Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
ராகு கேது தோஷத்தை சரி செய்ய எளிமையான பரிகாரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ராகு கேது தோஷத்தை சரி செய்ய எளிமையான பரிகாரம்

Posted DateNovember 9, 2023

ராகு கேது தோஷத்தை நாக தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்று கூறுவார்கள். மனிதன் ஒளியில் இருக்கப் பிறந்தவன். இருளில் இருந்தால் அவனால் சிறப்பாக  செயல்பட முடியாது. தன்னைச்  சுற்றி ஒளி இருக்கும் போது மனிதன் பிரகாசமாக இருக்கிறான். சிறப்பாக செயல்படுகிறான். இருள் சூழும் போது அவனது ஆற்றல் குறைந்து விடுகிறது. ராகு கேது கிரகங்கள் நிழல் கிரகங்கள் அல்லது இருள் கிரகங்கள் அல்லது சாயா கிரகங்கள் என்று கூறுவார்கள்.  லக்னத்தில்,குடும்பத்தைக் குறிக்கும் இரண்டாம் பாவத்தில், அல்லது கணவன் மனைவியைக்  குறிக்கும் ஏழாம் பாவத்தில் அல்லது எட்டாம் பாவத்தில் ராகு கேது இருந்தால் ராகு தோஷம் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். இந்த இடங்கள் நிழல் கிரகத்தால் பாதிக்கப்படுவதால் தோஷம் ஆகிறது. ஒரு சிலரின் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்கும். அதாவது ராகு கேது கிரகங்களுக்கு இடையில் மற்ற கிரகங்கள் அடைபடுவது.

ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தில் இந்த தோஷங்கள் இருக்கும் போது வாழ்க்கையின் சீரான ஓட்டம் பாதிப்பு அடைகிறது. திருமணத்தடை, திருமணத்தில் தாமதங்கள், காரியத் தடை, படிப்பில் தடை, வேலை மற்றும் உறவுகளில் பிரச்சினை போன்றவற்றை சந்திக்க நேரலாம்.

இந்த இரண்டு கிரகங்கள்- ராகு மற்றும் கேது நமது வாழ்க்கையை இயக்குகின்றன.எனவே பரிகாரங்களில் மிகவும் முக்கியமானது ராகு கேது தோஷ பரிகாரம் ஆகும். மேலும் ராகு கேது பெயர்ச்சியால் ஏற்படும் தோஷத்தை சரி செய்ய ராகு கேது பெயர்ச்சி ஏற்படும் அந்த நேரத்தில் பரிகார பூஜைகள் செய்து கொள்வது உத்தமம்.பொதுவாக ராகு கேது தோஷம் இருந்தால் காலஹஸ்தி கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யச் சொல்வார்கள். முடிந்தவர்கள் அங்கு சென்று பரிகாரம் செய்யலாம். வேறு சில எளிய பரிகாரங்களும் நமது இருப்பிடத்திரு அருகாமையிலேயே செய்யலாம். அதனைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

அம்மன் கோவில் அல்லது புற்றுக் கோவிலில் இரண்டு நாகங்கள் பின்னிப் பிணைந்து இருக்கும் நாகர் சிலை இருக்கும். இந்த நாகர் சிலைக்கு ஐந்து நாட்கள் அபிஷேகம் செய்து மூன்று முறை சுற்றி வர உங்கள் தோஷங்கள் அகலும்.

இதற்கு தேவையான பொருட்கள்- பசும்பால். மஞ்சள் தூள், அருகம்புல், மஞ்சள் வஸ்திரம்

செய்ய வேண்டிய நாள் திங்கள் முதல் வெள்ளி வரை

நல்ல பசும்பாலாக வாங்கிக் கொள்ளுங்கள். அதில் சிறிது மஞ்சள் தூளை போடுங்கள். அருகம்புல் சிறிது அதில் போட்டுக்  கொள்ளுங்கள். கோவிலுக்கு சென்று நீங்களே இந்த பாலை அபிஷேகம் செய்யலாம். ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு முன் நாகர் சிலைக்கு நீர் ஊற்றி தூய்மை செய்து அதற்கு வாலில் இருந்து தலை வரை மஞ்சள் பூசுங்கள். பிறகு மஞ்சள் தூள் மற்றும் அருகம்புல் இட்ட பாலைக் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள். அபிஷேகம் முடிந்த உடன், மஞ்சள் குங்குமம், அட்சதை மற்றும்  மலர் சாற்றுங்கள். மஞ்சள் நிற வஸ்திரத்தை நாக தேவதைக்கு சாற்றுங்கள். பூஜை முடிந்த பின் மூன்று முறை நாக தேவதையை சுற்றி வாருங்கள்.

இந்த பரிகாரத்தை நபிக்கையுடன் ஆண்களும் பெண்களும் செய்யலாம். யாருக்கு தோஷம் உள்ளதோ அவர்களே செய்வது நல்லது. முடியாத பட்சத்தில் அவர்களின் ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் அல்லது தாய் தந்தையர்கள் அவர்களின் சார்பாக செய்யலாம். அவ்வாறு செய்யும் போது அவர்களின் நட்சத்திரம், ராசி கோத்திரம் பெயர் கூறி அவர்களின் சார்பாக செய்யலாம்.

இப்படி செய்யும் போது உங்களுக்கு இந்த தோஷத்தின் தாக்கமானது பெருமளவு குறைய வாய்ப்புகள் ஏற்படும்.

பால் ஊற்றும் போது

ஓம் ஸ்ரீம் நாக தேவதா நாக தோஷ நிவர்த்தி ஸ்வாஹா

என்ற மந்திரத்தை கூறிக் கொண்டே அபிஷேகம் செய்யுங்கள்.

மற்றுமொரு எளிய பரிகாரம் உள்ளது. ராகு தோஷம் உள்ளவர்கள் தூங்கும் போது தலையணைக்கடியில் அருகம்புல் வைத்தும் கேது தோஷம் உடையவர்கள் தர்ப்பைப் புல்லை தலையணைக்கடியில் வைத்தும் படுத்து உறங்கினால் தோஷங்கள் அகலும். இது போல 9 வாரங்கள் செய்யவும். அதன் பிறகு புல்லை கடலில் விட்டு விடவும். வீட்டில் விளக்கு ஏற்றி ராகு கேதுவின் காயத்ரி மந்திரங்களை சொல்லி வந்தால் தோஷங்கள் விலகும்.