குபேரர், லக்ஷ்மி தேவி, ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என்ற மூன்று இறை சக்திகளையும் ஒன்றாக வழிபடும் விதமாக, இவர்களுக்குக் கூட்டாகச் செய்யப்படும் ஹோமம், செல்வத்தை ஈர்க்கும் ஹோமம் ஆகும். இந்த சக்தி வாய்ந்த கடவுளர்கள் மூவரும், செல்வம், வளம், வெற்றி போன்றவற்றை, மழை போல, நம் மீது பொழியக் கூடியவர்கள். இவர்களை வழிபடுவது, நமது பொருளாதாரத்தையும், வாழ்க்கை வசதிகளையும் மேம்படுத்தும்,
குபேரர், லக்ஷ்மி தேவி, ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், நேர்மறை ஆற்றல்களையும், செல்வத்தையும் நம்மை நோக்கிக் கவர்ந்திழுக்கக் கூடிய ஹோம வழிபாடாகும். இதனால் விளையும் ஆன்மிக சக்தி, வறுமை, துன்பங்கள் போன்றவற்றை உங்கள் வாழ்க்கையிலிருந்து துடைத்தெறியும் ஆற்றல் வாய்ந்தது. இதனால் அசாதாரணமான செல்வ வளம் ஏற்படும். மனநிறைவுடன் கூடிய நல்ல வாழ்க்கையையும், நாம் வாழ முடியும்.
பாற்கடலிலிருந்து அவதரித்த, திருமாலின் தேவியாகிய அன்னை லக்ஷ்மி, நல்லதிர்ஷ்டம், அழகு மற்றும் பொருளாதார, ஆன்மிக வளம் ஆகியவற்றை தடையின்றி வழங்கக் கூடியவர்.
குபேரர், லக்ஷ்மி தேவியின் மந்திரி மற்றும் பொருளாளராக விளங்குபவர். வட திசையை ஆட்சி செய்யும் இவர், ஆசை, இன்பம் போன்றவற்றைக் குறிக்கிறார்.
பிரும்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற மும்மூர்த்திகளின் வடிவமாகத் திகழும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர், பக்தர்களின் துரதிர்ஷ்டத்தை நீக்கி, பெரும் செல்வத்தை அளிக்கக்கூடியவர்.
இந்த கூட்டு ஹோமத்தைச் செய்வதன் மூலம், செல்வத்தைக் குறிக்கும் இந்த மூன்று கடவுளர்களின் அருளால், நம் அதிர்ஷ்டத்தை மேம்படுத்திக் கொண்டு, பெரும் செல்வ வளம் பெறலாம்.
இந்த ஹோமம், செல்வத்துடன் ஆழ்ந்த தொடர்புடைய இறை சக்திகள் லக்ஷ்மி, குபேரர் மற்றும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அருள் வேண்டி செய்யப்படும் விசேஷமான வழிபாடாக விளங்குகிறது. இது பணம், பொருள் ஈட்டுவதற்கான பல புதிய வழிகளைத் திறந்து, செல்வ நிலையை பெருமளவு மேம்படுத்தும். இதில் பங்கு கொண்டு, இறை ஆற்றலை நீங்கள் பெற்றுப் பயன்பெறலாம். இதனால் கடன்களிலிருந்து விடுபடலாம். நல்ல வேலையில் சேரலாம். வழக்குகளில் வெற்றி பெறலாம். நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிக்கலாம்.
செல்வத்தை ஈர்க்கும் ஹோமம, வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதில், மூன்று தெய்வங்களையும் போற்றும் மந்திரங்கள், பக்தியுடன் ஓதப்படுகின்றன. இது தொடர்பான பல விஷயங்களையும் கருத்தில் கொண்டு இது நடத்தப்படுவதால், அனைத்து வித மக்களுக்கும், இந்த வழிபாடு மிக நல்ல பலன்களைத் தருகிறது. தவிர, உங்களுக்கு வசதியான இடங்களிலும் இதை, நடத்தலாம். இதில் பங்கு கொண்டு தெய்வ அருள் பெறுங்கள். வாழ்க்கையில் பெரும் செல்வச் செழிப்பு காணுங்கள்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
கடன்கள் தொலையும்
தோஷங்களின் பாதிப்புகள் விலகும்
வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கை மேம்படும்
வழக்குகள் வெற்றி பெறும்
தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்
பணவரவு, பொருளாதார நிலை உயரும்
பெரும் செல்வம் சேரும்
வாழ்க்கை வளம் பெறும்
ஆன்மீக சக்தி பெருகும்
பணத்தை அதிகரிக்க – குபேர மந்திரம்
ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் ஷ்ரீம்
மகாலக்ஷ்ம்யை நமஹ
தானாதிபாய வித்மஹே
ராஜா ராஜாய தீமஹி
தன்னோ குபேர பிரசோதயாத்
செல்வத்தை ஈர்க்க – லக்ஷ்மி மந்திரம்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மி பிரசோதயாத்
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out