Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
சிம்ம ராசி பலன் 2024 | Leo Horoscope 2024 in Tamil | AstroVed Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
leo

சிம்மம் வருட ராசி பலன் 2024

இந்த வருடம் உங்கள் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். திருமணமான தம்பதிகளின் தாம்பத்திய வாழ்வு சிறக்கும். இது தங்களுக்கு உற்சாகத்தையும் மன மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். அரசு சம்மந்தமான தரகு தொழில் செய்பவர்களுக்கு தன நிலையில் ஏற்றம் உண்டாகும், லாபம் அதிகரிக்கும். இந்த வருடம் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களின் நட்பு வட்டாரம் விரிவாக்கம் அடையும். புதிய நண்பர்கள் மூலம் உங்களுக்கு தன உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் உயர்ந்த நிலை அடைவதற்கும் நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தாய் மற்றும் தந்தையின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

வருட ராசி பலன் 2024

சிம்மம்: குணாதிசயங்கள்

சிம்ம ராசியினர் உன்னதமானவர்கள். பரந்த இதயம் படைத்தவர்கள். பெருந்தன்மை வாய்ந்தவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் உயர் பதவியை அடைய வேண்டும் என்ற ஆவலுடன் இருப்பார்கள். இந்த ராசியினர் அதிகாரம், கண்ணியம், ஆற்றல், உற்சாகம், புகழ் ஆகியவற்றை பெற்றிருப்பார்கள். நிர்வாகம், சட்டம் மற்றும் அரசியல் விஞ்ஞானம் இவர்களுக்கு பிடித்தமான பாடங்கள் ஆகும்.

பரிகாரங்கள்:

  • ஞாயிற்று கிழமைகளில் சிவன் கோவிலில் உள்ள சிவலிங்க அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுத்து வழிபாடு செய்து வருவது சிறப்பு.
  • பிரதோஷ வழிபாடு வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும்.
  • ஆதித்யஹிருதய ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்வது நல்லது.
  • ஞாயிற்றுகிழமைகளில் விரதம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டும் ஒரு வேளை உணவாக உண்டு வந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
  • ஞாயிற்றுக் கிழமைகளில் சிகப்பு நிற ஆடைகளை உடுத்தி வருவது சிறப்பு.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

சூரியன் பூஜை

சாதகமான மாதங்கள் : ஜனவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC