Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கடகம் நவம்பர் மாத ராசி பலன் 2023 | November Matha Kadagam Rasi Palan
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கடகம் நவம்பர் மாத ராசி பலன் 2023 | November Matha Kadagam Rasi Palan 2023

Posted DateOctober 27, 2023

கடக ராசி நவம்பர் மாத பொதுப்பலன்கள்:

கடக ராசிக்காரர்கள் இந்த மாதம் வேலையில் இருக்கும் மனக்கசப்பு மற்றும் மனக்கவலை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணத்தை அனுபவிப்பார்கள். இது குழந்தைகளின் மீது முக்கியமாக கவனம் செலுத்தும் காலம் மற்றும் உங்கள் அறிவை விரிவுபடுத்தும் காலம். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் புதிய யோசனைகள் வரலாம்.  இந்த மாதத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் பிரச்சினைகள் அகலும். ஆயினும்கூட, இந்த காலகட்டத்தில் நீங்கள் மூதாதையர் சொத்து சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் பிரச்சினைகள் இருக்கலாம்.

காதல்/குடும்ப உறவு :

காதல் மற்றும் உறவு விவகாரங்கள் பின்னடைவைக் காணக்கூடும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். சிலருக்கு வாழ்க்கையில் புதிய துணையைத் தேர்ந்தெடுப்பதில் மனம் மாறலாம். இருப்பினும், அதை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.  சிலருக்கு காதல் வாழ்க்கை திருமண வாழ்க்கையாக மாறலாம். திருமணத்திற்கு துணை தேடுபவர்களுக்கு, குடும்பத்தின் தொலைதூர உறவினரே துணையாகக் கிடைக்கலாம். பேசும் போது  கவனமாக இருக்க வேண்டும். வாக்குவாதங்கள் மற்றும் சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும். மொத்தத்தில், கடக ராசிக்காரர்களுக்கு காதல் மற்றும் உறவைப் பொறுத்தவரை ஒரு மிதமான காலம் எதிர்பார்க்கப்படுகிறது.

திருமண உறவில் நல்லிணக்கம் காண  : சனி பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் மிதமானதாக இருக்கும். உடல்நலம் மற்றும் சொத்துப் பிரச்சினைகளுக்கு அதிக செலவுகள் இருப்பதால், எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பது கடினமாக இருக்கலாம். ஆன்மீக விஷயத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பணத்தை செலவு செய்ய நேரலாம். மேலும் குறிப்பிடத்தக்க பகுதி பணம் குழந்தைகளுக்காகவும் செலவிடப்படும். பங்குச் சந்தையில் முதலீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கலாம். நீங்கள் அறிவை விருத்தி செய்வதற்கும் தொழில் நுட்பங்களைக் கற்கவும் உங்கள் சேமிப்பு பணத்தை பயன்படுத்திக் கொள்வீர்கள். இம்மாதத்தில் உடல்நலம் மற்றும் மருந்துகளுக்காகவும் பணம் செலவாகும். எனவே பணம் சேமிப்பது படிப்படியாக மட்டுமே நடக்கும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை

உத்தியோகம் :

உங்கள் உத்தியோக நிலை ஒரு நேர்மறையான மாற்றத்திற்கு உட்படும், நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.  பணியிடத்தில் சில சமயங்களில் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம் மற்றும் உத்தியோகம் மூலம் குறைவான நிதி வளர்ச்சி இருக்கும் காலகட்டமாக இந்த மாதம் இருக்கலாம். சில நேரங்களில் பணியிடத்தில் மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிறந்த வழிகாட்டி உத்தியோக வாழ்க்கையில் சரியான பாதையில் உங்களை சரியாக வழிநடத்த முடியும்.  பணியிடத்தில் உங்கள் யோசனைகள் ஓரளவிற்கு மதிக்கப்படும். குழுவில் உள்ள பெண் உறுப்பினர்களுடன் பணி சார்ந்த விஷயங்களைப் பற்றி பேசுகையில் கவனமாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்தத்தில் இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கலாம்.

தொழில் :

உங்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரம், புதிய முதலீடுகள் மூலம் சாதகமான வளர்ச்சியைக் காணும். வியாபாரத்தில் புதிய யோசனைகள் மற்றும் செயல்முறைகளை செயல்படுத்துவதன் மூலம் தொழிலில்   நல்ல வருவாயை பெறலாம்.   இந்த மாதத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். தொழில்களில் ஒட்டுமொத்த நிதி வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நவம்பர் மாதத்தில் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் மாற்றம் செய்ய  இன்னும் பரிசீலிக்கலாம். எவ்வாறாயினும், 8 ஆம் வீட்டில் சனி திடீர் இழப்புகளை கொடுக்கக்கூடும் என்பதால் குறுகிய காலத்தில் அதிக விரிவாக்கத்திற்கான திட்டமிடல்  கூடாது. கடன்களைப் பெறுவதன் மூலம் நிதி நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.

தொழில் வல்லுனர்கள் :

கடக ராசி தொழில் வல்லுனர்களுக்கு தொழிலில் நல்ல காலம் இருக்கும். தொழிலில் உள்ள சிக்கல்களைச் சமாளிக்க நீங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவீர்கள். தொழிலில் நீங்கள் சாதுரியமான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இந்த மாதத்தில் தொழில் வல்லுனர்களுக்கு நிதி வரவு ஓரளவு நன்றாக இருக்கும்.  வெளிநாட்டு தொழில் வல்லுநர்கள் மற்றும் வெளிநாட்டு மொழியைச் சேர்ந்த நிபுணர்களைச் சந்திப்பதன் மூலம் அதிர்ஷ்டத்தைக் காண்பீர்கள். இந்த மாதத்தில் தொழில் நிமித்தமாக  குறுகிய தூர மற்றும் நீண்ட தூர பயணங்கள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மை பெற :பிருகஸ்பதி பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் உடல்நிலை சீரடையும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உணர்ச்சிவசப்பட வாய்ப்புள்ளது. தொழிலில் இருந்த மன உளைச்சல் படிப்படியாக குறையும். இருப்பினும், செரிமானம் மற்றும் எலும்பு மற்றும் அதன் மஜ்ஜை தொடர்பான அசௌகரியங்கள் இந்த மாதத்தில் காணப்படும். தாயின் உடல்நிலையும் சிறப்பாக இருக்கும், ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இந்த மாதத்தில் அதிக கவனம் தேவை.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : கேது பூஜை

மாணவர்கள் :

கடக ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் உள்ளார்ந்த திறமை மற்றும் புத்திசாலித்தனம் வெளிப்படும். கல்வியில் உள்ள தடைகளும் நீங்கும். அயல்நாட்டுத் தொடர்பான கல்வி வாய்ப்புகளும்  சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். நவம்பர் மாதத்தில் மனப்பாடம் செய்யும் திறன் அதிகரிக்கும். எதிர்காலத்தில் உங்களுக்கு சிறந்த மற்றும் திருப்திகரமான முடிவுகள் காத்திருக்கின்றன.  ஆசிரியர் அல்லது குருவுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கல்வியில் சிறந்து விளங்க : சூரியன் பூஜை

சுப தேதிகள் : 9, 10, 11, 12, 13, 16, 17, 18, 19, 25, 26, 27 & 28.

அசுப தேதிகள் : 1, 2, 3, 4, 5, 6, 20, 21, 22, 29 & 30.