US $ 161.00 You Save: US $ 40.25 (25%)
பார்வதி தேவியின் வடிவமான அன்னை கர்பரக்ஷாம்பிகா, கருணையே வடிவான தெய்வமானவள். குறிப்பாக, பெண்களின் மீது பெரும் அன்பு செலுத்தும் இந்த தேவி, அவர்கள் கர்ப்பத்தில் வளரும் சின்னஞ் சிறு சிசுவையும் பாதுகாத்து, அவர்கள் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க அருளுபவள். ஆகவே, இந்த தேவி, கர்பரக்ஷாம்பிகா என்றே போற்றப்படுகிறாள். கர்பரக்ஷாம்பிகா ஹோமம், இந்த அன்னை குறித்துச் செய்யப்படும் ஹோம வழிபாடாகும்.
குழந்தையில்லாத தம்பதியருக்கு, வாரிசைத் தந்து, வாழ்வில் மகிழ்ச்சி ஊட்டுவதற்காகவும், கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருவைக் பாதுகாப்பதற்காகவும், இந்த ஹோமம் செய்யப்படுகிறது.
அன்னை கர்பரக்ஷாம்பிகாவிடம் குழந்தை வரம் வேண்டி, அவளைத் திருப்திப்படுத்த இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. குழந்தைக்காக ஏங்கும் தம்பதியரின் வாழ்வில், அதற்குத் தடையாக இருக்கும் அனைத்து முட்டுக்கட்டைகளையும் அகற்றி, மென்மையான தாய்மையை இந்த ஹோமம் அருளக்கூடியது. இல்லற வாழ்வில் ஈடுபட்டிருக்கும் புது மணத் தம்பதியர் இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, அன்னை கர்பரக்ஷாம்பிகாவின் அருளைப் பெறலாம். கருணையே உருவான அவள் பெண்களை பாதுகாத்து, ஆரோக்கியமான குழந்தையை தந்து ஆசிர்வதித்து, திருமண வாழ்க்கையை சந்தோஷமாக்குகிறாள். இதனால், கருவுறுதலில் காணப்படும் பிரச்சினைகள் யாவும் தீரும். கருவுற்ற பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆகும். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு அன்னையின் அருள் பெற்று, அழகான குழந்தைக்கு பெற்றோராகி மகிழ்வுடன் வாழுங்கள்.
கர்பரக்ஷாம்பிகா ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. எல்லையில்லாத அன்புடன் திகழும் இந்த அன்னை, தன் பக்தர்களின் பிரார்த்தனைக்கு கருணையுடன் செவி சாய்ப்பாள். பஞ்சமி திதி நாளில் இந்த ஹோமம் செய்வது, மேலும் பல நன்மைகளைத் தரும்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
ஓம் ஹ்ரீம் கர்பரக்ஷாம்பிகாயை நமஹ
சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்பது, சர்ப்பங்கள் அல்லது நாகங்கள் எனப்படும் பாம்புகளின் காரணமாக ஏற்படும் சாபம் அல்லது துன்பம் ஆகும். சர்ப்ப கிரகங்கள் எனப்படும் ராகு, கேது கிரகங்கள் ஒருவரது ஜாதகத்தில் 2, 5, 7 அல்லது 8 ஆம் வீட்டில் அமைந்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out