• பொருட்கள் 0 US $ 0
  பதிவு செய்யவும்
  Signin
 • x
  x
  மிருத்யுஞ்ஜய ஹோமம்

  மிருத்யுஞ்ஜய ஹோமம்

  ம்ருத்யுஞ்ஜய ஹோமம், சிவபெருமானின் அருளாசி பெறுவதற்காக நிகழ்த்தப்படுகிறது. இந்த வழிபாட்டின் மூலம், மரண பயம் அகலும், மோட்சம் அடைய வழி பிறக்கும். இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க தெய்வீகக் சக்தி, நமது ஒவ்வொரு அணுவிலும் கலந்து, நம் மனதிலும், நம்மைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அறியாமையை விலக்குகிறது.
  {{variation.Name}}:
  {{variationdetail.VariationName}}
  {{oldPrice}} You Save {{Save}}
  {{Price}}
  இலவச ஷிப்பிங்
  அளவு:
  {{requiredQty}}
  {{prdvariation.ParentName}}:
  {{variation.Name}}
  {{childname.ChildVariationTypeName}}:
  {{childDetails.VariationName}}

  ஆயுள், ஆரோக்கியம், பாதுகாப்பு, வெற்றி அருளும் ஹோமம்

  அறிமுகம்

  Mrithyunjaya Homa

  மிருத்யு என்பது காலதேவனாகிய, யமனைக் குறிக்கும். சிவபெருமான், தனது பக்தனைக் காக்க இந்த மரண தேவனை வென்றதால், அவர் மிருத்யுஞ்ஜயர் என போற்றப்படுகிறார். காலனை வென்ற சிவனைக் குறித்துச் செய்யப்படும் ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆகும்.

  மகா மிருத்யுஞ்ஜய மந்திரம், ம்ருத சஞ்சீவனி ஸூக்தம், இந்த்ராக்ஷீ சிவ கவசம் போன்ற சக்தி வாய்ந்த மந்திரங்களின் உச்சாடணத்துடன் செய்யப்படும் மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம், சிவபெருமானின் அருளாசி பெறுவதற்காக நிகழ்த்தப்படுகிறது. இந்த வழிபாட்டின் மூலம், மரண பயம் அகலும், மோட்சம் அடைய வழி பிறக்கும். இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க தெய்வீகக் சக்திகள், நமது ஒவ்வொரு அணுவிலும் கலந்து, நம் மனதிலும், நம்மைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அறியாமையை விலக்குகிறது.

  மிருத்யுஞ்ஜய ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

  மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆயுள், ஆரோக்கியம், பாதுகாப்பு என்ற மூன்றையும் அருளக்கூடியது. இந்த ஹோமத்தில் ஜெபிக்கப்படும் மந்திரங்கள், தெய்வீக ஆற்றல் வாய்ந்தவை. பக்தியுடன் உச்சரிக்கப்படும் இவை, நம் ஆழ்ந்த விருப்பங்களையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றக் கூடியவை.

  இந்த ஹோமம், உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்தி, நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளித்து, தீராத வியாதிகளையும் தீர்க்கும் அருமருந்தாகும். மிருத்யுஞ்ஜய ஹோமத்தில் பங்கு கொண்டு, இதன் அளப்பரிய ஆற்றல் பெற்று, அதன் மூலம் அனைத்து தடைகளையும் நீக்கி, எதிர்மறை சக்திகளை வென்று, நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெறுங்கள்.

  பாரம்பரிய முறை ஹோமம்

  மிருத்யுஞ்ஜய ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. இதில், தெய்வீக அருள் பெற்ற மந்திரங்கள் பயபக்தியுடனும், அர்பணிப்புடனும், ஓதப்படுகின்றன. இவ்வாறு நிகழ்த்தப்படும் ஹோமம், ஆரோக்கியத்தை அளித்து, மரண பயத்திலிருந்து விடுவிக்கக் கூடியது.

  பிரசாதங்கள்

  இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

  குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

  நன்மைகள்

  மிருத்யுஞ்ஜய ஹோமத்தின் நற்பலன்கள்
  • நோய்கள் அகன்று, ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்

  • நீண்ட ஆயுள் கிடைக்கும்

  • பிறப்பு, இறப்பு என்ற சுழலிலிருந்து விடுபட இயலும்

  • தீமைகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும்

  • உங்கள் உள்ளும், புறமும் சக்தி பிறக்கும்

  • பலமும், மன வலிமையும் பெருகும்

  • மரண பயம் தொலையும்

  மிருத்யுஞ்ஜய ஹோம மந்திரம்

  ஜும் ஸா ஸா ஜும் ஜும் ஓம் அம்ருத் மிருத்யுஞ்ஜயாய நமஹ

  காணொளிகள்

  வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

  வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

  ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here