வாஸ்து என்பது ஒரு கட்டிடத்திற்கான உயிர் ஓட்டம் ஆகும்.ஒரு வீடு அல்லது கட்டிடம் என்றால் அதற்கு ஒரு நியதி உண்டு. பஞ்ச பூதங்களின் சரியான சேர்க்கையே வாஸ்து எனப்படும். இவை அனைத்தும் சரியாக இருந்தால் எந்தவிதமான குறைபாடும் இருக்காது. பொதுவாகவே ஒரு வீட்டைக் கட்டும் போது வாஸ்து பூஜை மேற்கொண்டு வாஸ்து படிதான் கட்டப்படுகிறது. ஒரு கட்டிடம் அல்லது வீட்டில் சரியான வாஸ்து இருந்தால் அங்கு நல்ல அதிர்வலைகள் காணப்படும். அது நேர்மறை ஆற்றலை அளிக்கும்.அதையும் மீறி சில குறைபாடுகள் வரத்தான் செய்கிறது. இந்தக் குறைபாடுகள் காரணமாக வீட்டை இடித்துக் கட்டுதலோ அல்லது வீடு மாற்றுதலோ சாத்தியமற்ற செயலாகும். அதே போல வாஸ்து குறைபாடுகளை நீக்க பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும் என்பதும் இல்லை. சிறிய பரிகாரங்கள் மூலம் வாஸ்து குறைபாடுகளை நீக்கிக் கொள்ள இயலும். எளிய பொருட்களை வீட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் வாஸ்து தோஷத்தை சரி செய்யலாம். அதனைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
கல் உப்பு
வாஸ்து பொருட்களில் நாம் மிக எளிதாக பின்பற்றக் கூடிய மற்றும் எளிதாக கிடைக்கக்கூடிய பொருள் உப்பு ஆகும். இது வாஸ்து தோஷத்தை நீக்க வல்லது. ஒரு கிண்ணத்தில் கல் உப்பை போட்டு வீட்டில் வைக்கலாம். இதனை வாரம் ஒரு முறை மாற்றலாம். முடிந்தவர்கள் தினமும் மாற்றலாம். இது எதிர்மறை ஆற்றலை நீக்கவல்லது. உப்பை நீரில் போட்டு தாராளமாக உங்கள் வீட்டிலும் அதைச் சுற்றிலும் தெளிப்பது. மற்றும் உப்பு கலந்த நீரைக் கொண்டு வீடு துடைப்பது அனைத்து எதிர்மறை ஆற்றல்களிலிருந்தும் விடுபட உதவுகிறது.
மூங்கில், மிகச் சிறந்த வாஸ்து பொருளாகும். மூங்கிலுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஆற்றல் அதிகம். சீன வாஸ்து பொருளான இந்த மூங்கிலை உங்கள் வீட்டில் வைப்பதன் மூலம் உங்கள் செல்வம் பெருகும். வளமான வாழ்வை அமைத்துத் தரும். பசுமையான மூங்கில் உங்கள் பார்வையை பிரகாசமாக்கும். பசுமை வீட்டிற்கு அழகையும் சேர்க்கும். மூங்கில் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. காற்றில் உள்ள நச்சுக்களை இது சுத்தப்படுத்தும். ஆரோக்கியத்தை அளிக்கும். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும். ஆற்றல் கொண்டது
உங்கள் வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் கற்பூரப் படிகங்களை வைக்க வேண்டும். பெரும் நிதி இழப்பு அல்லது முன்னேற்றத்தில் தடை இருப்பவர்கள் தங்கள் வீட்டில் இரண்டு கற்பூர படிகங்களை வைத்திருக்க வேண்டும். உங்கள் வேலையில் சிக்கல் இருந்தால் அல்லது உங்களுக்கு பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே இருந்தால் வீட்டின் வெவ்வேறு இடங்களில் கற்பூரத்தை வைக்கவும். இந்த கற்பூர உருண்டைகள் சுருங்கிய பிறகு அல்லது கரைந்த பிறகு மாற்ற வேண்டும்.
ஆதிகாலம் முதலே வாஸ்து சாஸ்திரத்தில் கண்ணாடிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே. சரியான இடத்தில் கண்ணாடிகளை வைப்பது, வீடு முழுவதும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க உதவும் கண்ணாடியை வைப்பதில் செய்யக்கூடாத இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. கண்ணாடியை ஒருபோதும் பிரதான கதவுக்கு நேர் எதிரே வைக்க வேண்டாம். படுக்கையறையில் உள்ள கண்ணாடி படுக்கையை பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடைந்த கண்ணாடிகளை வீட்டில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
ஒரு படிக ஆமை உங்கள் வாழ்க்கையில் நேர்மறை, நீண்ட ஆயுள் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் ஒரு அற்புதமான பொருள். இது உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் அலுவலகத்திலோ வைக்கப்படலாம். இது உங்கள் செல்வத்தையும் பொருள் ஆதாயங்களையும் கொண்டு வர முடியும். உங்களைச் சுற்றியுள்ள நேர்மறையான செல்வ ஆற்றல்களை உயர்த்துவதற்கு, சில நாணயங்களை ஆமையின் கீழ் வைத்திருக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வீட்டில் மீன் தொட்டி அமைத்து மீன்களை வளர்க்கலாம். இது நேர்மறை ஆற்றலை அளிக்கவல்லது. மேலும் வாஸ்து தோஷத்தை நீக்க வல்லது. வீட்டில் மீன்தொட்டி வைத்திருப்பதால் பல நன்மைகள் உள்ளன. அவை வீட்டிலிருந்து தீமையை அகற்ற உதவுகின்றன. ஒரு மீன் இறந்துவிட்டால், அதனுடன் ஒரு பிரச்சனையும் இறந்துவிடுகிறது என்று வாஸ்து கூறுகிறது. மீன்களுக்கு உணவளிப்பது நல்ல கர்மாவை மேம்படுத்த உதவுகிறது. மீன் தொட்டி வளர்ப்பின் மூலம் பிறரின் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம். மீன் தொட்டியை வீட்டின் சாப்பாட்டு அறையில் மட்டுமே வைக்க வேண்டும், வேறு எங்கும் வைக்கக்கூடாது. அதனை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது நல்லது.
வண்ணங்கள் எப்போதும் வீட்டில் உள்ள ஆற்றலைப் பாதிக்கின்றன. குறிப்பாக சில வண்ணங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் பச்சை போன்ற வண்ணங்கள் மாஸ்டர் படுக்கையறைக்கு ஏற்றதாக இருந்தாலும், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு குழந்தைகள் அறைகளுக்கு சிறந்ததாக இருக்கும். நீங்கள் வாஸ்து தோஷத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், சுவர் பெயிண்ட் நிறங்களை மாற்றுவது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
காற்று மணிகள் சிறந்த கலை மற்றும் அலங்காரப் பொருளாக விளங்கி வீட்டின் அழகை அதிகப்படுத்துவதோடு சிறந்த வாஸ்து பொருளாகவும் விளங்குகிறது. காற்று வீசும் போது இதில் இருந்து ஒலிக்கும் ஒலி இனிமையானதாக இருக்கும். இந்த காற்று மணிகளுக்கு நல்ல ஆற்றலை ஈர்க்கும் சக்தி உண்டு. இது உங்கள் நிதிநிலையை மேம்படுத்தும். நிதி இழப்புகளைச் சரிசெய்வதற்கும் அவை சிறந்தவை. நீங்கள் வாஸ்து தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், 6 அல்லது 8 வெற்று கம்பிகள் கொண்ட இந்த அலங்கார பொருளை உபயோகிக்கலாம், ஏனெனில் அவை நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025