ஸ்வயம்வர பார்வதி ஹோமம்

ஸ்வயம்வர பார்வதி ஹோமம்

சக்தியின் ஸ்வரூபமான பார்வதி தேவி, சிவ பெருமானின் சரி பாதி அம்சமாக விளங்குபவள். சிவபெருமான், சக்திக்கு அளித்த ஸ்வயம்வர பார்வதி மந்திரம் திருமணத் தடைகளை வேரறுக்க வல்லது. கிரக தோஷம் காரணமாக ஏற்படும் திருமண தோஷம் அல்லது திருமணத் தடையை அகற்றுவதற்காக, ஸ்வயம்வர பார்வதி ஹோமம் நடத்தப்படுகின்றது.
{{variation.Name}}:
{{variationdetail.VariationName}}
{{oldPrice}} You Save {{Save}}
{{Price}}
இலவச ஷிப்பிங்
We regret to inform you that due to the imposition of new lockdown measures in different countries and restricted international flights operation, we are unable to ship Prasad at this time.
அளவு:
{{requiredQty}}
{{prdvariation.ParentName}}:
{{variation.Name}}
{{childname.ChildVariationTypeName}}:
{{childDetails.VariationName}}

சிறந்த திருமண வாழ்க்கையை அருளும் ஹோமம்

அறிமுகம்

Swayamvara Parvati Fire Lab

சக்தியின் ஸ்வரூபமான பார்வதி தேவி, சிவ பெருமானின் சரி பாதி அம்சமாக விளங்குபவள். சிவபெருமான், சக்திக்கு அளித்த ஸ்வயம்வர பார்வதி மந்திரம் திருமணத் தடைகளை வேரறுக்க வல்லது. கிரக தோஷம் காரணமாக ஏற்படும் திருமண தோஷம் அல்லது திருமணத் தடையை அகற்றுவதற்காக, ஸ்வயம்வர பார்வதி ஹோமம் நடத்தப்படுகின்றது.

திருமணத்திற்கு தகுந்த வரன் அமையவும், திருமணமான தம்பதிகளிடையே நல்லுறவு வளரவும், பிரிந்து வாழும் தம்பதியர் இணைந்து வாழவும் இந்த ஹோமம் துணை புரிகிறது. திருமணத்திற்கு காத்திருக்கும் இளம் பெண்களுக்கு இந்த ஹோமம் சாலச் சிறந்தது. திருமணமாவதில் இருக்கும் பிரச்சினை மற்றும் திருமணமான பின்பு வரும் பிரச்சினை போன்றவகளை தீர்த்து, அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இந்த ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள்.

ஸ்வயம்வர பார்வதி ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

ஸ்வயம்வர பார்வதி ஹோமத்தில் பங்கு கொண்டு, பிரச்சினைகளற்ற, முழுமையான புரிதலுடன் கூடிய, இணக்கமான திருமண வாழ்வைப் பெற்று மகிழலாம். இந்த ஹோமத்திலிருந்து வெளிவரும் ஆற்றல் மிக்க சக்திகள், உங்கள் வாழ்க்கையில் நல்ல துணை கிடைக்கவும், திருமண வாழ்வில் காணப்படும் தடைகள் நீங்கவும், கருத்தொருமித்த தம்பதியராய் வாழவும் பேருதவி புரியும். திருமணத்திற்குக் காத்திருக்கும் இளம் பெண்களுக்கும், இந்த ஹோமம் மிகவும் ஏற்றது. விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும்.

ஆகவே, இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு திருமணத்திற்கு முந்திய மற்றும் பிந்திய, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு, அமைதியான வாழ்வை அனுபவித்து மகிழுங்கள்.

பாரம்பரிய முறை ஹோமம்

ஸ்வயம்வர பார்வதி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு கொண்டு, பார்வதி தேவியின் அருளால், திருமண வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி, கணவரும் மனைவியும் ஒருவருக்கொருவர் பொருத்தமான தம்பதியராக வாழும் பேறு பெறுங்கள். இந்த ஹோமத்தை நீங்கள், உங்கள் ஜென்ம நட்சத்திர நாளன்றும், வெள்ளிக்கிழமைகளில் வரும் அஷ்டமி திதியன்றும் செய்யலாம்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்மைகள்

ஸ்வயம்வர பார்வதி ஹோமம் செய்வதினால் கிடைக்கும் நன்மைகள்:
  • மனதிற்கு பிடித்த, பொருத்தமான மணாளனை, கன்னிப் பெண்கள் அடையலாம்

  • திருமணமானவர்கள், கருத்தொருமித்த, மகிழ்ச்சியான மண வாழ்க்கை பெறலாம்

  • பெண்கள், கணவனுடன் மனமொருமித்து வாழலாம்

  • துணைவருடன் நல்லுறவை விரும்பும் பெண்கள், பெரும் பயன் பெறலாம்

  • மண வாழ்க்கையை இணக்கத்தையும், அர்த்தமுள்ளதாகவும் செய்து கொள்ளலாம்

ஸ்வயம்வர பார்வதி ஹோம மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்வயம்வர கால பார்வத்யை நமஹ

காணொளிகள்

வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here