Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கன்னி டிசம்பர் மாத ராசி பலன் 2023 | December Matha Kanni Rasi Palan 2023
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கன்னி டிசம்பர் மாத ராசி பலன் 2023 | December Matha Kanni Rasi Palan 2023

Posted DateNovember 27, 2023

கன்னி டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2023

கன்னி ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் ஒரு மாற்றத்தை அனுபவிக்க முடியும். வீட்டிலும் உடன்பிறந்தவர்களாலும் கவலையும் ஏமாற்றமும் இருக்கலாம்.  உங்கள் முதன்மை கவனம் புதிய முயற்சிகள் மற்றும் தகவல்தொடர்புகளில் இருக்கலாம். உங்களில் சிலர் சிறிது தூர பயணத்தை மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மற்ற உறவினர்களுக்காக நீங்கள் நேரம் ஒதுக்கலாம். சில நேரங்களில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகளால், முக்கியமான திருப்பங்கள் ஏற்படலாம்.  மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். இது தவிர, தொழில் மற்றும் ஆசிரியர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இந்த  மாதத்தில், உடன்பிறந்தவர்களுடனும், தாயாருடனும் ஒட்டுமொத்த உறவும் நன்றாக இருக்காது.

காதல் / குடும்ப உறவு :

மாத ஆரம்பமே பிரச்சினை நிறைந்ததாக இருக்கும். கணவன் மனைவி உறவில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் மனதில் தோன்றும் ஈகோ பிரச்சனைகள் மன அமைதிக்கு இடையூறுகளை ஏற்படுத்தும். தவறான புரிதல்கள் இருந்தாலும் அதனை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள முயலுங்கள. உங்களில் சிலருக்கு மன உளைச்சல் ஏற்படலாம். உறவு விஷயங்களில் முடிவெடுக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவையும் ஏடுக்காதீர்கள். இந்த மாதத்தில் ஒட்டுமொத்த உறவு அம்சங்கள் மிதமானதாக இருக்கும். தனிமை உணர்வு சிலரால் உணரப்படும். சில சந்தர்ப்பங்களில், அன்புக்குரியவர்களே உங்கள் முதுகில் குத்தலாம், இது உங்களுக்கு ஆறாத ரணத்தை உருவாக்கும். மனைவி மற்றும் அன்புக்குரியவர்களுடன் சிறு பயணங்கள் இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணை பின்னர் தங்கள் தவறுகளை உணரலாம், மேலும் அமைதியான உறவை மீட்டெடுக்கலாம்.  இந்த மாதத்தின் பிற்பகுதியில் மனைவியுடன் உணர்ச்சி வசப்பட நேரும். சங்கடமான சூழ்நிலைகள் இருக்கலாம், இந்த விஷயத்தில் வாழ்க்கைத் துணை முக்கிய பங்கு வகிக்கலாம். உறவுகளிலும் குடும்ப வாழ்க்கையிலும் அன்பான மனப்பான்மை கையாளப்பட வேண்டும்

.திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். உங்களால் அதிக அளவு பணத்தை சேமிக்க இயலாமல் போகலாம். வாங்கிய கடனை படிப்படியாக அடைத்து முடிப்பீர்கள்.சொத்துக்களை விற்று உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.  அதில் ஆவணம் சார்ந்த சில பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரும். என்றாலும்  இந்த விவகாரம் இம்மாத இறுதியில் தீர்க்கப்படும். தாய் மற்றும் உடன்பிறந்தவர்களின் உடல் நலனுக்காக செலவுகள் கூடும். இந்த மாதத்தில் வழக்கத்தை விட  வருமானம் அதிக்மாக வரும்.. பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் ஊகங்கள் மூலம் திடீர் ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. குறுகிய பயணங்கள், சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கும் செலவுகள் கூடும். ஆவணம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.  நிதி விஷயங்களில் போதுமான திட்டமிடல் தேவை. குலதெய்வத்தின் அருளால்/ஆசிர்வாதத்தால் நிதி வளமும் எதிர்பார்க்கப்படுகிறது. பூர்வீக சொத்துக்களைப் பிரிப்பதில் சில சிக்கல்கள் இருக்கலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை

உத்தியோகம் :

உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். என்றாலும் பணியிடத்தில் உங்கள் பேச்சில் கவனம் தேவை. பணிச்சூழலில் சூடான வாக்குவாதங்களைக் காணலாம்.பிறரின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் வாய்ப்பு உள்ளது.  அலுவலகத்தில் பெண் பணியாளர்கள் உங்களுக்கு அனுகூலமாகச் செயல்படுவார்கள். உங்களில் ஒரு சிலர் பனி நிமித்தமாக குறுகிய தூரப் பயணம் மேற்கொள்ள நேரலாம். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தேடும் கன்னி ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் எண்ணங்கள் ஈடேறக் காண்பார்கள். உத்தியோகத்தின் மூலம் நல்ல பண வரவு காணப்படும். உங்களுக்கு அளிக்கப்படும் பணிகளை முடித்து அளிக்க நீங்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் கூடுதல் வருமானம் பெற வழிகாட்டிகள் உதவலாம். பணிச்சூழலில் எதிரிகள் மீது வெற்றியும் எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த தொழிலில் நல்ல தைரியத்துடன் செயல்படுவார்கள். கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான முயற்சிகள் பலனளிக்கும். சிலருக்கு உத்தியோகபூர்வ  மாற்றங்கள் மற்றும் இடமாற்றம் ஏற்படலாம்.

தொழில் :

இந்த மாதம் தொழிலில் ரிஸ்க் எடுக்க வேண்டிய காலக்கட்டமாக இருக்கும். தொழில் சிறப்பாக நடக்கும் என்றாலும் நிபுணர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. நீங்கள் உங்கள் தொழிலை மேம்படுத்த சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். அரசு அதிகாரிகள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். அவர்களுடன் சுமுக உறவு இருக்கும். தொழில்நுட்பக் கோளாறுகளை நீங்கள் தொழிலில் சந்திக்க நேரலாம். தொழில் மூலம் வருமானம் சிறப்பாக இருக்கும். கடன் சுமை ஒரளவு குறையவும் வாய்ப்புள்ளது. தொழிலில் இந்த மாதம் போட்டியாளர்களை எளிதில் வெல்வீர்கள். வியாபாரத்தில் கூட்டாளர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்யக்கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் தற்காலிக தாமதங்களை சந்திக்கலாம்.  செலவினங்கள் பொதுவாக நீண்ட கால முதலீடுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

தொழில் வல்லுனர்கள் :

இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும் என்றாலும். தொழிலில் நீங்கள் சில தடைகளை சந்திக்க நேரலாம். வாடிக்கையாளர்கள் மற்றும் சக தொழிலாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது.இந்த மாதம் நீங்கள் புத்தி சாதுரியத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். சமயோசித புத்தியயை பயன்படுத்துவதன் மூலம் தொழிலில் நீங்கள் வெற்றி காண இயலும். தொழில் புரியும் இடத்தில் உங்கள் தலைமைப்பண்பு வெளிப்படும் தருணமாக இந்த மாதம் இருக்கும். ஈகோ மனப்பான்மையைக் கைவிடுவதன் மூலம் தொழிலில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். உங்கள் தகவல் தொடர்பில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தவறான அல்லது குறைபாடான தகவல் தொடர்பு காரணமாக இழப்புகள் ஏற்படலாம். இந்த காலகட்டம் சொந்த நிறுவனத்திற்குள் எதிரிகளை அடையாளம் காண உதவும். கன்னி ராசிக்காரர்கள் சிலருக்கு, முதலீடுகளின் மதிப்பு இழப்பு/குறைப்புக்கு உள்ளாகலாம். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் மேம்பட : புதன் பூஜை

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியம் திடீர் என்று பாதிக்கலாம்.  உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திற்கு கண்காணிப்பு தேவைப்படலாம். மனம் பலவீனமாக இருக்கும் போது நீங்கள் உணர்ச்சி வசப்பட நேரலாம். இந்த மாதத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். மேலும் சரியான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்தகுதியை பராமரிப்பதன் மூலம் அதை சமாளிக்கலாம். கேதுவின் சஞ்சாரம் மன அழுத்தத்தின் காரணமாக உங்கள் உடல் எடையை நிச்சயமாகக் குறைக்கும், மேலும் இது மற்ற ஆரோக்கிய விஷயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். யோகா மற்றும் தியானம் உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை சமாளிக்க சிறந்தது. உங்களுக்கும், மனைவிக்கும், தாய்க்கும் மருத்துவமனை செலவுகள் இருக்கலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : கேது பூஜை  

மாணவர்கள் :

மாணவர்களுக்கு இது கலவையான காலமாக இருக்கும். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மனம் லயிப்பதன் காரணமாக கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. பரீட்சை முடிவுகள் குறித்த பதட்டம் இருக்கலாம். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம்  சிறப்பாக தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெறுவார்கள்.. ஆரோக்கியம் தொடர்பான தடைகளும் இருக்கலாம். மாணவர்களின் தன்னம்பிக்கை கூடும். மாணவர்கள் தங்கள் தகவல்தொடர்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளிலும், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களிலும்  கல்வி பயில வேண்டும் என்னும் நாட்டம் நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவு இல்லாமல் தேங்கி நிற்கும். சுருக்கமாக, சில எதிர்பாராத தொழில்நுட்ப தாமதங்கள் அல்லது தவறான தகவல்தொடர்பு காரணமாக தாமதங்கள் ஏற்பட்ட பிறகு இந்த விஷயம் முடிவு செய்யப்படும். மாணவர்கள் கற்றலுக்கு உகந்த சூழல் இல்லாததால், கருத்துகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : முருகன் பூஜை

சுப தேதிகள் : 1, 2, 3, 11, 12, 13, 14, 15, 18, 19, 20, 21, 26, 27, 28, 29 & 30.

அசுப தேதிகள் : 4, 5, 6, 7, 8, 22, 23 & 31.