ம்ருத சஞ்சீவனி ஸூக்தம் மற்றும் இந்த்ராக்ஷீ சிவ கவசத்துடன் செய்யப்படும் மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் சிவனின் அருளாசி பெறுவதற்கு செய்யப்படும் ஹோமம் ஆகும். இந்த மூன்றையும் இணைத்து நடத்தும் இந்த வைபவத்தின் மூலம் மரண பயம் அகல்கின்றது. மோட்சத்திற்கு வழி வகுக்கின்றது. இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க அதிர்வலைகள் நமது உயிரின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து நம் மனதிலும், நம்மைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அறியாமையை விலக்குகின்றது.
மிகுந்த பக்தியுடன் சமர்பிக்கப்படும் இந்த மூன்று மந்திரங்களின் சங்கமம் இஷ்டார்த்தங்களை அதாவது மனமார நினைப்பவைகளை அடையும் சக்தியை அளிக்கின்றது. இந்த மந்திரங்கள் யாவும் பரம்பொருளாகிய சிவனின் நற்குணங்களை புகழ்ந்து கூறுகின்றது. உலக மக்களுக்காக சிவனே மரண பயம் வெல்ல மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை அளித்ததாக நம்பப்படுகின்றது.
இந்த ஹோமம் உடல் மனம் சுத்தத்திற்கான, நோய்களிலிருந்து குணமடைவதற்கான, நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான , தீராத நோய்களையும் தீர்ப்பதற்கான அருமருந்தாகும். இது மூன்று மந்திரங்களின் கலவையாக இருப்பதால், இதன் ஆற்றல் அனைத்து தடைகளையும் நீக்கி, எதிர்மறை அதிர்வுகளை தணித்து, நீண்ட ஆயுளுக்கான சக்தியை அளிக்கின்றது.
ம்ருத சஞ்சீவனி ஸூக்தம் மற்றும் இந்த்ராக்ஷீ சிவ கவசத்துடன் செய்யப்படும் மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் சிவனின் அருள் பெற அர்ப்பணிப்புடன், சிரத்தையுடன், பயபக்தியுடன் செய்யப்படுகின்றது. இந்த்ராக்ஷீ சிவ கவசம் விஷ்ணுவால் வழங்கப்பட்டதாக கருதப்படுகின்றது. இந்த மந்திரம் நீண்ட ஆயுளை அளிக்கக் கூடியது. ஆபத்து நேரங்களில் நம்மை காக்கும் கவசமாக விளங்கக் கூடியது. ம்ருத சஞ்சீவனி ஸூக்தம் தான் சுக்கிராச்சாரியாருக்கு இறந்தவர்களை உயிர்பிக்கும் சக்தி அளித்ததாக நம்பப்படுகின்றது. மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் நம்மை மரண பயத்திலிருந்து விடுவிக்கின்றது. மரணம் என்பது உண்மையில் மரணம் அல்ல. மரண பயம் தான் நம்மைக் கொல்லும் மரணம் ஆகும்.
இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். ஜனனம் மரணம் என்ற சுழற்சியிலிருந்து விடுபடலாம். மூன்று மந்திரங்கள் கலந்த இந்த வைபவம் ஒருவருக்கு கீழ் கண்ட ஆசிகளை வழங்குகின்றது.
எல்லா தீமைகளையும் வெல்லும், வியக்கும் வகையிலான தெய்வீக சக்தியை அளிக்கின்றது.
உங்கள் உள்ளும் புறமும் ஒரு சக்தி வாய்ந்த ஆற்றலை உருவாக்குகின்றது
தீமைகள் மற்றும் தடைகளில் கவசமாக இருந்து உங்களை பாதுகாக்கின்றது
நோய்களை அகற்றி ஆரோக்கியத்தை அளிக்கின்றது
எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லது.
மரண பயத்தை வெற்றி கொள்ளச் செய்யும்.
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out