எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது தமிழ்ப் பழமொழி. எனவே எண்கள் நமது வாழ்வில் மிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு தனித்துவம் உண்டு. இந்தப் பதிவில் 9 ஆம் எண் மற்றும் அதில் பிறந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றிக் காண்போம்.
சண்டை மற்றும் கோபத்திற்கு அதிபதியாகக் கருதப்படும் செவ்வாய் கிரகமே எண் 9 க்கு உரிய கிரகம் ஆகும். 1 சூரியன் 8 சனி இந்த எதிரான இரண்டு கோள்களின் சேர்க்கையே இந்த 9 எண் ஆகும். 2 சந்திரன் 7 கேது இந்த இரண்டு சேர்க்கை எண் 9 ஆகிறது. 3 குரு 6 சுக்கிரன் இந்த இரண்டு எண்களின் சேர்க்கை 9. 4 ராகு 5 புதன் இந்த இரண்டு எண்களின் சேர்க்கை 9 ஆகிறது
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எல்லோரும் இந்த எண்ணின் ஆதிக்கத்தின் கீழ் வருவார்கள். தேதி, மாதம், வருடம் கூட்டி வரும் எண் 9 வருவோரது வாழ்க்கையும் இந்த எண்ணின் ஆதிக்கத்தில் தான் வரும்.
இவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்கள். திடமான உடம்பு உடையவர்கள். கட்டுமஸ்தான தேகம் இருக்கும். புஜங்களும் மார்பும் சதைப்பற்றுடன் இருக்கும். ஒரு சிலர் நடுத்த உயரத்துடன் குட்டையாகவும் காணப்படுவர். இவர்களின் சரீரம் உஷ்ணமாக இருக்கும். இவர்களுக்கு ஆபரேஷன் பல தடவை நடக்கும்.
இவர்கள் போராடவே பிறந்தவர்கள். வாழ்க்கை முழுவதும் போராட்டமாக இருக்கும். இவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள். இவர்களுக்கு சாந்தி, சமாதானம் ஆகியவற்றில் ஈடுபாடு இருப்பதில்லை. தியாகம் செய்யப் போராடுவார்கள். தனது இஷ்டப்படி காரியங்கள் நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். யாராவது ஆட்சேபித்தால் சண்டை மூளும். இவர்கள் சாதுரியம் மிக்கவர்கள். பரோபகாரம் மிக்கவர்கள். அனுபவசாலிகள். இவர்களை எளிதில் ஏமாற்றலாம். தோல்வியைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.
இவர்கள் எதிலும் முன் யோசனையுடன் திட்டங்களை தீட்டி செயல்பட்டால் குடும்பத்தில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் இருக்கும். உடன் பிறந்தவர்கள் மேல் இவர்களுக்கு அதிக பாசம் இருக்கும்.. 3, 6, 9 ஆகிய எண்களை கொண்டவர்களுடன் இவர்களுக்கு நல்ல நட்பு இருக்கும். 9-ம் எண்ணில் பிறந்த பெண்களுக்கு கீர்த்தியும், செல்வாக்கும், தொழில் வளம் கொண்ட ஆண் கணவனாக அமைவார். இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தொழில் சார்ந்த நல்ல முன்னேற்றமும் வெற்றியும் அடைவார்கள். குடும்ப வாழ்க்கையில் முதலில் பலவித துன்பங்கள் இருந்தாலும் பின்னர் புரிதல் ஏற்பட்டு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை இருக்கும். இவர்களின் முன் கோபத்தினால் அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்படும்.
இந்த எண் ஆதிக்கம் கொண்டவர்கள் பலருக்கு ரத்த அழுத்த நோய் இருக்கும். குடற்புண், அம்மை, நெருப்பு காயம், கண்ணில் உஷ்ணம் போன்ற பிரச்சனைகளும் எழலாம். எனினும் அவசரம், பிடிவாதம், சுயநலம் ஆகியவற்றை விட்டுவிட்டால் 9-ம் எண்னில் பிறந்தவர்கள் பெரும் சாதனைகளை படைக்கலாம்.
9 ஆம் தேதியில் பிறந்தவர்கள் செயற்கரிய காரியம் செய்வார்கள். நீண்ட பிரயாணங்களை அடிக்கடி மேற்கொள்வார்கள். சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டவர்கள்.
18ஆம் தேதியில் பிறந்தவர்கள் அதிகம் கஷ்டப்படுவார்கள். காரியங்களில் தாமதங்கள் இருக்கும். பிறரின் சூழ்ச்சிகளையும் ஆபத்துகளையும் எதிரிகொள்வார்கள். சுயநலமாய் இருப்பார்கள். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்கள். இவர்களின் வாழ்க்கை அமைதியற்றதாக இருக்கும்.
27 ஆம் தேதியில் பிறந்தவர்கள் இடையறாது உழைப்பார்கள். செல்வத்தை குவிப்பார்கள். செல்வாக்கு மற்றும் அதிகாரப் பதவி உடையவர்கள். நல்ல பலன் தரும் காரியங்களை மட்டுமே செய்வார்கள். தெளிவான அறிவு உடையவர்கள்.
சாதமான தேதிகள் : 1, 10
உதவும் எண்கள்: 3,5,6,8,9
அதிர்ஷடமற்ற தேதிகள் :2,11,20,29
அதிர்ஷ்ட தேதிகள் :5,14,23,9,18,6,15,21,24,30
அதிர்ஷ்டமான மாதங்கள் : மார்ச், மே, ஜூன், செப்டம்பர், டிசம்பர்
அதிர்ஷ்டமான கிழமைகள்: செவ்வாய் வியாழன் வெள்ளி
அதிர்ஷ்டமற்ற கிழமைகள் : சனி
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, கருஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட உலோகம்: தங்கம்
அதிர்ஷ்ட இரத்தினம் : பவழம்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025