Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
துலாம் டிசம்பர் மாத ராசி பலன் 2023 | December Matha Thulam Rasi Palan 2023
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

துலாம் டிசம்பர் மாத ராசி பலன் 2023 | December Matha Thulam Rasi Palan 2023

Posted DateNovember 27, 2023

துலாம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2023

இந்த மாதம் பிறர் மனதில்  உங்கள் மீதான நல்ல அபிப்பிராயத்தை நல்ல விதமாக தக்க வைத்துக் கொள்ள கவனம் செலுத்துவீர்கள். மேலும் உங்கள் ஆரோக்கியம் குறித்த கவனமும் உங்களிடம் இருக்கும். இந்த மாதம் உங்கள் எதிரிகளை நீங்கள் எளிதாக வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தில் அதிக பொறுப்புகள் கூடும். உங்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். அவர்களுடன் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதம் நீங்கள் உங்கள் வாழ்வில் சில முக்கிய மாற்றங்களை சந்திப்பீர்கள். அந்த மாற்றம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கலாம். பணியிடத்தில் உங்கள் பொறுப்புகள் கூடும். இந்த மாதம் நீங்கள் தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். அதற்கு தியானம் மற்றும் உங்கள் ஆன்மீக ஈடுபாடு உதவிகரமாக இருக்கலாம்.  ரியல் எஸ்டேட் மூலம் லாபம் கிடைக்கலாம். இந்த மாதம் உங்கள் செயல்களில் தெளிவு உண்டாகும். இந்த மாதம் முதல் தொழில் வளர்ச்சி ஏற்படும். சொந்த வாழ்க்கையில் பேசுவதற்கு முன், ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.

காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் உறவுநிளையைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். என்றாலும் மாத ஆரம்பத்தில் உங்கள் குடும்பத்தாருடன் வாக்குவாதங்கள் இருக்கலாம். இது மாத பிறபகுதியில் சீராகாலாம். மாத இறுதியில் உறவில் முன்னேற்றம் இருக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளலாம். இது உங்கள் நெருக்கத்தை பிணைப்பை வலுப்படுத்தும். உங்கள்  வாழ்க்கைத் துணையின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. அவர்களின் வழிகாட்டுதல் மூலம் உங்களுக்கு நன்மை கூடும். ஆனால் உங்கள் மனதில் ஈகோ மனப்பான்மை தலை தூக்க வாய்ப்புள்ளது. அதனை தவிர்ப்பது நல்லது. இளம் வயது துலாம் ராசி அன்பர்களின் மனதில் காதல் அரும்பு மலரலாம். காதலிக்கும் அன்பர்களின் உறவுப் பிணைப்பு சிறப்பாக இருக்கும். காதலர்கள் இந்த மாதம் சிறு தூர பயணத்திற்கு செல்ல விரும்பலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயம் ஆக வாய்ப்புள்ளது.

திருமண உறவில் நல்லிணக்கம் காண   :அங்காரகன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் பொருளாதாரநிலை சிறப்பாகவும் ஏற்றமுடனும் காணப்படும். பூர்வீக சொத்துக்களைப் பெறுவதில் சில சிக்கல்கள் இருக்கலாம். அவை ஆவணங்கள் சார்ந்ததாக இருக்கலாம். எனவே அதைப் பெறுவதில் சில தடைகளும் தாமதங்களையும் நீங்கள்  சந்திக்க நேரலாம். மறைமுக ஆதாரங்கள் மூலம் நீங்கள் பன வரவு காண்பீர்கள். அதே சமயத்தில் பங்கு சந்தை மற்றும் ஊக வணிகம் மூலமும் நீங்கள் லாபம் மற்றும் ஆதாயங்களைக் காணலாம். அதற்கு அதிர்ஷ்டம் மற்றும் இறைஅருள் உங்கள் பக்கம் இருக்கும். உத்தியோகம் அல்லது தொழில் மூலம் எதிர்பாராத பண வரவு வரலாம். நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திற்காகவும் செலவுகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் இருக்கலாம். மத மற்றும் ஆன்மீக விஷயங்களுக்காக செலவிடலாம். சொந்தக்காரர்கள் உறவினர்கள் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் வகையில் செலவுகள் இருக்கலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை

உத்தியோகம் :

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமான காலக்கட்டமாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். உங்கள் கடின முயற்சிக்கு பலன் கிட்டும். பணியிடத்தில் உங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள். இதனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பை நீங்கள் இழக்க நேரலாம். அவர்களுடன் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் பழகுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுவது நல்லது.   நீங்கள் மதி நுட்பத்துடன் செயல்படுவீர்கள். பணியில் ஏற்படும் பிரச்சினைகளை எளிதாக தீர்த்து வைப்பீர்கள். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த உங்கள் கடின முயற்சிக்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். பெண் பணியாளர்கள் பணிகளை நிறைவேற்றுவதில் உங்களுக்கு  சாதகமாக இருப்பார்கள்.   வெளிநாட்டில் வேலை செய்ய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.  பங்குச் சந்தை மூலம் லாபமும் எதிர்பார்க்கப்படுகிறது.  பணியிடத்தில் உங்களுக்கு கூடுதல் பணிகள் வழங்கப்படலாம். அதிக பணிகள் காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம். என்றாலும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு மூலம் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். நல்ல தலைமைத்துவ திறன்கள் மூலம், உங்கள் இலக்குகளை அடைவீர்கள். இந்த மாதம் பணியிடத்தில் நிதி தொடர்பான ஆவணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

தொழில் :

தொழிலைப் பொறுத்தவரை ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழிலில் நீங்கள் மிதமான காலக்கட்டமாக இந்த மாதம் இருக்கக் காண்பீர்கள். கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தொழிலில் திடீர் ஆதாயங்கள் கிட்டலாம். ரியல் எஸ்டேட், பாதுகாப்பு, உற்பத்தி, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு வருமானம் கூடும். புதிய அரசாங்க விதிமுறைகள் மூலமாகவும்  ஆதாயம் பெறலாம். தொழிலில் புதிய முதலீடுகள் குறித்து உங்கள் மனதில் சந்தேகம் எழலாம். நிபுணர்களின் ஆலோசனை பெற்று அதன் படி நடப்பது நல்லது. இம்மாதத்தில் வியாபாரத்தின் இமேஜை மீட்டெடுப்பதில் உங்களது முக்கிய கவனம் இருக்கும். லாபமும் அதிக அளவில் குவியும். தொழிலில் விரிவாக்கத்தை நீங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் மூலம் பண வரவு ஸ்திரமாக இருக்கும்.  தொழிலில் காணப்படும் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படும், இதனால் நீங்கள் வியாபாரத்தின் முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தலாம். வழக்கு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

தொழில் வல்லுனர்கள் :

துலாம் ராசிக்காரர்களுக்கு தங்கள் தொழில் விஷயங்களைக் கையாள்வதில் அதிக சிரமம் இருக்காது. தகவல் தொடர்பு மற்றும் அவர்கள் பேசும் வார்த்தைகளில் மட்டுமே சிக்கல் இருக்கும். மேலாளர் பதவியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் கிடைக்கும். பணியில் சாதுரியமான அணுகுமுறை அவர்களுக்கு பல நன்மைகளை அளிக்கலாம். பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் ஈகோ மோதல்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் பெண் பணியாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் நன்மை உண்டாகும். டிசம்பர் மாதத்தில் நிதி வரவு நன்றாக இருக்கும். கூட்டாண்மை/கூட்டுறவுகள் இந்த மாத இறுதியில் நல்ல வளர்ச்சியையும் அங்கீகாரத்தையும் கொண்டு வரலாம்.  சக ஊழியர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறலாம். முக்கியமான ஆவணங்களைக் கையாளும் வல்லுநர்கள் இந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மை பெற :புதன் பூஜை

ஆரோக்கியம் :

உங்களின் ஆரோக்கியம் இந்த மாதம் ஓரளவு சீராக இருக்கும். முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கலாம். தூக்கமின்மை தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். முறையான தூக்கம் மேற்கொள்வதன் மூலம் அதனை தவிர்க்கலாம். தொண்டையில் சில பிரச்சனைகளும் இருக்கலாம். குடும்ப பிரச்சினைகள் காரணமாக மன அழுத்தம் மற்றும் சில பதட்டங்கள் உங்களுக்கு இருக்கலாம். மேலும் சில துலாம் ராசிக்காரர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கலாம். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை முன்னேற்றம் அடையும். உங்களில் சிலர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மனச்சோர்வுக் காலங்களிலிருந்து படிப்படியாக மீண்டு வரலாம். இந்த மாதத்தில் கண்கள் மற்றும் பற்கள் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட   : அங்காரகன் பூஜை

மாணவர்கள்:

இந்த மாதம் மாணவர்களுக்கு  சராசரி பலன்கள் கிட்டும். மாணவர்கள்  கடின முயற்சிகளை மேற்கொள்வார்கள். கிரக நிலைகளும் அதற்கு சாதகமாக உள்ளது. படிப்பு மற்றும் தேர்வுகளில் சிறந்து விளங்க, நல்ல தகவல்தொடர்பு, கவனம் அதிகரிக்க ஹயக்ரீவரை வணங்கி அவரது அருளாசிகளைப் பெறுவது நல்லது முறையான தூக்கம் மேற்கொள்வதன் மூலம் தெளிவான சிந்தனை இருக்கும். அதன் மூலம் படிப்பில் கவனம் செலுத்த ஏதுவாக இருக்கும். உயர்கல்விக்கு வெளிநாடு சென்று வாய்ப்புகளைப் பெற விரும்புபவர்கள் தங்கள் ஆசை நிறைவேறுவதைக் காணலாம். இந்த காலகட்டத்தில்  அறிவும் ஞானமும் கூடும். பொழுதுபோக்கின் காரணமாக ஏற்படும் கவனச்சிதறல்கள் காரணமாக சில சமயங்களில் கல்வியில் கவனம் இல்லாமல் இருக்கலாம்.

கல்வியில் சிறந்து விளங்க :ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள் : 1, 2, 3, 4, 5, 13, 14, 15, 16, 17, 20, 21, 22, 23, 29, 30 & 31.

அசுப தேதிகள் : 6, 7, 8, 9, 10, 24 & 25.