• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    குக்குட ஹோமம்

    குக்குட ஹோமம்

    குக்குட என்ற வடமொழிச் சொல், சேவல் என்ற பொருள்படும். இந்த சொல், தமிழ்க் கடவுள் முருகனின் கையில் விளங்கும் கொடியின் தெய்வீகச் சின்னமாகிய சேவலைக் குறிக்கிறது. முருகப்பெருமானின் தெய்வீக ஆற்றல் நிறைந்த சேவல் கொடியானது, எதிர்மறை ஆற்றலையும், தீமையையும் அழிக்க வல்லது. குக்குட ஹோமம் என்ற சக்தி வாய்ந்த வழிபாடு, இந்த தெய்வீக சேவலுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    எதிர்மறை ஆற்றலை வெற்றி கொள்ள உதவும் ஹோமம்

    அறிமுகம்

    Kukuta Homa

    குக்குட என்ற வடமொழிச் சொல், சேவல் என்ற பொருள் படும். இந்த சொல், தமிழ்க் கடவுள் முருகனின் கையில் விளங்கும் கொடியின் தெய்வீகச் சின்னமாகிய சேவலைக் குறிக்கிறது. முருகப்பெருமானின் தெய்வீக ஆற்றல் நிறைந்த சேவல் கொடியானது, எதிர்மறை ஆற்றலையும், தீமையையும் அழிக்க வல்லது. குக்குட ஹோமம் என்ற சக்தி வாய்ந்த வழிபாடு, இந்த தெய்வீக சேவலுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

    இந்த ஹோமம், முருகப் பெருமானின் திருவருளைப் பெற்றுத் தரக் கூடியது. உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை தாக்கங்களை நீக்கி, ஆன்மாவின் அழுக்குகளை விலக்கி, மகத்தான சக்திகளை வழங்க வல்லது. அசாதாரண ஆற்றலைத் தரும் இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, உங்களைத் தடை செய்யும் எதிர்மறை சக்திகளை நீக்கி, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

    குக்குட ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    முருகனின் தெய்வீக சேவல் குறித்துச் செய்யப்படும் இந்த குக்குட ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், இந்த உலகத்தையே எதிர் கொள்ளும் நம்பிக்கை உங்களுக்குள் ஏற்படும். இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் தெய்வீக ஆற்றல்கள், உங்களைச் சூழ்ந்துள்ள எதிர்மறை சக்திகளை நீக்கி, உங்களது நலனை மேம்படுத்தக் கூடியவை.

    மேலும், சோம்பல், உற்சாகமின்மை, கடன், உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் ஆரோக்கியக் குறைபாடு போன்ற எதிர்மறை பாதிப்புகளிலிருந்து, உங்களை காக்கும் சக்தியும் இந்த ஹோமத்துக்கு உண்டு.

    பாரம்பரிய முறை ஹோமம்

    குக்கூட ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு கொண்டு, முருகப் பெருமானின் அருளால், கடன்கள் தீர்ந்து, வாழ்க்கையில் சாதகமான பல மாற்றங்களைக் கண்டு, புதிய நம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ளுங்கள். குறிப்பாக, செவ்வாய் ஹோரையில் இந்த ஹோமம் செய்வது, அதிக பலன்களைத் தரும்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

    நன்மைகள்

    குக்குட ஹோமத்தின் நற்பலன்கள்

    • அனைத்து செயல்களிலும் வெற்றி காணலாம்

    • எதிர்மறை விளைவுகளை தவிர்க்கலாம்

    • சோம்பல் மற்றும் உற்சாகமின்மையிலிருந்து விடுபடலாம்.

    • கடன்களிலிருந்து விடுபடலாம்

    • உங்கள் இலக்குகளை அடைய உந்து சக்தி பெறலாம்

    • ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்திக் கொள்ளலாம்

    • வெற்றிக்கான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளலாம்

    குக்குட ஹோம மந்திரம்

    ஓம் சாம் சரவணபவாய நமஹ

    குக்குட ஹோமம்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here