• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    கால பைரவ ஹோமம்

    கால பைரவ ஹோமம்

    கால பைரவ ஹோமம் வெற்றி மற்றும் ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு உங்கள் நேரத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்காக காலத்தின் கடவுளான கால பைரவரின் அருளாசியைப் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. இந்த ஹோமத்தைச் செய்வதால் கால பைரவரின் ஆசீர்வாதங்களைப் பெறுவதோடு உங்கள் நேரத்தைச் சரியான முறையில் வெற்றிகரமாகப் பராமரிப்பதற்கும் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவுவதோடு வெற்றி அடைவதற்கும் ஆக்கப் பூர்வமாக செயல்படுவதற்கும் உதவியாக இருக்கிறது.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    நேர மேலாண்மை திறனுக்கான ஹோமம்

    அறிமுகம்

    Kala BhairavaHoma

    கால பைரவர், சிவபெருமானின் உக்ர அவதாரம் ஆவார். அவர், ‘காலம்’ எனப்படும் நேரத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். காலம் ‘பொன்’ போன்றது. கால பைரவ ஹோமம் என்பது, காலத்தின் கடவுளாம் பைரவரை குறித்து நடத்தப்படும் சிறப்பான வழிபாடாகும். இந்த ஹோமம், நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி நன்மைகளையும், வெற்றியையும் நீங்கள் பெறுவதற்கு உதவுகிறது.

    கடந்து போன காலம், மீண்டும் வருவதில்லை. ஆகவே காலத்தை நன்கு நிர்வகிப்பதும், காலம் தவறாமையை முறையாகக் கடைபிடிப்பதும், வாழ்க்கையின் வெற்றிக்கு மிகவும் தேவையானவை ஆகும். ஒழுக்கத்தை கடைபிடித்தும், காலத்தை சிறப்பாக உபயோகித்தும், வாழ்வை ஒளிமயமாக்கிக் கொள்வதற்காக, கால பைரவரின் ஆசி வேண்டி இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. கால பைரவ ஹோமத்தில் பங்கு கொண்டு, இறையருளால், நேர மேலாண்மைத் திறன் பெற்று வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

    கால பைரவ ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    நேரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. இந்த நவீன யுகத்தில், அவசர கதியில் இயங்கும் நமக்கு, கால பைரவ ஹோமம், பெருமதிப்பு மிக்க இந்த காலத்தை நன்கு நிர்வாகிக்கும் திறனை அளிக்க வல்லது. இந்த ஹோமத்திலிருந்து எழும் சக்தி, ஒவ்வொரு கணத்தின் மதிப்பையும் நம்மை உணரச் செய்து, காலந்தவறாமையையும் நமக்கு போதிக்க வல்லவை. இந்த ஹோமத்தின் மூலம், கால பைரவரை பூஜித்து, அவரை திருப்தி செய்து, அதன் மூலம், நீங்கள் குறித்த நேரத்திற்குள் பணிகளை எளிதாகவும், சிறப்பாகவும் முடிக்கும் திறனைப் பெற்றுப் பயன் பெறலாம்.

    பாரம்பரிய முறை ஹோமம்

    காலம் பொன் போன்றது. இந்த நவீன யுகத்தில், அவசர கதியில் இயங்கும் நமக்கு, கால பைரவ ஹோமம், பொன் போன்ற காலத்தை நன்கு நிர்வாகிக்கும் திறனை அளிக்க வல்லது. இந்த ஹோமத்திலிருந்து எழும் சக்திகள், ஒவ்வொரு கணத்தின் மதிப்பையும் நம்மை உணரச் செய்து, காலந்தவறாமையையும் நமக்கு போதிக்க வல்லவை. இந்த ஹோமத்தின் மூலம், கால பைரவரை பூஜித்து, அவரை திருப்தி செய்து, அதன் மூலம், நீங்கள் குறித்த நேரத்திற்குள் பணிகளை எளிதாகவும், சிறப்பாகவும் முடிக்கும் திறனைப் பெற்றுப் பயன் பெறலாம்.

    பாரம்பரிய முறை ஹோமம்

    கால பைரவ ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி தினம், கால பைரவருக்கு மிகவும் உகந்த நாள் என்பதால், அன்று இந்த ஹோமம் செய்வது மேலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதில் பங்கு கொண்டு, கால பைரவர் அருள் பெற்று, வாழ்க்கையில் மேன்மையுறலாம்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

    நன்மைகள்

    கால பைரவ ஹோமத்தின் நற்பலன்கள்
    • நேர மேலாண்மைத் திறன் மேம்படும்

    • விபத்துக்கள், பிற எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்

    • நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வெற்றிக்கான பாதை உருவாகும்

    • உங்கள் நிதி நிலை மேம்படும்

    • கடன்களிலிருந்து விடுதலை பெறலாம்

    • பாவ கர்மாக்கள் அகலும்

    • திறன்கள் பல மேம்படும்

    கால பைரவ ஹோம மந்திரங்கள்

    ஸ்வர்ண த்வஜாய வித்மஹே

    சூல ஹஸ்தாய தீமஹி

    தன்னோ கால பைரவ ப்ரசோதயாத்

    அல்லது

    ஓம் ஹ்ரம் கால பைரவாய நமஹ

    காணொளிகள்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here