Medha Dakshinamurthy Homa On Jupiter Transit Day - Remove Obstacles & Gain Wisdom With Guru's Grace JOIN NOW
Thulam Rasi Guru Peyarchi Palangal 2020-2021, துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 - 2022

குரு பெயர்ச்​சி 2020 - 2021 - தனுசுவில் அமரும் குருபகவான்

தமிழ்
துலாம் பொதுப்பலன்கள்

கிரகங்களிலேயே பூரண சுபர் மற்றும் சாத்வீக கோளான குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது துலாம் ராசிக்குப் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீடாக அமைவதால் காதலில் வெற்றியைக் கொடுக்கும் விதமாகவும். திருமண முயற்சிகளில் வெற்றியைக் கொடுப்பதாகவும் இந்த குருவின் பெயர்ச்சி அமையப்போகிறது. கோள்சார குருவானவர் ஐந்தாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையாக லாபஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ராசியையும் பார்வையிடப்போகிறார். இந்த குருப்பெயர்ச்சியானது துலாம் ராசியைச் சார்ந்தவர்களுக்கு நல்ல தொழில் மாற்றத்தையும், ஊக வணிகமான பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தில் லாபத்தையும், சகல சௌபாக்கியங்களையும் ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக அமையப்போகிறது.

குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். குடும்பத்தார் அனைவரிடமும் சுமுகமான உறவு காணப்படும். மூத்த சகோதர சகோதரிகளிடம் நல்லுறவு காணப்படும். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளுடனான நல்லுறவு நீடிக்கும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். இது தங்களின் மன மகிழ்ச்சியைக் கூட்டும்.

குடும்ப உறுப்பினர்களிடம் நல்லுறவு நீடிக்க பால திரிபுர சுந்தரி பூஜை

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதனைத் தக்க வைத்துக் கொள்ள நீங்கள் உடற் பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் உடல் மற்றும் மன நலனை நீங்கள் பாதுகாக்க முடியும். சில நேரங்களில் ஆரோக்கியமற்ற உணவை உண்பதன் மூலம் அஜீரணக் கோளாறு ஏற்படலாம். உணவில் கவனம் தேவை.

நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்பட செவ்வாய் பூஜை

காதலில் வெற்றி உண்டாகும். காதல் உறவில் இணக்கம் ஏற்படும். திருமணத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான தம்பதிகள் இடையே நல்லுறவு காணப்படும். தாம்பத்திய வாழ்வு சிறக்கும். தங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். இது மன அமைதியைக் கொடுக்கும்.

திருமணமான தம்பதிகளுகிடையே வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட சுக்கிரன் பூஜை

இந்த குருப்பெயர்ச்சியில் வீட்டுத் தேவைக்கான செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் நீங்கள் கடினமான முயற்சிகள் எடுப்பதன் மூலம் உங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ள இயலும். பங்கு மற்றும் பொருள் வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்ய ஏற்ற காலமாக இது உள்ளது. பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்க முடியும்.

நிதி நிலையில் ஏற்றம் உண்டாக கோ பூஜை

உத்தியோகத்தில் உள்ளவர்கள், அதிகப் பணிச் சுமை இருந்த போதிலும் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். புதிய பணிகள் மற்றும் பொறுப்புக்கள் உங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும். உங்கள் செயல் திறன் பிறரால் பாராட்டப்படும். சுயதொழில் மேற்கொள்பவர்கள் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் கிடைக்க குரு பூஜை

இந்த குருப்பெயர்ச்சியில், பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெறுவார்கள். சிறப்பாகக் கல்வி பயின்று வெற்றி காண்பார்கள். ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள்.

கல்வியில் வெற்றி கிடைக்க புதன் பூஜை

துலாம் வீட்டில் செய்யக்கூடிய பரிகாரம்

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குப் புத்தகம் வாங்கி கொடுக்கலாம்

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிவது சிறப்பு

பிரதோஷ வழிபாடு மிகுந்த நன்மைகளை கொடுக்கும்

எங்கள் தலை சிறந்த ஜோதிட நிபுணர்களுடன் கலந்து ஆலோசியுங்கள்

எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், குருபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.

குருபெயர்ச்சி 2020-2021 பலன்கள்

உங்களின் ராசிக்கான குருபெயர்ச்சி 2020 பலன்களை அறியவும், குருபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்

குருபெயர்ச்சி 2020-2021 – பரிகாரம்

குரு ஹோமம் செய்வதன் மூலம், குருவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்