திருமாலின் திரு மார்பில் உறையும் திருமகளாம் லக்ஷ்மி தேவியின் அருள் இருந்தால் நாம் எல்லாப் பேறும் பெற்று வாழலாம். லக்ஷ்மி தேவியை வெள்ளிக்கிழமை வணங்குவது சிறப்பு. வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் விளக்கு ஏற்றி கீழ்க்கண்ட லக்ஷ்மி மந்திரம் கூறுவதன் மூலம் அன்னையின் அருள் கடாட்சத்தால் பணம் பல்கிப் பெருகும்.

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜ தநயாம் ஸ்ரீ ரங்கதாமேச்வரீம்
தாஸீ பூதஸமஸ்த தேவவநிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீ மந்மந்தகடாக்ஷலப்பதவிபவப்ரஹ்மேந்த்ரகங்காதராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம்வந்தே முகுந்தப்ரியாம்
மாநாதீத ப்ரதித விபவாம் மங்களம் மங்களாநாம்
வக்ஷ: பீடீம் மதுவிஜயிநோ பூஷயத்தீம் ஸ்வகாந்த்யா
ப்ரத்யக்ஷõ நுச்ரவிக மஹிமப்ரார்த்தி நீ நயம் ப்ரஜாநாம்
ச்யோ மூர்த்திம் ச்ரியமசரண, த்வாம்சரண்யாம் ப்ரபத்யே
ரக்ஷத்வம் வேததேவேசி தேவ தேவஸ்ய வல்லபே
தாரித்ர்யாத் த்ராஹிமாம் லக்ஷ்மி க்ருபாம் குருமமோபரி.
பணம் பெருக லக்ஷ்மி தேவி போற்றி
உங்கள் கையில் எப்பொழுதும் பணம் புழங்கவும், உங்களிடம் அதிக அளவில் பணம் இருக்கவும் கீழ்கண்ட லக்ஷ்மி தேவியின் போற்றி மந்திரத்தை பிரதி வெள்ளிக்கிழமை கூறி வாருங்கள். உங்களிடம் பணம் பெருகும் அதிசயத்தை நீங்கள் காண அவளின் அருள் கிட்டும்.
ஓம் ஆனந்த நிலையே போற்றி
ஓம் கடைக்கண்ணால் பார்ப்பவளே போற்றி
ஓம் காலத்தின் வடிவே போற்றி
ஓம் கவலை தீர்ப்பாய் போற்றி
ஓம் யோக சக்தியே போற்றி
ஓம் தர்மம் காப்பவளே போற்றி
ஓம் தயை உடையவளே போற்றி
ஓம் மங்கலம் அருள்வாய் போற்றி
ஓம் திருமகள் வடிவே போற்றி
ஓம் ஒளி கொடுக்கும் சக்தியே போற்றி
’ஓம் எங்கும் நிறைந்த ஏகாந்த சக்தியே போற்றி
ஓம் ஏற்றத்தின் நாயகியே போற்றி போற்றி
ஓம் தன வளம் தருவாய் போற்றி
ஓம் பலம் தரும் பரா சக்தியே போற்றி
ஓம் பரவெளி நிறைந்தாய் போற்றி
ஓம் அதிர்ஷ்ட தேவியே போற்றி போற்றி
January 27, 2026
January 19, 2026
January 13, 2026
January 12, 2026