Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
கன்னி பிப்ரவரி மாத ராசி பலன் 2024 | February Matha Kanni Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கன்னி பிப்ரவரி மாத ராசி பலன் 2024 | February Matha Kanni Rasi Palan 2024

Posted DateJanuary 20, 2024

கன்னி  பிப்ரவரி  மாத பொதுப்பலன்கள் 2024

உங்களின் படைப்பாற்றல் வெளிப்படும் மாதமாக இந்த மாதம் இருக்கும். கலைத் துறையை சார்ந்தவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறன் நன்கு வெளிப்படும். வழக்கத்தை விட அதிக முயற்சிகளை இந்த மாதம் நீங்கள் மேற்கொள்வீர்கள். எழுத்தாளர்கள், ஓவியம் வரைபவர்கள் இசையமைப்பாளர்கள் தங்கள் தனிப்பட்ட பாணியில் பிரகாசிப்பார்கள். உங்கள் பகுப்பாய்வுத் திறன் மூலம் நீங்கள் சிக்கல்களை தீர்த்து வைப்பீர்கள். உங்கள் முன்னேற்றத்தில் சில தடைகள் ஏற்படும் என்றாலும் அவைகளைத் தாண்டி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். புதுமையான சிந்தனை உங்கள் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும். நீங்கள் தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகள் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். கூடுதல் கவனம் எடுத்து அவர்களை பாதுகாக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் அவர்களால் சவால்களை சந்திப்பீர்கள். பொறுமையுடன் செயல்பட வேண்டும். உங்களின் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு தேவைப்படலாம்.  உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அஜீரணக் கோளாறு அல்லது பதட்டம் ஏற்படலாம்.. குறிப்பாக செரிமானம் அல்லது மன அழுத்தம் தொடர்பான சாத்தியமான உடல்நலப் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.  சுய பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உங்கள் மனம், உடல் மற்றும் ஆத்மாவை மேம்படுத்த நினைவில் கொள்ள வேண்டும்.

காதல் / குடும்ப உறவு :

காதலர்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கும் மாதமாக இருக்க வாய்ப்பில்லை. காதலில் சிக்கல்கள் அல்லது பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். உங்கள் உள்ளுணர்வின் வழி நடப்பதன் மூலம் நிலைமையை சமாளிக்கலாம். இளம் வயதினர் மனதில் காதல் அரும்பு மலரலாம். நீங்கள் உங்கள் துணையை  தற்செயலாக சந்திப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை குறையலாம். பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாத காரணத்தால் மனதில் கவலை எழலாம். விவேகமான சாதுரியமான அணுகுமுறை உதவிகரமாக இருக்கும். இந்த மாதிரி சூழ்நிலையில் நீங்கள் தைரியமாக செயல்பட வேண்டும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : ராகு பூஜை

நிதிநிலை :

பொருளாதார நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கும். திடீர் பணவரவை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஒரு சிலருக்கு லாட்டரி மூலம் பண வரவு இருக்கலாம். ஒரு சிலருக்கு இது வரை நிலுவையில் இருந்த பூர்வீக  சொத்துக்கள் கைக்கு வரலாம். என்றாலும் நீங்கள் பணத்தை கவனமாக நிர்வகிக்க வேண்டும். இந்த மாதம் நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள்.பங்குச் சந்தை மூலம் லாபம் மற்றும் ஆதாயங்களைக் காண்பீர்கள். என்றாலும் ஊக வணிகங்களில் எச்சரிக்கை தேவை. அதில் இறங்குவதற்கு முன் யோசித்து செயல்பட வேண்டும். சில அபாயங்களை நீங்கள் சந்திக்க நேரலாம். உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தாருக்கோ நீங்கள் மருத்துவ  செலவுகளை மேற்கொள்ள நேரலாம். அவை உங்கள் சக்திக்கு மீறிய செலவுகளாக இருக்கலாம். எனவே உங்கள் மற்ற செலவுகளை கண்காணியுங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் கடன் வாங்க நேரலாம். அவசியமான செலவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். காப்பீடு சார்ந்த செலவுகள் இருக்கலாம். வரவு செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது, நியாயமான சந்தை மதிப்பை உறுதி செய்தல் மற்றும் விவேகம் ஆகியவை எதிர்கால நிதி பிரச்சினைகளைத் தடுக்கலாம். இந்த மாதம் வாடகை செலுத்துவதில் பிரச்சினை ஏற்படலாம். எனவே சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதிசெய்து, உங்கள் வாடகை திறனை பராமரிக்கவும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை

உத்தியோகம் :

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இது வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். நீங்கள் உங்கள் உத்தியோகத்தில். தொழிலில் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில்/ தொழில் புரியும் இடத்தில்  உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும். அதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் மேன்மை பெறவும் புதிய வாய்ப்புகளைப் பெறவும் நீங்கள் உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் கடன் வாங்க நேரலாம். தங்கள் திறனை உத்தேசித்து அதற்கேற்றார் போல  செயல்படுவது நல்லது. நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்களின் அர்ப்பணிப்பு உணர்வு பிறரின் கவனத்திற்கு வரலாம். மேலதிகாரிகள் உதவி மூலம் பணியில் நீங்கள்  எதிர்கொள்ளும்  சவால்களை சமாளிப்பீர்கள். உங்களின் இலக்கை அடைய அவர் உதவிகரமாக இருப்பார். உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் என்ற உங்களின் எண்ணம் அவர் மூலம் நிறைவேறும்.  ஒவ்வொரு சிறு-வெற்றியையும் கொண்டாடுவது உங்களுக்கு உந்துதலை ஏற்படுத்தும்.  முயற்சிகளுக்கு தகுதியான அங்கீகாரத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். தொழில் நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன், அந்தந்த துறைகளில் உள்ள வல்லுநர்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்த வேண்டும்.

தொழில் :

தொழில் புரியும் கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சிறந்த முடிவுகளை எடுப்பதில் வழிகாட்டிகள் / குருக்களின் ஆலோசனைகள் தொடர்ந்து உதவியாக இருக்கும். அரசாங்க அதிகாரிகளுடனான உறவு மிதமானதாக இருக்கும். மாதத்தின் ஆரம்ப பாதியில் தகவல் தொடர்பு சாதனங்களில் மேம்படுத்தல்கள் / மாற்றங்கள் இருக்கலாம். தொழில் மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் தங்கள் தொழிலில் மாற்றம் காணலாம். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகள் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் தீரும்.  நீண்ட கால திட்டங்கள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அவை எதிர்காலத்தில் ஆதாயங்களையும் பாராட்டையும் அளிக்கும். முக்கியமான வணிக ஒப்பந்தங்கள்  முடிவடைவதை நீங்கள்  காணலாம். இந்த மாதத்தின் ஆரம்ப காலத்தில் முதலீட்டு முறையை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : புதன் பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் நீங்கள் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டியிருக்கும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. என்றாலும் உங்கள் உடல் நிலை மற்றும் மன நிலை இரண்டிலும் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். மேலும் திடீர் காய்ச்சல் அல்லது வீக்கம் ஏற்பட்டால் உதவி பெற தயங்க வேண்டாம்.சுவர் இருந்தால் தான் சித்திர வரைய முடியும். எனவே உறுதியான ஆரோக்கியம் இருந்தாலும் அதனை தக்க வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த மாதம் நீங்கள் ஆரோக்கியத்தில் எடுக்கும் முயற்சிகள் ஆண்டு முழுவதும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : கேது பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்களின் தனித்தன்மை வெளிப்படலாம். ஒரு சில மாணவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துக் கொள்வார்கள். ஒருசில மாணவர்கள் சுதந்திரமாக செயல்படுவார்கள். பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.  கல்வியில் சிறந்து விளங்க உறுதியுடனும் விடா முயற்சியுடனும் செயல்பட வேண்டும். பெற்றோர்கள் உங்களுக்கு தேவைப்படும் ஒத்துழைப்பு அளிப்பார்கள். மாணவர்கள் தங்கள் எதிர்கால நலன் கருதி  முயற்சி மேற்கொள்வார்கள். வெளிநாடு சென்று படிக்க வேண்டும். என்று கனவுகளைக் கொண்டவர்கள், இந்த மாதம் தங்கள் எண்ணம் நிறைவேறக் காண்பார்கள.

கல்வியில் சிறந்து விளங்க :தட்சிணாமூர்த்தி பூஜை

சுப தேதிகள் : 4, 5, 6, 7, 10, 11, 12, 13, 19, 20, 21, 22 & 23.

அசுப தேதிகள் : 14, 15, 24, 25, 26, 27 & 28.