மக்கள், குறிப்பாக ஹிந்து மதத்தினர் புதிதாக வீடு வாங்கும் பொழுதோ அல்லது கட்டும் பொழுதோ, அந்த வீட்டுக்குள் குடியேறுவதற்கு முன்னர், கிரகப் பிரவேசம் என்ற வழிபாட்டு விழாவை நடத்துகின்றனர். இதில், கிரகங்கள் மற்றும் தீய சக்திகளின் பாதிப்புகளைக் களைய, பூஜைகளும், ஹோமங்களும் செய்யப்படுகின்றன. சுப வேளையில் செய்யப்படும் இந்த கிரகப் பிரவேச விழா, அந்தப் புதிய இடத்தைப் புனிதப்படுத்துகிறது. மக்கள் வசிப்பதற்கு ஏற்றதாகச் செய்கிறது.
கிரகப் பிரவேச விழா பல வகைப்படும்.
புதிதாக வாங்கப்பட்ட நிலத்தில், புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்காக நிகழ்த்தப்படும் விழா, அபூர்வ எனப்படும்.
நீண்ட நாட்கள் வெளியில் தங்கியிருந்த பின்னரோ அல்லது வேறு ஒருவருடைய வீட்டை வாங்கியிருந்தாலோ, அந்த வீட்டில் மீண்டும் குடிபுகும் நேரத்தில் நடத்தப்படுவது, சபூர்வ எனப்படும்.
வீட்டைப் பழுது பார்த்த பின்னரோ, சீரமைத்த பின்னரோ, பேரிடர்களால் பாதிக்கப்பட்ட வீட்டை சரி செய்த பின்னரோ குடிபுகும் பொழுது, த்வந்த்வ என்ற விழா நடத்தப்படும்.
கிரகப் பிரவேச விழாவின் பொழுது, வீட்டின் நலனுக்காகவும், அங்கு வசிக்கப்போகும் மக்களின் நலனுக்காகவும் பல பூஜைகள் நிகழ்த்தப்படுகின்றன.
பசு மற்றும் கன்றுக் குட்டியின் ஆசி பெறுவதற்காக, கோ பூஜை செய்யப்படுகிறது.
வீட்டு வாயிலைத் தூய்மைப் படுத்துவதற்காக, கணபதி, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி பூஜைகள் செய்யப்படுகின்றன. .
கிரகப் பிரவேச நாளின், சுப வேளையில் புது வீட்டில் நுழைவதற்கும், வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
முதலில், இல்லத்தரசி, தூய தண்ணீர் நிறைந்த குடத்தை எடுத்துக் கொண்டு, தனது வலது காலை முன் வைத்து வீட்டில் பிரவேசிக்க வேண்டும்.
அவளைப் பின் தொடர்ந்து, அவளது கணவர், கடவுளர்களின் படங்களை ஏந்தியவாறு உள்ளே நுழைய வேண்டும்.
பின்னர், மங்களத்தையும், செழிப்பையும் குறிக்கும் மளிகை சாமான்களை எடுத்துக் கொண்டு, குழந்தைகள் உள்ளே செல்ல வேண்டும்.
இதன் பின்னர், உறவினர்களும், நண்பர்களும், விருந்தினர்களும் வீட்டிற்குள் செல்லலாம்.
மேலும், கிரகப் பிரவேச நாளன்று இரவு, வீட்டின் உரிமையாளரும், அவர் குடும்பத்தினரும், அந்த வீட்டிலேயே தங்கியிருப்பது அவசியம். ஜன்னல், கதவுகள் திறக்கப்பட்டு, வீடு காற்றோட்டமாக வைக்கப்பட வேண்டும். தீபங்கள், விளக்குகள் ஏற்றப்பட்டு, வீடெங்கும் வெளிச்சம் நிறைந்திருக்க வேண்டும். இல்லத்தரசி கர்ப்பம் தரித்திருக்கும் பொழுது, கிரகப் பிரவேசம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
கிரகப் பிரவேசத்தின் பொழுது, ஹோமங்கள் நிகழ்த்தப்பட்டு, பல தெய்வீக சக்திகளின் ஆசீர்வாதங்கள், வேண்டிப் பெறப்படுகின்றன.
தடைகளைக் களைவதற்காக கணபதி ஹோமம் செய்யப்படுகிறது.
ஒன்பது கிரங்களையும் திருப்திப்படுத்தி, அவற்றின் அருள் பெறுவதற்காக, நவக்கிரக ஹோமம் நடத்தப்படுகிறது.
இறுதியில், ஆரோக்கியம், செல்வ வளம் போன்றவற்றை வேண்டி, லக்ஷ்மி தேவியைக் குறித்து, லக்ஷ்மி ஹோமம் நிகழ்த்தப்படுகிறது.
வழிபாடுகள் முடிந்த பிறகு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் புரோகிதர்களை வணங்கி, அவர்களது ஆசிகளைப் பெறுகிறார்கள். பின்னர் அவர்களுக்கு உணவளித்து, தகுந்த மரியாதைகள் செய்கிறார்கள். இதன் பின்னர், குடும்பத்தினரும், விருந்தினர்களும் விருந்து உண்டு மகிழ்கிறார்கள். பிறகு, விருந்தினர்கள், பரிசுப் பொருட்களுடன் வழியனுப்பப் படுகிறார்கள்.
கிரகப் பிரவேச விழாவும், வழிபாடுகளும், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. உத்தராயண காலம், அதாவது, சூரியன் வடக்கு திசையில் பயணிக்கும் காலம், கிரகப் பிரவேசத்துக்கு ஏற்ற, மங்களகரமான காலமாகக் கருதப்படுகிறது. மேலும், வீட்டு உரிமையாளரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்த பின்னர், அதற்குத் தகுந்தவாறு, கிரகப் பிரவேச நாளும், நேரமும் குறிக்கப்படுகின்றன. புரோகிதர்களால் இவ்வாறு, விதிப்படி நடத்தப்படும் கிரகப் பிரவேச விழாவும், பூஜை வழிபாடுகளும், உங்களுக்கு பல நலன்களைப் பெற்றுத் தரக் கூடியவை.
எங்களது புரோகிதர்கள் விழா நடத்துவதற்கு உகந்த நேரத்தை கூறுவார்கள். நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கு உரிய நேரத்தில் இருப்பார்கள். விதிமுறைகளை நன்கு அறிந்த எங்கள் புரோகிதர்கள் உங்கள் திருப்திக்கேற்ப விழாவினை நடத்தித் தருவார்கள். அதிக பட்ச பலன்களைக் காண அவர்கள் உங்களுக்கு வழி காட்டுவார்கள்.
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out