AstroVed Menu
x
x
search
x
மஹா சுதர்சன ஹோமம்

மஹா சுதர்சன ஹோமம்

The Sudharshana Chakra (wheel or discus) wielded by the preserver and sustainer of the universe, Lord Vishnu, is a supremely powerful celestial weapon with 108 serrated edges. The Sudharshana Homa, accompanied by chanting of the Vishnu Sahasranama (1000 names of Vishnu), is a Vedic ritual which confers the divine blessings of Lord Vishnu on those wishing to invoke the energy of this highly auspicious and revered weapon with its unique characteristics and propensity to destroy negativity.

US $ 189.00 You Save: US $ 47.25  (25%)

US $ 141.75

விஷ்ணு பகவானின் சக்தி வாய்ந்த சக்ர ஆயுதத்தை வேண்டி, தீமைகளை வென்று பாதுகாப்பு பெற உதவும் ஹோமம்

அறிமுகம்

MAHA SUDHARSANA HOMA

காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். 108 கூர் முனைகள் கொண்ட, மாபெரும் சக்தியும் ஒளிரும் தன்மையும் கொண்ட இந்த சக்ராயுதம், மகத்தான ஆற்றல் வாய்ந்தது. தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியது. சுதர்சனர் என வழிபடப்படும் இந்த சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோம வழிபாடு, மஹா சுதர்சன ஹோமம் எனப்படுகிறது. விஷ்ணுவை ஆயிரம் நாமங்களால் போற்றும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் இந்த ஹோமம் செய்வது, விஷ்ணு பகவானின் ஆசிகளைப் பெற்றுத் தரும், வேத கால வழிபாடாக விளங்குகிறது. இதனால் சுதர்சன சக்கரத்தின் அருள் கிடைக்கும். இது, நம்மைச் சூழ்ந்துள்ள தீய சக்திகளை அழித்து, நன்மைகள் பல நிறைந்த ஒரு பெரும் பாதுகாப்பு சக்தியாக நம்மைக் காத்து நிற்கும். வாழ்க்கையில் வளர்ச்சி, வெற்றி, மகிழ்ச்சி போன்றவற்றை விரும்புபவர்களுக்கு, இந்த ஹோம வழிபாடு மிகச் சிறந்த ஒன்றாக விளங்குகிறது.

சுதர்சன ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

விஷ்ணுவை ஆயிரம் நாமங்களால் போற்றும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன், மஹா சுதர்சன ஹோமம் செய்வது, விஷ்ணு பகவானின் ஆசியையும் அவரது சக்தி வாய்ந்த சகராயுதத்தின் பரிபூரண ஆசிகளையும் பெற்றுத் தரும். இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், உங்களைச் சூழ்ந்துள்ள இருளும், அறியாமையும் விலகும். நேர்மறை ஆற்றல், உங்களுக்குள் நிறையும். நன்மைகள் பெருகி, நல்வாழ்வு வாழ இயலும்.

பாரம்பரிய முறை ஹோமம்

மஹா சுதர்சன ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாட்களான ஏகாதசியும், துவாதசியும் மற்றும் பௌர்ணமி தினங்களும் இந்த ஹோமம் செய்வதற்கு ஏற்ற நாட்களாகக் கருதப்படுகின்றன. புனிதமான விஷ்ணு சகஸ்ரநாமத்தை மிக்க பக்தியுடன் பாராயணம் செய்து நிகழ்த்தப்படும் இந்த ஹோமம், ஏராளமான நன்மைகளையும், அசாதாரணமான நற்பலங்களையும் அளிக்கக் கூடியது. வருடம் ஒருமுறை இந்த ஹோம வழிபாட்டை நடத்துவது, மிக அதிக பலன்களை அளிக்க வல்லது.

இந்த ஹோம வழிபாடு, எசென்ஷியல், என்ஹான்ஸ்ட் மற்றும் எலைட் என மூன்று பேக்கேஜ்களில் உங்களுக்குக் கிடைக்கிறது. இதிலிருந்து, உங்களுக்கு விருப்பமான ஒன்றை, நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதைச் செய்யும் புரோகிதர்களின் எண்ணிக்கையும் உயரும். இதனால், இந்த வழிபாட்டின் ஆற்றலும் அதிகாரிக்கும். அதிக பலனும் கிடைக்கும். ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் இந்த பூஜையை நடத்தி, இந்த ஹோமத்தில் சக்தியூட்டப்பட்ட தெய்வீக பொருட்களும், வீட்டில் வைத்து பூஜிப்பதற்காக அளிக்கப்படும்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்மைகள்

மஹா சுதர்சன ஹோமத்தின் நற்பலன்கள்
  • பயம், விரக்தி, கெட்ட கனவுகள் போன்ற, நம்மை பாதிக்கும் எதிர்மறைகளைப் போக்கும்

  • இதிலிருந்து உருவாகும் நேர்மறை சக்திகள், உங்கள் உடலையும், மனதையும் தூய்மைப்படுத்தும்

  • துன்பங்களும், தோஷங்களும், சாபங்களும் விலகும்

  • எதிரிகளை வெல்லும் வலிமை கிடைக்கும்

  • உங்கள் அணுகுமுறையில் பெரிய, சிறந்த மாறுதல் உருவாகும்

  • தன்னம்பிக்கை பெருகும்

  • வளர்ச்சி, வெற்றி, வளம், மகிழ்ச்சியால் வாழ்க்கை சிறக்கும்

காணொளிகள்

We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept