• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
  • x
    x
    முருகர் ஹோமம்

    முருகர் ஹோமம்

    முருகர் ஹோமம் சக்தி வாய்ந்த ஹோமங்களில் ஒன்று ஆகும். எதிரிகள், மற்றும் போட்டியாளர்களிடமிருந்து பாதுகாப்பு பெற முருகனின் ஆசீர்வாதங்களைப் பெறலாம். வழக்குகள் மற்றும் பிற சட்ட சிக்கல்களைத் தவிர்க்க பிரார்த்தனைகள் மூலம் அனுக்கிரகம் பெறலாம். கடன்கள் மற்றும் நோய்களை சமாளிக்க முருகப்பெருமான் உதவியாக இருப்பார்.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    எதிரிகளை வெல்வதற்கான ஹோமம்

    அறிமுகம்

    Muruga Homa

    தமிழ்க் கடவுள் என்றும், சுப்பிரமணியர், ஆறுமுகர், கந்தர் என்றும் அழைக்கப்படும் முருகப் பெருமான் குறித்து செய்யப்படும் ஹோமம், முருகர் ஹோமம் ஆகும். சூரனை வதம் செய்த சுப்பிரமணிய சுவாமிக்காக செய்யப்படும் இந்த ஹோமத்திலிருந்து கிடைக்கும் அருளாசிகள், வழக்கு மற்றும் சட்ட சிக்கல்களிலிருந்து விடுபட உதவும். கடன் தொல்லை, நோய்கள் மற்றும் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றைத் தீர்க்கவும் இந்த ஹோமம் செய்யப்படுகிறது.

    முருக வழிபாடு என்பது காலங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. முருகன் தனது தாயாகிய பார்வதி தேவியிடமிருந்து‘வேல்’ ஆயுதம் பெற்று அரக்கன் சூரனை வென்றார். முருகரின் அந்த வேலானது, எதிரிகள் மனதில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துக் கூடியது. மேலும், ஞானத்தின் இருப்பிடமாகவே திகழும் தெய்வம் முருகர். அத்தகைய முருகப் பெருமானுக்கு நடத்தப்படும் இந்த ஹோமம், நீடித்த அமைதி, செல்வம் மற்றும் செழிப்பை அளிக்கக் கூடியது. இந்த ஹோமத்திலிருந்து பெறப்படும் ஆற்றல், நீங்கள் வெற்றி இலக்கை அடையவும், கடன்களைத் தீர்க்கவும், நோய்கள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறவும் துணை புரியும்.

    முருகர் ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    சூரனை சம்ஹாரம் செய்த மாவீரர் முருகர், உங்கள் வாழ்வில் தடைகளை நீக்கி, விருப்பங்கள் நிறைவேற வரமளிக்கும் தெய்வமாகவும் உள்ளார். எதிரிகள் மீது வெற்றி, சொத்து, கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு போன்ற வரங்களை இந்த முருகர் வழிபாட்டின் மூலம் பெறலாம் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். முருகப் பெருமானை ஆராதிக்கும் இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதின் மூலம், நீங்கள் உங்கள் லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வில் நன்மை தரும் மாற்றங்களைக் காணலாம். முருகனின் அற்புதமான சக்திகளின் மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தில் வியத்தகு மாற்றத்தையும் உணரலாம்.

    வீடு வாங்குதல், விற்றல், புது வீட்டிற்கு குடிபோகுதல், புதிய அலுவலகம் திறத்தல், ரியல் எஸ்டேட் போன்ற பணிகளை இந்த வழிபாடு நடத்தித் தொடங்குவது சிறந்த பயன் தரும். கடவுளின் அருளால் தீய ஆற்றல்கள் விலகும். சட்டச் சிக்கல்கள் தீரும். நீங்கள் யோகா மற்றும் ரெய்கீ போன்ற இயற்கை முறையில் நோய் தீர்க்கும் துறைகளில் ஈடுபட்டிருந்தால், இந்த ஹோமம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

    பாரம்பரிய முறை ஹோமம்

    முருகர் ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு கொண்டு, முருகப் பெருமானின் அருளால் உங்கள் அனைத்து பணி மற்றும் முயற்சிகளிலும் வெற்றி காணுங்கள்.

    முருகக் கடவுள் செவ்வாய் கிரகத்துக்கும் அதிபதியாக விளங்குகிறார். செவ்வாய்க்கு உரிய நாள் செவ்வாய்க்கிழமை. எனவே இந்த ஹோமத்தை, செவ்வாயன்று செய்வது சிறப்பானது. முருகருக்கு உகந்த சஷ்டி தினத்தன்றும் இதைச் செய்யலாம். எனினும், உங்கள் ஜென்ம நட்சத்திர நாளன்று இதைச் செய்வது மிகவும் நல்லது. இதன் மூலம் நீங்கள் வருடத்திற்கு ஒரு முறை இந்த ஹோமத்தைச் செய்து, தொடர்ச்சியான நன்மைகளைப் பெறலாம்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

    நன்மைகள்

    முருகர் ஹோமத்தின் நற்பலன்கள்

    வேத நூல்களின்படி, முருகர் ஹோமத்தின் மூலம், நீங்கள் கீழ்கண்ட பலன்களைப் பெறலாம்:

    • எதிரிகள் மற்றும் போட்டியாளர்களிடமிருந்து பாதுகாப்பு பெறலாம்

    • வலிமை, வைராக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பெறலாம்

    • கடன்களை சமாளிக்கலாம்

    • ஓம் என்ற மந்திரத்தின் அபார சக்தியின் ரகசியத்தை உணரலாம்

    • நேர்மறையான அணுகுமுறையையும், அசைக்க முடியாத நம்பிக்கையும் அடையலாம்

    முருகர் ஹோம மந்திரங்கள்

    ஓம் சௌம் சரவணபவாய ஸ்வாஹா

    அல்லது

    ஓம் முருகன் குமரன் குஹன் ஸ்வாஹா

    மேலும், கீழே கூறப்பட்டுள்ள எளிய மந்திரத்தையும் ஓதலாம் அல்லது எழுதலாம்

    சரவணபவ

    காணொளிகள்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here