AstroVed Menu
x
x
search
x
சர்ப்ப சூக்தம் பாராயணம் மற்றும் ஆஷு கருட ஹோமம்

சர்ப்ப சூக்தம் பாராயணம் மற்றும் ஆஷு கருட ஹோமம்

கருடன் மகாவிஷ்ணுவின் வாகனமாக விளங்குகிறார். பறவைகளின் தலைவராகவும், பெரும் பலம் வாய்ந்தவராகவும் கருதப்படும் இவர், நாகங்களினால் ஏற்படும் சாபங்களின் விளைவுகளை நீக்கவோ, குறைக்கவோ கூடியவர். ஆஷு கருட ஹோமம், இவரைக் குறித்துச் செய்யப்படும் ஹோம வழிபாடு ஆகும். சர்ப்ப சூக்த ஸ்லோகத்தை ஓதி, ஆஷு கருட ஹோமம் செய்வது, உங்களைச் சூழ்ந்துள்ள சூனியம் போன்ற தீய சக்திகளை விலக்கும். நீங்களும், உங்கள் குடும்பமும் நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தத் துணை புரியும்.
{{variation.Name}}:
{{variationdetail.VariationName}}
{{oldPrice}} You Save {{Save}}
{{Price}}
Quantity:
{{requiredQty}}
{{prdvariation.ParentName}}:
{{variation.Name}}
{{childname.ChildVariationTypeName}}:
{{childDetails.VariationName}}

விஷம், பகை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு தரும் ஹோமம்

அறிமுகம்

Grand Sarpa Suktam Chanting

நாக தோஷம் என்பது, நாகங்கள் எனப்படும் பாம்புகளின் காரணமாக ஏற்படும் சாபம் அல்லது துன்பம் ஆகும். சர்ப்ப கிரகங்கள் எனப்படும் ராகு, கேது கிரகங்கள் ஒருவரது ஜாதகத்தில் 2, 5, 7 அல்லது 8 ஆம் வீட்டில் அமைந்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. மேலும், முற்பிறவிகளில் நாகங்களுக்குத் துன்பம் விளைவித்திருந்தாலும் இது ஏற்படக் கூடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும், இது பெரும் துன்பத்தை விளைவிக்கக் கூடிய தோஷமாகக் கருதப்படுகிறது. இதனால், திருமணம் நடப்பது, குழந்தை பாக்கியம் கிடைப்பது போன்றவற்றில் தடைகள் ஏற்படலாம். சர்ப்ப சூக்தம் என்பது பண்டைய கிருஷ்ண யஜுர் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்லோகமாகும். இது, நாக தேவதைகளைப் போற்றி வணங்குகிறது.

கருடன் மகாவிஷ்ணுவின் வாகனமாக விளங்குகிறார். பறவைகளின் தலைவராகவும், பெரும் பலம் வாய்ந்தவராகவும் கருதப்படும் இவர், நாகங்களினால் ஏற்படும் சாபங்களின் விளைவுகளை நீக்கவோ, குறைக்கவோ கூடியவர். ஆஷு கருட ஹோமம், இவரைக் குறித்துச் செய்யப்படும் ஹோம வழிபாடு ஆகும். சர்ப்ப சூக்த ஸ்லோகத்தை ஓதி, ஆஷு கருட ஹோமம் செய்வது, உங்களைச் சூழ்ந்துள்ள சூனியம் போன்ற தீய சக்திகளை விலக்கும். நீங்களும், உங்கள் குடும்பமும் நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தத் துணை புரியும்.

சர்ப்ப சூக்தம் பாராயணம் மற்றும் ஆஷு கருட ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

ராம ராவண யுத்தத்தின் பொழுது, இந்திரஜித் வீசிய நாக பாசத்தின் பாதிப்புகளிலிருந்து ராமபிரானின் சேனை முழுவதையும் காப்பாற்றியவர் கருட பகவான், என்கிறது ராமாயணம். ஆகவே, சர்ப்ப சூக்தம் பாராயணம் செய்து ஆஷு கருட ஹோமம் செய்வதனால், உங்களுக்கு ஏற்படும் விஷ பாதிப்புகள் விலகும். சூழ்ந்துள்ள தீய சக்திகள் அழியும். தெய்வீக ஆசி கிடைக்கும். சக்தி பெருகும். வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.

பாரம்பரிய முறை ஹோமம்

சர்ப்ப சூக்தம் பாராயணம் மற்றும் ஆஷு கருட ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இது, சுப தினங்களிலோ, உங்கள் ஜன்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற நாட்களிலோ, புனிதமான நேரத்தில் நடத்தப்படும். இதனால் சர்ப்ப தோஷ பாதிப்புகள் விலகி, பல நன்மைகள் உண்டாகும்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்மைகள்

சர்ப்ப சூக்தம் பாராயணம் மற்றும் ஆஷு கருட ஹோமத்தின் நற்பலன்கள்

  • பாம்புகள், மற்ற விஷ ஜந்துக்கள் குறித்த பயம் விலகும்

  • தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல்களிடமிருந்து நிவாரணம் கிடைக்கும்

  • நாக தோஷத்தால் ஏற்படும், தீராத வியாதிகள் தீரும்

  • குழந்தை பாக்கியம் கிடைக்கும்

  • தைரியம், தன்னம்பிக்கை வளரும்

  • பெயர், புகழ், செல்வம் ஓங்கும்

  • நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்

காணொளிகள்

Customers who bought this item also bought

Testimonials For

Please be the first to write a testimonial for this service you experienced at AstroVed. Click here to write
We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept