• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    பார்வதி ஹோமம்

    பார்வதி ஹோமம்

    பார்வதி ஹோமம் சக்தி மிக்க ஹோமங்களுள் ஒன்றாகும். இந்த ஹோமம் செய்வதன் மூலம் பிரபஞ்சத்தின் அன்னையான பார்வதி தேவியின் ஆசீர்வாதங்களைப் பெறலாம். ஒரு இனிமையான மற்றும் இணக்கமான குடும்பம்தான் அமைதி, மகிழ்ச்சி, வெற்றி ஆகியவற்றின் ஆதாரமாக இருக்கிறது. பார்வதி ஹோமத்திலிருந்து உருவாகும் தெய்வீக சக்தி உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் இணக்கத்தையும் ஏற்படுத்தும். எண்ணிலடங்காத நற்பலன்கள் கிடைக்கும்.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் காண உதவும் ஹோமம்

    அறிமுகம்

    Parvati Homa

    அகிலத்தைக் காக்கும் ஆதி சக்தியாக விளங்குபவள், பார்வதி தேவி. சிவனின் சரி பாதியாகத் திகழும் சக்தியாம் அன்னை பார்வதி தேவியின் கருணைக் கடாட்சம் இருந்தால் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும், இன்பமும் பொங்கும். பிரபஞ்சத்தின் தாயாக விளங்கும் பார்வதி தேவியைக் குறித்து செய்யப்படும் ஹோம வழிபாடே பார்வதி ஹோமம் ஆகும். பார்வதி ஹோமம் செய்வதன் மூலம், அன்னையின் அருளால் உங்கள் குடும்பத்திலும், வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் உருவாகும்.

    இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், உங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளத் தேவையான நம்பிக்கை பெறலாம். உங்களைச் சுற்றிலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். சிக்கல்களுக்குத் தீர்வும், முயற்சிகளில் வெற்றியும் காணலாம். குடும்ப வாழ்க்கையில் நிலவும் எதிர்மறைத் தாக்கங்களை எல்லாம் விலக்கி, வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பை வலுப்படுத்திக் கொள்ளலாம். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, பார்வதி தேவியின் அருள் பெற்று, நல்ல மாற்றங்களை உங்கள் வாழ்வில் கண்டு, ஏற்றம் பெறுங்கள்.

    பார்வதி ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    இந்த வழிபாடு தனிச் சிறப்பு வாய்ந்தது. இந்த ஹோமத்தின் மூலம், சிறந்த ஆற்றல் வெளிப்படுகின்றது. கடினமான பணிகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றும் திறனை, அது உங்களுக்கு அளிக்கக் கூடியது. இந்த ஹோமத்திலிருந்து வரும் தெய்வீக சக்திகள், தாம்பத்திய உறவில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது. வளமையையும், செல்வச் செழிப்பையும் அளிக்க வல்லது.

    பாரம்பரிய முறை ஹோமம்

    பார்வதி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. தமிழ் மாதங்களின் முதல் நாட்கள் மற்றும் சதுர்தசி திதி, இந்த ஹோமம் செய்வதற்கு உகந்த நாட்களாகக் கருதப்படுகின்றன. பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, நவமி தினங்களும், இந்த ஹோமத்துக்கு ஏற்றவை ஆகும்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

    நன்மைகள்

    பார்வதி ஹோமத்தின் நற்பலன்கள்
    • உங்கள் குடும்ப வாழ்வில் எதிர்மறைத் தாக்கங்கள் விலகும்

    • மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஓங்கும்

    • வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு வலுப்படும்

    • இடையூறுகளற்ற, அமைதியான வாழ்க்கை வாழ இயலும்

    பார்வதி ஹோம மந்திரம்

    ஓம் க்லீம் பார்வத்யை நமஹ

    பார்வதி ஹோமம்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here