Ashta Bhairava Invocation to 8 Fierce Forms of Shiva Helps Remove Obstacles, Master Time, Manifest Material Goals & Attain Fame, Power & Status JOIN NOW
Mesha Rasi Rahu Ketu Peyarchi Palangal 2023 to 2025 Tamil, மேஷ ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ராகு-கேது பெயர்ச்சி 2024


ராகு-கேது பெயர்ச்சி 2024 தேதிகள்
அக்டோபர் 30, 2023 முதல் மே 18, 2025


மேஷம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2024

மேஷம் பொதுப்பலன்கள்

ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது கிரகம் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் என்று அழைக்கப்படுகின்றன. ராகு போககாரகன் என்று அழைக்கப்படுகிறது. நமது விருப்பங்கள் மற்றும் பொருள் வசதிகளை ராகு குறிப்பிடுகிறது. கேது மோட்சகாரகன் என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக உணர்வு மற்றும் இறை தொடர்பை கேது குறிப்பிடுகிறது. இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளுக்கு ஜோதிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த நிழல் கிரகங்களின் நிலைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேஷ ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 12 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 6 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி 30 அக்டோபர் 2023 அன்று நிகழும், மேலும் ராகு மற்றும் கேது இருவரும் 2025 மே 18 வரை அந்தந்த ராசிகளில் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த பெயர்ச்சி 18 மாதங்கள் நீடிக்கும்.

திருமணமான தம்பதிகளிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் இந்த காலக்கட்டத்தில் தீர்விற்கு வரும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு தக்க துணை கிடைக்கும். திருமணம் என்று வரும் போது தசா புத்திகள் தான் அதனை நிர்ணயிக்கும் என்பதால் தனிப்பட்ட ஜாதகத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த பெயர்ச்சிக் காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகளை நீங்கள் சந்திக்க நேரும். இதனால் அதிக பணம் செலவு செய்ய நேரும். ஆரோக்கியப் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது நல்லது. உண்ணும் உணவில் கவனம் செலுத்துவது நல்லது. கொப்பளங்கள் மற்றும் தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தூக்கமின்மையால் நீங்கள் பாதிக்கப்பட நேரலாம். முறையான தூக்கம் மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

திருமணத்திற்குக் காத்திருக்கும் மேஷ ராசி அன்பர்களுக்கு இது ஏற்ற நேரம் ஆகும். நீங்கள் பிறருடனான உறவை மேம்படுத்திக் கொள்வீர்கள். என்றாலும் உறவின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் அல்லது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். இந்த எதிர்மறை எண்ணங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். திருமணம் ஆனவர்களுக்கு குடும்ப உறுப்பினர் மற்றும் உடன் பிறந்தவர்க்ளுடனான உறவு சிறப்பாக இருக்கும். குழந்தைகளுடனான உறவு மத்திமமாக இருக்கும். அவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படும் வாய்ப்பு உள்ளது.

நிதிநிலையைப் பொறுத்தவரை சிறந்த வருமானம் இருக்கும் என்றாலும் எதிர்பாராத செலவுகளும் இருக்கும். உங்கள் ராசியில் இருந்து பன்னிரண்டாம் ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆவதால் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே நிதி விஷயங்களைக் கையாள்வதில் கவனம் தேவை. நீங்கள் கடனுக்கு விண்ணபித்து இருந்தால் அது இந்தக் காலக்கட்டத்தில் நிராகரிக்கப்படலாம். எனவே இருக்கும் பணத்தைக் கொண்டு தான் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய சூழல் இருக்கும். முதலீடுகளின் மூலம் லாபம் கிட்டும்.

மேஷ ராசி அன்பர்களே! உங்கள் உத்தியோகம் மற்றும் தொழில் சிறப்பாக நடக்கும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கும். கடந்த பெயர்ச்சி காலத்தில் நீங்கள் வேலையில் அதிக சிரமங்களை சந்த்தித்து இருப்பீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கேற்ற பலனை நீங்கள் அனுபவித்து இருக்க முடியாது. இந்த கடினமான சூழல் இந்த பெயர்ச்சியில் முடிவுக்கு வரும். நன்மையான பலன்கள் கிட்டும். வெளிநாடு சார்ந்த வேலையில் வெற்றிகரமான பலன்கள் கிட்டும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் புதிய யுத்திகளைக் கையாள்வீர்கள் கடன் வாங்கியோ அல்லது கூட்டு முறையிலோ தொழிலை விரிவுபடுத்த இந்த காலக்கட்டம் உகந்ததல்ல.

மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். ஆராய்ச்சி சம்பந்தமான படிப்பில் இருப்பவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். இந்தக் காலக்கட்டத்தில் மாணவர்களின் சிந்தனைத் திறன் சிறப்பாக இருக்கும். அவர்களின் புதுமையான சிந்தனைகள் காரணமாக அவர்கள் வெற்றியின் உச்சத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. மருத்துவம் சார்ந்த தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சிறப்பாகத் தேர்வுகளை எழுதி வெற்றி பெறுவார்கள். கடந்த காலத்தில் இருந்து வந்த கவனச் சிதறல் இப்பொழுது இருக்காது. மாணவர்கள் ஆற்றலுடன் செயல்படுவார்கள்.

எங்கள் நிபுணர் ஜோதிடருடன் பேசுங்கள்

இந்த ஜோதிட ஆலோசனை ராகு கேது போக்குவரத்து உங்களை தனிப்பட்ட மட்டத்தில் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், எப்போது செயல்பட வேண்டும், எப்போது காத்திருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க உதவுகிறது.

ராகு – கேது பெயர்ச்சி 2024 அறிக்கை

உங்கள் சந்திரன் அடையாளத்தின் அடிப்படையில் ராகு மற்றும் கேது போக்குவரத்து 2024 உங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கையை ஆர்டர் செய்யவும்.

ராகு – கேது பெயர்ச்சி 2024 க்கான தீர்வுகள்

ராகு கேது டிரான்ஸிட் ரெமிடியல் ஹோமம் (ஃபயர் லேப்) பாம்பு கிரகங்களை சமாதானப்படுத்தலாம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற உதவும்.

மேஷம் வீட்டில் செய்யக்கூடிய பரிகாரம்
  1. தினமும் விநாயகப் பெருமானையும், துர்க்கையையும் வழிபட்டு அவர்களின் அருளாசிகளைப் பெறுங்கள்.
  2. ராகு மற்றும் கேதுவிற்கு வாரம் ஒருமுறை 100 கிராம் உளுந்து மற்றும் கொள்ளு படைக்கவும்.
  3. முதியோர் இல்லங்களுக்கு மாதம் ஒருமுறை இனிப்பு வழங்குங்கள்.
  4. தினமும் கணேஷ சூக்தம் மந்திரத்தை பாராயணம் செய்யவும் அல்லது கேட்கவும்.