பெரும் நன்மைகளைச் செய்பவரும், மங்களங்களை அளிப்பவருமான குரு பகவான் (வியாழன் கிரகம்), இந்த 2022 ஆம் ஆண்டு, உங்கள் 9 மற்றும் 10 ஆம் வீடுகளில் சஞ்சரிக்கிறார். மிதுன ராசி அன்பர்களே! குரு இவ்வாறு 9 ஆம் வீடான கும்ப ராசியில் ஏப்ரல் 12, 2022 வரையிலும், பின்னர், உங்கள் 10 ஆம் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகி, அங்கு ஆண்டு முழுவதும் சஞ்சாரம் செய்கிறார். எனினும், ஜூலை இறுதியிலிருந்து நவம்பர் மத்திய காலம் வரை குரு, 10 ஆம் வீடான மீனத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பது, உங்கள் முன்னேற்றத்தை சற்றே மந்தப்படுத்தலாம்; இருப்பினும், பொதுவாக இது உங்களுக்கு ஓரளவு நல்ல காலமாகவே இருக்கும். தவிர, இந்த 2022 மிதுன ராசி அன்பர்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமையக் கூடும்.
வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம்; சில உற்சாகமான செய்திகள் உங்களுக்கு ஆனந்தம் தரலாம். மேலும், இந்த 2022 இல் உங்களது சில ஆசைகள் நிறைவேறுவதோடு, செல்வ வளம், சமுதாயத்தில் நன்மதிப்பு ஆகியவற்றையும் நீங்கள் பெறக்கூடும். தவிர பணியிடத்திலும் உங்கள் புகழ் ஓங்கக்கூடும்; அங்கு உங்களுக்கு ஆதாயமும், உங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரமும் கிடைக்கக்கூடும்.
வணிகம் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியும், லாபமும் பெறக்கூடும். குறிப்பாக உணவு விடுதிகள் மர்றும் பயணம் தொடர்பான வணிகமும், பருத்தி, ஜவுளி வியாபாரமும் நன்கு செயல்பட்டு, மிகுந்த லாபம் தரக்கூடும். இதுபோல, கலை, ஊடகம், வலைப்பதிவு, சந்தை வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்த 2022 இல் வளர்ச்சி, அதிக வருமானம், வெற்றி, மேன்மை ஆகியவற்றை அடையக்கூடும். மேலும், எழுத்து மற்றும் படைப்புத் துறையில் உள்ள சில மிதுன ராசி அன்பர்கள், சமுதாயத்தில் நன்மதிப்பு பெறும் வாய்ப்புள்ளது. இவற்றுடன் கூட, இசை, நடிப்பு, ஓவியம் வரைதல் போன்றவற்றிலும், சிலர் புகழ் பெறக்கூடும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண அஷ்டலக்ஷ்மி பூஜை
சிலர் தங்களுக்கு மிகவும் ஏற்ற, மனதுக்குப் பிடித்த துணையை இந்த ஆண்டு சந்திக்கும் வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் காதல் வாழ்க்கை இதமாகவும், அமைதியாகவும் செல்லக்கூடும்; காதல் துணையிடமிருந்து உங்களுக்கு ஆதரவு, அன்பு, சுகம், சந்தோஷம் ஆகியவை கிடைக்கக்கூடும். தவிர, நீண்ட நாள் காதலர்கள் சிலர், தங்கள் துணையைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. காதல் திருமணங்கள் வெற்றி பெறக்கூடும். அதே நேரம், இளையவர்கள், தங்களுக்கு ஏற்ற ஒருவருடன், இந்த 2022 இல் காதல் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
ஆனால், சிலர் வழி தவறிப் போய், குறுகிய காலத்திற்கு, ரகசிய அல்லது கள்ளக் காதல் போன்றவற்றில் ஈடுபடக்கூடும். இவ்வாறு சிலர், தங்கள் காதல் துணையை ஏமாற்றக் கூடும்; இதனால் நீண்ட நாள் உறவுகள் சிலவும் முறிந்து போகும் வாய்ப்புள்ளது. ஆனால் புதிய காதல் உறவு உங்களுக்கு மன மகிழ்ச்சி அளிக்கக்கூடும்; உங்கள் துணை, உங்களிடம் விசுவாசமாகவும், ஆதரவாகவும் நடந்து கொள்வார் எனலாம்.
திருமணமான தம்பதிகளுகிடையே வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட சுக்கிரன் பூஜை
உங்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சியும், இணக்கமும் தரும் எனலாம். உங்கள் கணவர் அல்லது மனைவி, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் உங்களுக்கு ஆதரவு அளித்து, இந்த 2022 இல் உங்களுக்கு, அமைதி, இன்பம், வளம் ஆகியவற்றை வழங்குவார் என எதிர்பார்க்கலாம். வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு நல்ல நெருக்கம் ஏற்படக்கூடும்; சிலருக்கு குழந்தை பாக்கியமும் ஏற்படக்கூடும். சிலர் தங்கள் விருப்பப்படி இந்த ஆண்டு திருமணமும் செய்து கொள்ளக்கூடும். மேலும், துணை அல்லது துணைவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும், பிரிந்து வாழ்பவர்களும், சென்றதை மறந்து, நெருங்கி வந்து, மீண்டும் சேர்ந்து வாழவும் வாய்ப்புள்ளது.
மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு, பணப்பற்றாக்குறை என்பதே இல்லாமல் போகலாம். கும்ப மற்றும் மீன ராசிகளில் நிகழும் குருப் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் மிகுந்த செல்வ வளம் தரக்கூடும். சிலர் இப்பொழுது, பெரும் செல்வந்தராக மாறவும், சமுதாயத்தில் நன்மதிப்பு அடையவும் வாய்ப்பு உள்ளது. சொத்து தொடர்பான நடவடிக்கைகள் மூலம் நீங்கள் கணிசமான லாபம் ஈட்டும் வாய்ப்பும் உள்ளது. தவிர, இந்த 2022 இல், பல்வேறு இடங்களிலிருந்து நீங்கள் வருமானமும், லாபமும் அடையக்கூடும். ஆனால், ஆடம்பர வாழ்க்கை, தேவையற்ற செலவுகள் போன்றவற்றால், நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு உங்களால் சேமிக்க இயலாமல் போகலாம். எனினும், இந்த ஆண்டு, நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
மிதுன ராசி மாணவர்கள், இந்த ஆண்டு, கல்வியிலும், தேர்வுகளிலும் மிகச் சிறந்து விளங்குவார்கள் எனலாம். சிலர் மருத்துவம், ஒன்றிய பொது நிர்வாகத் துறை தொடர்பான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி அடையக்கூடும்; சிலருக்குத் பரிட்சைகள், நேர்முகத் தேர்வு போன்றவை மூலம் அரசாங்க உயர் பதவிகள் கிடைக்கலாம். மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோர், இந்த 2022 இல் பெரும் வெற்றி பெறக்கூடும். தவிர மருத்துவம், பொறியியல், கணினி, மென்பொருள் தொடர்பான கல்விகளும் வெற்றி தரக்கூடும். சிலருக்குக் கல்வி உதவித் தொகை கிடைக்கவும், வெளி நாடுகளில் தங்கள் கல்வியை வெற்றிகரமாக முடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த 2022 இல் உங்கள் ஆரோக்கியம் நன்றாகக் காணப்படுகிறது. உங்கள் உடல் ஆற்றலும், நோய் எதிர்ப்புத் திறனும் நன்கு அமையக்கூடும். ஆயினும், உங்கள் குழந்தைகள், வாழ்க்கைத் துணை, குடும்பத்தினர் போன்றவர்கள் நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். ஆனால், நீண்ட நாள் நோய்களுக்கு, இந்த ஆண்டு, நல்ல நிவாரணம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
புதன்கிழமைகளில், பறவைகளுக்கும், நாய்களுக்கும் உணவளிக்கவும்
சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கும், பார்வை இல்லாதவர்களுக்கும் உணவு, உடை, பணம் தானம் செய்யவும்
அதிக அளவு பச்சை வண்ண ஆடைகளை அணியவும்
தினமும் வாகனைத் திரவியங்கள் பூசிக் கொள்ளவும்
வியாழக்கிழமைகளில் விஷ்ணு அல்லது சிவ ஆலயங்களுக்குச் சென்று வழிபடவும்
செவ்வாய், வியாழன், மற்றும் சனிக்கிழமைகளில் மதுவையும், மாமிச உணவையும் தவிர்க்கவும்.
எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், குருபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.
உங்களின் ராசிக்கான குருபெயர்ச்சி 2020 பலன்களை அறியவும், குருபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்
குரு ஹோமம் செய்வதன் மூலம், குருவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்