• பொருட்கள் 0 US $ 0
  பதிவு செய்யவும்
  Signin
 • x
  x
  மூல நட்சத்திர ஹோமம்

  மூல நட்சத்திர ஹோமம்

  மூல நட்சத்திரம், சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘ஆண் மூலம் அரசாளும்’ என, இதன் பெருமையைப் பேசும் பழமொழிகளும் உண்டு. மூல நட்சத்திர ஹோமம், இந்த நட்சத்திரத்தைக் குறித்துச் செய்யப்படும் சக்தி வாய்ந்த ஹோம வழிபாடாகும். இந்த ஹோமத்தின் வழியே, அந்த நட்சத்திரத்தை சாந்தப்படுத்தி சாதகமான விளைவுகளைப் பெற முடியும். இந்த நட்சத்திர ஹோமத்தில் பங்கு கொண்டு, இதன் தெய்வீக ஆற்றலை உங்கள் நாடி நரம்பெல்லாம் பரவச் செய்து, எதிர்மறைத் தாக்கங்களை நீக்கி, வாழ்வில் வளம் பெறுங்கள்.
  {{variation.Name}}:
  {{variationdetail.VariationName}}
  {{oldPrice}} You Save {{Save}}
  {{Price}}
  இலவச ஷிப்பிங்
  அளவு:
  {{requiredQty}}
  {{prdvariation.ParentName}}:
  {{variation.Name}}
  {{childname.ChildVariationTypeName}}:
  {{childDetails.VariationName}}

  மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை தரும் ஹோமம்

  அறிமுகம்

  Moola Nakshatra Homa

  மூல நட்சத்திரம், சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.‘ஆண் மூலம் அரசாளும்’ என, இதன் பெருமையைப் பேசும் பழமொழிகளும் உண்டு. மூல நட்சத்திர ஹோமம், இந்த நட்சத்திரத்தைக் குறித்துச் செய்யப்படும் சக்தி வாய்ந்த ஹோம வழிபாடாகும். இந்த ஹோமத்தின் வழியே, அந்த நட்சத்திரத்தை சாந்தப்படுத்தி சாதகமான விளைவுகளைப் பெற முடியும். இந்த நட்சத்திர ஹோமத்தில் பங்கு கொண்டு, இதன் தெய்வீக ஆற்றலை உங்கள் நாடி நரம்பெல்லாம் பரவச் செய்து, எதிர்மறைத் தாக்கங்களை நீக்கி, வாழ்வில் வளம் பெறுங்கள்.

  மூல நட்சத்திர ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

  மூல நட்சத்திர ஹோமம், தனித்தன்மையுடன் கூடிய ஒரு சிறந்த வழிபாடாகும். மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை, அவள் வீட்டிற்கு வலுவான ஆற்றலைக் கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது. இதனால் தீய விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த நிலையைச் சமாளிப்பதற்கு, முறையான நிவாரணம் தேவை. மூல நட்சத்திர ஹோமம், இதைக் கருத்தில் கொண்டு செய்யப்படுகிறது. இதனால், மூல நட்சத்திரத்தின் காரணமாக ஏற்படும் அசுப விளைவுகள் குறையும். குறிப்பாக, மூல நட்சத்திரப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்னரோ அல்லது அவள் திருமணம் நடப்பதற்கு முன்னரோ, இந்த ஹோமம் செய்வது மிக்க நல்லது.

  பாரம்பரிய முறை ஹோமம்

  மூல நட்சத்திர ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. மூல நட்சத்திர நாளில், சுப ஹோரைகளான புதன், குரு, சுக்ர ஹோரைகளில் இந்த ஹோமத்தைச் செய்யலாம். இதனால் நல்ல பல பலன்கள் விளையும்.

  பிரசாதங்கள்

  இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

  குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

  நன்மைகள்

  மூல நட்சத்திர ஹோமத்தின் நற்பலன்கள்
  • மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த நன்மைகள் நடக்கும். அவள் பெற்றோர்களும் நன்மை பெறுவார்கள்

  • அந்த பெண்ணின் மண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்

  • மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, எதிர்மறைத் தாக்கங்கள் நீங்கி, அதிர்ஷ்டம் ஏற்படும்

  • மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்

  • வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

  மூல நட்சத்திர ஹோம மந்திரம்

  ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஸஹ் குரவே நமஹ

  காணொளிகள்

  வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

  வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

  ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here