வருமானம் இரட்டிப்பாக பரிகாரம் | Varumanam Irattipaga Parharam in Tamil | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

உங்கள் வருமானம் இரட்டிப்பாக பரிகாரம்

Posted DateNovember 9, 2023

இந்த உலகில் நாம் வாழ பணம் அவசியம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை ஈட்டுவதற்கு அல்லது சம்பாதிப்பதற்கு நமக்கு ஒரு வேலை அல்லது தொழில் தேவைப்படுகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் ஒரு உத்தியோகம் அல்லது தொழில் செய்கிறோம். அதன் மூலம் வருமானம் பெறுகிறோம். என்றாலும் நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்கு தகுந்த வருமானம் இருப்பதில்லை என்பது பலரின் வருத்தமாக இருக்கிறது. நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் இந்த தொழிலில் மேன்மை இல்லை, உத்தியோகத்தில் முன்னேற்றம் இல்லை என்று குறைபடுபவர்க்ளுகு வருமானம்  பெருக்கிக் கொள்ள செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி இந்தப் பதிவில் காணப்போகிறோம்.

Double Your Income As Compensation Min

பொதுவாக நாம் வேலை பார்க்கும் இடம் அல்லது தொழில் செய்யும் இடம் அல்லது சூழல் மங்களகரமானதாக  மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டும். நாம் வேலை அல்லது தொழில் செய்யும் இடத்தில் பல பேரும் வந்து செல்லக் கூடிய இடமாக இருக்கும். அதன் மூலம் அதாவது வருவோரின் பார்வை மற்றும் எண்ணங்கள் காரணமாக நமக்கு திருஷ்டி ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் கூட நமது முன்னேற்றம் தடைபடலாம். நமது வருமானம் பெருகாமல் போகலாம். தொழில் விருத்தி ஆகாமல் இருக்கும்.  இந்த கண் திருஷ்டி போக்கும் விதமாக நாம் சில செயல்களை செய்தும் முன்னேற்றம் இல்லாமல் போய் விடுகிறது.

உங்களுடைய வேலை அல்லது தொழில் மூலம் வரும் வருமானத்தை விட அதிக வருமானம் ஈட்ட எளிய பரிகாரம் ஒன்றை நாம் இந்தப் பதிவில் காணலாம்.

வருமானம் இரட்டிப்பாக பரிகாரம்

இந்த பரிகாரம் மிகவும் எளிய ஒன்றாகும்.  இதனை செய்வதற்கு நமக்குத் தேவையான முக்கியமான பொருட்கள் ஓற்றை இதழ் செம்பருத்திப் மொட்டு, செப்பு சொம்பு மற்றும் நல்ல நீர்.

நீங்கள் எடுத்து வைத்துள்ள காப்பர் சொம்பில் சுத்தமான எச்சில் படாத தண்ணீரை பிடித்து பூஜையறையில் வைத்து விடுங்கள். அதில் நீங்கள் பறித்து வைத்திருக்கும் செம்பருத்தி மொட்டை போட்டு சிறிய தட்டை போட்டு அந்த தண்ணீரை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி விட்டு உங்களுடைய இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அத்துடன் மகாலட்சுமி தாயாரையும் மனதில் நினைத்துக் கொண்டு இந்த தண்ணீரில் உள்ள செம்பருத்திப் பூவை எடுத்து தண்ணீர் இல்லாமல் உதறிய பிறகு இஷ்ட தெய்வ படம் இருந்தால் அந்தப் படத்திற்கு வையுங்கள். அது இல்லையென்றால் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு இந்த பூவை வைத்து விடுங்கள். அதன் பிறகு பூ போட்டு வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். இதை நீங்கள் வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும். இந்த தண்ணீரை குடித்த பிறகு தான் எதுவாக இருந்தாலும் உண்ண வேண்டும். இப்படியாக தொடர்ந்து 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வரும் போது உங்களுடைய வருமானம் இரட்டிப்பாகும் வாய்ப்பு நிச்சயமாக வரும் என்று சொல்லப்படுகிறது.