Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க பைரவர் வழிபாடு | Kodutha panam thirumba kidaika bairavar valipadu
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க பைரவர் வழிபாடு.

Posted DateNovember 9, 2023

கடன் பட்டார் நெஞ்சம் கலங்கினார் போல என்று கூறுவார்கள். கடன் வாங்கியவர்கள் தான் கலங்குவார்கள் என்றில்லை கடன் கொடுத்தவர்களும் சில சமயங்களில் கலங்க வேண்டி இருக்கும். ஏனெனில் கொடுத்த பணத்தை வாங்கியவர்கள் சரியான நேரத்தில் அல்லது கொடுத்து விடுகிறேன் என்று கூறிய நேரத்தில் கொடுக்க இயலாமல் போகும் போது இருவருக்கும் இடையில் சண்டை அல்லது பிரச்சினை எழுகிறது. ஒரு சிலர் நகையைக்  கூட கேட்டு வாங்கிக் கொண்டு போவார்கள். மிகவும் நெருக்கமானவர்கள் எனும் போது வேறு வழியின்றி சிலர் தங்கள் நகையை கூட இரவலாக கொடுத்து உதவுவது உண்டு. ஆனால் அது சரியான நேரத்தில் திரும்ப வந்து விட்டால் பிரச்சினை இல்லை அவ்வாறு வராத போது தான் பிரச்சினை ஏற்படுகிறது.

பணம், பொருள், சொத்து பிறருக்கு கொடுத்து அது திரும்ப வராமல் இருக்கலாம். அவசரத்திற்கு என்று உதவப் போய் அதுவே நமக்கு உபத்திரவமாக போய்விடுவதும் உண்டு. நாம் ஒருவரை நம்பி பணத்தை அளிக்கிறோம்.அல்லது நகையை அளிக்கிறோம். அதனை திரும்ப கேட்கும் போது சில சமயங்களில் பகை ஏற்படுகிறது. அவ்வாறு பகை ஏற்படாமல் கொடுத்த பணம் அல்லது நகையை திரும்பப் பெற எளிய பரிகாரம் பற்றி இந்தப் பதிவில் காண்போம். இந்த பரிகாரம் மூலம் .யாரையும் துன்பப்படுத்தாமல், யாரையும் காயப் படுத்தாமல், இருவருக்கும் பகை இல்லாமல் நாம் கொடுத்த பணம், பொருள், சொத்து அல்லது நகையை திரும்பப் பெறலாம்.

கொடுத்த கடன் மற்றும் இழந்த பொருட்களை மீட்பதற்கு காலபைரவர் பெரிதும் உதவி செய்கிறார். காலத்தின் கடவுளாக கால பைரவர் விளங்குகிறார். காலத்தை ஆளக்கூடியவர் அவர். கால மேலாண்மையில் மேம்பட இவரை வணங்குவது சிறப்பு.  குறித்த காலத்திற்குள் குறித்த பணி முடிய இவரை வணங்கலாம். பணம் அல்லது நகை வாங்கிய நபர் குறித்த காலத்தில் நாம் கேட்காமலேயே அவர்களாகவே திருப்பி அளிக்க இந்த பைரவர் வழிபாடு உதவும். அவர்களிடம் பகையும் ஏற்படாமல் இருக்கும்.

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை தான் செய்ய வேண்டும். தொடர்ந்து 6 சனிக்கிழமைகள் கால பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் கேட்காமலேயே நம்மிடம் கடன் வாங்கியவர்கள் நம்மை தேடி வந்து வாங்கிய பொருள்/ பணம்/ சொத்து/ நகை திரும்ப தருவார்கள்.  

சனிக்கிழமை அன்று அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்லுங்கள். அங்கு கால பைரவர் சந்நிதி இருக்கும். கால பைரவருக்கு முன்பாக 6 அகல் விளக்குகளை வைக்க வேண்டும். இந்த அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட வேண்டும். பிறகு அந்த விளக்கிற்கு முன்பாக வெற்றிலையை வைக்க வேண்டும். அந்த வெற்றிலையின் நடுவில் மஞ்சளை வைக்க வேண்டும்.பிறகு மஞ்சளுக்கு மேல் கொட்டை பாக்கை வைக்க வேண்டும். கொட்டை பாக்கிற்கு மேல் தாமரை மலரின் காம்பை எடுத்துவிட்டு வைக்க வேண்டும். அதாவது வெற்றிலை அதற்கு மேல் மஞ்சள் அதற்கு மேல் பாக்கு அதற்கு மேல் தாமரை பூ இந்த வகையில் வைக்க வேண்டும். தாமரைப்பூ வெள்ளை அல்லது ரோஸ் போன்ற எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒவ்வொரு விளக்கிற்கு முன்பாகவும் இவ்வாறு வைக்க வேண்டும் அதாவது ஆறு விளக்குகளுக்கு முன்பாக ஆறு வெற்றிலைகள் மஞ்சள் கொட்டை பாக்கு ஆறு தாமரை பூ என்று வைக்க வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றிய பிறகு நமக்கு யார் பணமோ நகையோ தர வேண்டுமோ அவர்களின் பெயரை மனதிற்குள் நினைத்து அவர்கள் விரைவிலேயே என்னிடம் வாங்கிய கடனை திருப்பி தர வேண்டும் என்று மனதார கால பைரவரை வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் நபர்களையும் கொடுக்க வைப்பார் கால பைரவர். மேலும் ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தவர்கள் மனதிலும் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி நம்முடைய பணத்தை நம்மிடம் திரும்பக் கொண்டு காலபைரவரை முழுமையாக நம்பி சனிக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை நாம் மேற்கொண்டு கொடுத்த பணத்தையும் நகையையும் திரும்பப் பெறுவோம்.