மகர ராசிக்காரர்கள் உறவு விஷயங்களில் கடினமான காலங்களை சந்திக்க நேரிடும். இந்த மாதத்தில் தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையில் முந்தைய மனச்சோர்வில் இருந்து நீங்கள் மீண்டு வரலாம். எதிரிகளிடமிருந்து வரும் தொல்லைகளிலிருந்தும் விடுபடலாம். உங்கள் மனதில் கவலை மற்றும் மன அழுத்தம் குறையும் உங்கள் தகவல் தொடர்பு மிகவும் மேம்படும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தொடர்ந்து தொந்தரவு செய்யலாம். பிள்ளைகள் மூலம் சங்கடமான சூழ்நிலையை சந்திப்பீர்கள். பரம்பரை சொத்து விஷயங்களில் அதிர்ஷ்டம் இருக்கலாம். ஆன்மீகத்தில் நாட்டம் காணப்படும். நீங்கள் குடும்பத்திற்காக அதிக பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தலாம். சொத்து, ரியல் எஸ்டேட் விஷயங்களில் புதிய பிரச்சனைகள் வரலாம். நீங்கள் சர்ச்சைகள் மற்றும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகமாக இருக்கும்.
உறவு விஷயங்களில் கடினமான நேரம் இருக்கலாம். இந்தமாதத்தில் தவறான புரிதல்கள் மற்றும் இணக்கமற்ற சிந்தனை இருக்கும் என்பதால் உறவில் இருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. திருமண வாழ்வில் வாக்குவாதம் மற்றும் ஈகோ மோதல்கள் காரணமாக பிரிந்து செல்லும் வாய்ப்புகள் அதிகம். திருமண வாழ்க்கையில் துணையுடன் குறைவான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது நல்லது. காதலில் இருக்கும் மகர ராசிக்காரர்கள் சிலருக்கு உறவில் விரிசல் ஏற்படலாம். உறவில் போராட்டங்கள் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள் இருக்கலாம். மகர ராசிக்காரர்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்புகொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். எனவே, தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. தாம்பத்திய சுகம் குறைவாக இருக்கலாம். பொறுமை உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதிநிலையில் கலவையான பலன்கள் இருக்கலாம். சொத்து சம்பந்தமான விஷயங்களில் ஏற்கனவே செய்த செலவுகளுக்கு நல்ல பலன்களைப் பெறத் தொடங்கலாம். வெளிநாட்டு வேலைகளைப் பெறுவதற்கு கடன்களைப் பெற வேண்டியிருக்கும். செலவுகள் பெரும்பாலும் வீடு மற்றும் உடன்பிறந்தவர்களுக்காக செலவிடப்படலாம். வருமானம் ஓரளவுக்கு இருக்கும். இருப்பினும், பங்குச் சந்தையில் வர்த்தகம் மற்றும் ஊக நடவடிக்கைகள் உங்களுக்கு நல்ல வருவாயைக் கொடுக்காது. சேமிக்க இயலாமை என்பது கவலை அளிக்கும். இருப்பினும், மகர ராசிக்காரர்களுக்கு அரசாங்க விதிகள் மற்றும் விதிமுறைகள் மூலம் திடீர் ஆதாயங்கள் ஏற்படலாம். இந்த மாதத்தின் பிற்பகுதியில் நல்ல லாபம் கூடும். நவம்பர் மாதத்தில் வழக்கமான வருமானம் தடைபடும். பரம்பரை சொத்துக்கள் மூலம் பண மற்றும் பணமற்ற பொருட்களின் மூலமாகவும் ஆதாயமடையலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சனி பூஜை
நீங்கள் உத்தியோகத்தில் ஏமாற்றங்களையும் பின்னடைவுகளையும் சந்திக்க நேரிடும், மேலும் அதன் விளைவாக விரக்தியும் உருவாகலாம். குறிப்பாக பெண்களால் பணியிடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பணியிடத்தில் நீங்கள் சங்கடமான தருணங்களை சந்திப்பீர்கள். தொழிலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சக ஊழியர்களால் தொழில் விஷயங்களில் தொல்லைகள் மற்றும் விரக்தி ஏற்படலாம். உத்தியோக வாழ்க்கையில் பதட்டங்கள் மற்றும் பரபரப்பான பணிச்சூழல் இருக்கும். கடந்த காலங்களில் மேலதிகாரிகள் ஆதரவாக இருந்தும் இப்பொழுது பின்வாங்கலாம் என்பதால் மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களாலும், சக ஊழியர்களாலும் சங்கடமான சூழ்நிலை ஏற்படலாம். இந்த மாதத்தில் வளர்ச்சி மற்றும் அங்கீகாரம் அதிக அளவில் தடைபடும்.
வியாபாரத்தில் ஈடுபடும் மகர ராசிக்காரர்கள் எதிர்காலத்தில் அதிக சோதனைக் காலங்களையும் மாற்றங்களையும் சந்திப்பார்கள். வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. மாதத்தின் முதல் பாதியில் அரசு மற்றும் அதிகாரிகளுடன் நல்லிணக்க ஆரவு இருக்க வாய்ப்பில்லை. இந்த மாதம் அதிக வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. கடன்களும் குவியலாம். தலைமைத்துவம் மற்றும் மூலோபாய முடிவுகள் வணிகத்தில் கவனமாக செயல்படுத்தப்பட வேண்டும். விரிவாக்கம் பற்றிய யோசனைகளும் ஒத்திவைக்கப்பட வேண்டும். எதிரிகள் மற்றும் போட்டியாளர்களை மிகவும் கவனமாக கையாள வேண்டியிருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் அரசு அதிகாரிகளுடனான உறவு மேம்படும். மகர ராசிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரம் தேக்க நிலையைக் காணும். உங்கள் செயல்பாட்டில் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் மற்றும் சிறந்த செயல்திறனுக்காக வணிகத்தில் தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக பெண் கூட்டாளிகள் தொழிலில் சாதகமற்றவர்களாக மாறலாம். முதலீட்டில் மாற்றங்கள் ஏற்படலாம். எதிரிகள் உங்கள் முயற்சிகளில் சிக்கலை உருவாக்கலாம். தொழிலில் லாபத்தைப் பொறுத்தமட்டில் அடுத்த மாதம் முதல் நல்ல பலன்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மகர ராசிக்காரர்கள் தொழிலில் சிறப்பாகச் செயல்பட தங்கள் சௌகரியத்தை விட்டு வெளியே வர வேண்டும். பணியிடத்தில் வல்லுநர்களின் குழுவை வழிநடத்த மாற்று வழிகளைக் காணலாம். சிறந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்காக பணிச்சூழலில் கோபம் மற்றும் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மை பெற : சுக்கிரன் பூஜை
மகர ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். தாயாரின் உடல்நிலை சீராகும். மன அமைதியும் சிறப்பாக இருக்கும். நவம்பர் மாதத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தற்காலிக பிரச்சனைகள் ஏற்படலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மகர ராசி மாணவர்கள் கல்வி விஷயங்களில் இருந்த தடைகள் மற்றும் தடங்கல்கள் நீங்கப் பெறுவார்கள். பாடங்களில் உள்ள கருத்துகளையும் நுணுக்கங்களையும் நன்கு புரிந்து கொள்வார்கள். ஆசிரியர்களுடனும் குருக்களுடனும் பழகும் விதத்தை மாணவர்கள் கற்க வேண்டியிருக்கும். இந்த மாதத்தில் சில சமயங்களில் ஆசிரியர்கள் / குருக்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். படிப்பில் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். வெளிநாட்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் சிரமமான காலகட்டமாக இருக்கும். இருப்பினும், இந்த மாதத்தில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் நல்ல கடின முயற்சியுடன் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கல்வியில் சிறந்து விளங்க : கணபதி பூஜை
சுப தேதிகள் : 2, 3, 4, 5, 12, 13, 14, 15, 23, 24, 25, 26, 29 & 30.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025