துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஹோமம் என்பது, முப்பெரும் பெண் தெய்வங்களான துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி தேவியரைக் குறித்து, ஒரே நேரத்தில் கூட்டாகச் செய்யப்படும் ஹோம வழிபாடாகும். இந்த இறைவிகள், முறையே, வீரம், செல்வம் மற்றும் கல்வியைக் குறிக்கிறார்கள். இவர்கள் அனைவரின் ஆசி வேண்டி நிகழ்த்தப்படும் இந்த இணைந்த வழிபாடு, பலவகை நலன்களை அருளக்கூடியது. ஒருவரது தலைவிதியையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்தது. திறமை, பதவி, அதிகாரம், வெற்றி, அமைதி, சந்தோஷம் ஆகியவை அளிக்கக் கூடியது.
பெரும் ஆற்றலின் வடிவமாக விளங்கும் துர்கா தேவி, நம்மைப் பாதுகாத்து, காப்பாற்றி, நல்வாழ்வு அருளும் உலக அன்னையாக விளங்குகிறார்.
காக்கும் கடவுள் விஷ்ணுவின் இதயத்தில் வசிக்கும் லக்ஷ்மி தேவி, செல்வம், வளம், தூய்மை போன்றவற்றின் உருவமாக விளங்குகிறார். இவரது அருள், குறைவற்ற செல்வ வளத்தையும், நிறைவான வாழ்க்கையையும் அளிக்க வல்லது. .
கல்விக் கடவுள் சரஸ்வதி, கலை வடிவமாகத் திகழ்கிறார். புத்தி, பகுத்தறிவு, நினைவாற்றல் போன்றவற்றையும் குறிக்கும் இவர், அறிவையும், ஞானத்தையும் வழங்கக் கூடியவர்.
இந்த மூன்று பெரும் சக்திகளைப் போற்றி நடத்தப்படும் இந்த த்ரி சக்தி ஹோமம், வேலை, தொழில் போன்றவற்றிலும், வாழ்க்கையிலும் முன்னேற விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இதனால், இந்த தெய்வங்களின் ஆன்மிக சக்தியின் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும்.
இந்த முழு ஹோம பேக்கேஜ், பெரும் சக்தி வாய்ந்த மூன்று பெண் தெய்வங்களையும் ஒரு சேர திருப்திப்படுத்தும், பிரத்யேகமான ஹோம வழிபாடாகும். இதில் பங்கு கொள்வதன் மூலம், உங்களுக்கு, இவர்களின் தெய்வீக அருள் கிடைக்கும். இது, உங்கள் வெற்றிக்குத் தடையாக இருக்கும் பிரச்சினைகளை நீக்கி, நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வகை செய்யும். மேலும், உங்கள் திறன் மேம்படும். நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் முனைப்பு ஏற்படும். இவற்றில் முன்னேற்றம் கண்டு, வாழ்வில் வளமும், மேன்மையும் அடைய வாய்ப்புகள் ஏற்படும். .
இந்த பேக்கேஜில் உள்ள ஹோமங்கள், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதில், மூன்று தேவிகளையும் போற்றும் மந்திரங்கள், பக்தியுடன் ஓதப்படுகின்றன. இதை நிகழ்த்துவதற்கு மிகச் சரியான நாட்களைத் தேர்ந்தெடுத்து, அந்த நாட்களில் இவை நடத்தப்படுவதால், இந்த வழிபாடு மிக நல்ல பலன்களைத் தருகிறது. தவிர, உங்களுக்கு வசதியான இடங்களிலும் இதை, நடத்தலாம். இதில் பங்கு கொண்டு தெய்வ அருள் பெறுங்கள். வாழ்க்கையில் அனைத்து வகைகளிலும் முன்னேற்றம் காணுங்கள்.
இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
பிரச்சினைகள், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றுக்கு எதிராக பாதுகாப்பு கிடைக்கும்
அறிவு, படைப்புத் திறன், பேச்சாற்றல் போன்றவை வளரும்
பொறுமையும், தைரியமும் பெருகும். மரண பயம் தொலையும்
இலக்கிய முயற்ச்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்
செல்வம், வளம் கூடும்
ஆன்மீக நாட்டம் ஏற்படும்
வாழ்க்கையில் அமைதியும், ஆனந்தமும் நிறையும்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணி பிரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மி பிரசோதயாத்
ஓம் காத்யாயநாய வித்மஹே
கன்ய குமாரி ச தீமஹி
தன்னோ துர்கி பிரசோதயாத்