அமாவாசை தர்ப்பணம்

அமாவாசை தர்ப்பணம்

அமாவாசையை இருள் சூழ்ந்த நாள் என்று சொல்லலாம். அன்றிலிருந்து தான் நிலவு படிப்படியாக வளர்ந்து பௌர்ணமி நிலவாகின்றது. சந்திரனின் இருண்ட பகுதி பித்ரு (நமது முன்னோர்கள்) லோகமாக கருதப்படுகின்றது. அன்றைய தினம் நாம் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம் அவர்களின் பரிபூரண ஆசியை நமக்குப் பெற்றுத் தரும். மேலும் சாபம், திருஷ்டி போன்றவைகளை நீக்கும்.
{{variation.Name}}:
{{variationdetail.VariationName}}
{{oldPrice}} You Save {{Save}}
{{Price}}
இலவச ஷிப்பிங்
We regret to inform you that due to the imposition of new lockdown measures in different countries and restricted international flights operation, we are unable to ship Prasad at this time.
அளவு:
{{requiredQty}}
{{prdvariation.ParentName}}:
{{variation.Name}}
{{childname.ChildVariationTypeName}}:
{{childDetails.VariationName}}

அமாவாசை தர்ப்பணம்
(முன்னோர்களை திருப்திப்படுத்தும் அமாவாசை தர்ப்பணம்)

அமாவாசை தர்ப்பணத்திற்கான அறிமுகம்:

Amavasya Tarpanam

அமாவாசையை இருள் சூழ்ந்த நாள் என்று சொல்லலாம். அன்றிலிருந்து தான் நிலவு படிப்படியாக வளர்ந்து பௌர்ணமி நிலவாகின்றது. சந்திரனின் இருண்ட பகுதி பித்ரு (நமது முன்னோர்கள்) லோகமாக கருதப்படுகின்றது. அன்றைய தினம் நாம் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம் அவர்களின் பரிபூரண ஆசியை நமக்குப் பெற்றுத் தரும். மேலும் சாபம், திருஷ்டி போன்றவைகளை நீக்கும். விஷ்ணு தர்ம சாஸ்திரப்படி அமாவசை அன்று மூன்று தலைமுறைகளைச் சார்ந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்ததாக கூறப்படுகின்றது. அமாவசை அன்று இன்னுயிர் பிரிந்த நமது முன்னோர்களுக்கு படையலிட்டு அவர்களின் பசியைப் போக்குவதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியடைந்து நமக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ஆசியையும் வழங்குகிறார்கள்.

அமாவாசை தர்ப்பணத்திற்ன் சிறப்பம்சங்கள் :

அமாவசை அன்று நடத்தப்படும் தர்ப்பணம், தந்தை இல்லாத மகன்கள் மட்டுமே செய்ய வேண்டும். ஏனெனில் அன்று மூதாதையர்கள் தங்கள் வாரிசு அளிக்கும் உணவை மட்டுமே சார்ந்து இருக்கிறார்கள். அமாவாசை அன்று நாம் நமது முன்னோர்களுக்கு செலுத்தும் பிரார்த்தனைகள் பல மடங்கு பயனளிக்க வல்லவை. அவர்களை முறையாக வழிபாடு செய்து நன்றி செலுத்துவதன் மூலம் நாம் நீண்ட ஆயுள், சிறந்த அறிவு, செல்வம் மற்றும் முயற்சிகளில் வெற்றி போன்ற ஆசிகளை அவர்களிடமிருந்து பெறலாம். இரட்டைப் பிறப்புடன் சம்பந்தப்பட்ட பூர்ண க்ரியா நடத்துவதன் மூலம் வாழ்வில் அமைதியும் திருப்தியும் காணலாம்.

அமாவாசை தர்ப்பனத்திற்கான புராண கதை :

பித்ருக்களின் ஏழு லோகங்களில் ஒன்றினைச் சேர்ந்த அக்னிஷ்வதாஸின் மனதிலிருந்து பிறந்த மகள் உடலாய் இருக்கும் ஒரு தந்தையை விரும்பினாள். அதனால் அவளது யோக சக்திகள் குறையத் தொடங்கி சுவர்கத்திலிருந்து கீழ் நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள். அவ்வாறு இறங்கும் போது பித்ரு லோகத்தை கடக்கையில் என்னைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டிக் கொண்டாள். பித்ருக்கள் அவளை ராசா அமாவாசைக்கு பிறக்கும் படி ஆலோசனை கூறினார்கள். அதன் மூலம் அவள் தனது இழந்த சக்தியை மீண்டும் பெற்று பித்ருக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா நடத்தினாள் என்று புராணக் கதை கூறுகின்றது.

Benefits

அமாவாசை தர்ப்பணத்தின் பலன்கள்:

  • எமதர்மராஜனின் ஆசி கிடைக்கும்

  • மோசமான விதியிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் தடைகளை நீக்குகிறது

  • இன்னுயிர் பிரிந்த ஆன்மாக்களுக்கு திருப்தி மற்றும் நிவாரணம் கிடைக்கும்

  • குழந்தைகளுக்கு நீண்ட ஆயுள் மற்றும் உயர்ந்த அறிவு பெறுவதற்கான ஆசி கிடைக்கும்.

  • இளைஞர்களுக்கு நல்ல ஆரோக்கியமும் செல்வமும் பெறுவதற்கான ஆசி கிடைக்கும்.

  • எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறுவதற்கான ஆசீர்வாதங்களைப் பெறலாம்

அமாவாசை தர்ப்பணத்திற்கான புரோகிதர் சேவை :

ஆஸ்ட்ரோவேட்டின் பயிற்சி பெற்ற புரோகிதர்கள் நீங்கள் திருப்திப்படும் வகையில் தர்ப்பணம் நடத்தித் தருவார்கள். அவர்கள் பிரதி மாதமும் உங்கள் விருப்பத்திற்கேற்ப தர்ப்பணம் செய்வித்து உங்களை எதிர்மறை விளைவிலிருந்து காப்பற்றுவார்கள். தர்ப்பணம் நடத்தி உங்கள் முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றிடுங்கள். எங்கள் புரோகிதர்கள் மூலம் அவர்களை உலகிலிருந்து விடுவித்து பித்ரு லோகத்தில் சிறப்பாய் வாழ வழி செய்யுங்கள்.

Durga Ceremonies

வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here