24, 25, 26, 27 & 28.
அசுப தேதிகள் : 1, 2, 3, 4, 5, 19 & 20.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025