• பொருட்கள் 0 US $ 0
  பதிவு செய்யவும்
  Signin
 • x
  x
  காயத்ரி ஹோமம்

  காயத்ரி ஹோமம்

  காயத்ரி, சாவித்ரி, மற்றும் சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் ஒருங்கிணைந்த நற்பன்புகளாகிய நல்லுணர்வு, நல்ல மனம் மற்றும் நல்ல வாக்கு ஆகியவற்றை வேண்டி செய்யும் ஹோமம் காயத்ரி ஹோமம் ஆகும். மூன்று தெய்வங்களும் இணைந்து உலகை ஆள்வதாலும், உயிர்கள் அனைத்தின் ஆற்றலாக விளங்குவதாலும் இந்த ஹோமம் சுக்ருத ஹோமம் என்று அழைக்கபடுகின்றது.
  {{variation.Name}}:
  {{variationdetail.VariationName}}
  {{oldPrice}} You Save {{Save}}
  {{Price}}
  இலவச ஷிப்பிங்
  அளவு:
  {{requiredQty}}
  {{prdvariation.ParentName}}:
  {{variation.Name}}
  {{childname.ChildVariationTypeName}}:
  {{childDetails.VariationName}}

  நீண்ட ஆயுள், நல்வாழ்வு அருளும் ஹோமம்

  அறிமுகம்

  Gayatri Homa

  வெற்றி மற்றும் அறிவுத் திறனுக்கான ஹோம வழிபாடு

  காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என்ற மூன்று பெரும் பெண் தெய்வங்கள், முறையே புலன்கள், அறிவு, பேசும் திறன் ஆகியவற்றைக் குறிக்கிறார்கள். பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள இந்த முப்பெரும் தேவிகள், கூட்டாக, அனைத்து ஜீவராசிகளின் உயிர் ஆற்றலைக் குறிக்கிறார்கள். ஆகவே, இவர்கள் மூவரையும் குறித்துச் செய்யப்படும் காயத்ரி ஹோமம், அனைத்து ஹோம வழிபாடுகளிலும் மிகவும் புனிதமான ஒன்றாகக் கருதப்பட்டு, சுக்ருத ஹோமம் என அழைக்கப்படுகிறது. இந்த மூன்று தெய்வங்களின் சாரமாகக் கருதப்படும் காயத்ரி தேவி, உலக மாதா எனவும், பெரும் ஆற்றல் படைத்த பரம சக்தி எனவும் போற்றி வழிபடப்படுகிறாள்.

  காயத்ரி ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

  காயத்ரி தேவி, இவ்வுலகில் ஓதப்படும் அனைத்து காயத்ரி மந்திரங்களின் சாரத்தின் வடிவமாகவே திகழ்கிறாள். செந்தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் இவர், ஞானிகளின் இதய கமலத்தைக் குறிக்கிறாள். ஐந்து முகங்களுடன், பஞ்சமுகி என்ற பெயரில் விளங்கும் காயத்ரி தேவியின் முகங்கள், ஐந்து புலங்களையும், ஐந்து பிராணன்கள் எனப்படும் ஐந்து உயிர் சக்திகளையும் பிரதிபலிக்கிறது. அவற்றைத் தூய்மைப் படுத்துகிறது. பத்து கண்களுடன், அனைத்து திசைகளையும் நோக்கும் அன்னை காயத்ரி, வெள்ளை அன்னப்பறவையுடன் காட்சி தருகிறாள். கையில் புத்தகத்தை ஏந்தியுள்ள அவர், புத்தி, ஞானம் ஆகியவற்றின் பிறப்பிடமாகவே திகழ்கிறார்.

  இவரை வழிபடும் விதமாகச் செய்யப்படும் காயத்ரி ஹோமம், இவரது பரிபூரணமான அருளையும், அதனால் விளையும் நன்மைகள் பலவற்றையும் பெற்றுத் தரும். இந்த வழிபாட்டில் தவறாமல் கலந்து கொள்வதன் மூலம், உங்கள் அறிவுத் திறன் மேம்படும். நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், வாழ்க்கை வளங்கள் போன்ற பல நலன்களும் விளையும்.

  பாரம்பரிய முறை ஹோமம்

  காயத்ரி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. புத்துணர்வூட்டும் இந்த வழிபாடு, சோர்வை விரட்டி, தடைகளைக் களைந்து முன்னேறும் ஆற்றலை அளிக்க வல்லது. உங்கள் குழந்தைகளை நோய்களிலிருந்து காப்பாற்றி, தடைகளற்ற, அமைதியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கை நடத்த வகை செய்யக் கூடியது. .

  பிரசாதங்கள்

  இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

  குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

  நன்மைகள்

  காயத்ரி ஹோமத்தின் நற்பலன்கள்

  இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதும், புனிதமான காயத்ரி மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் ஜபிப்பதும், பலவகை நன்மைகளை அளிக்கக் கூடியவை. இதனால் அன்னை காயத்ரியின் அருள் கிடைக்கும். அந்த தெய்வீக சக்தியின் துணையுடன், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். மேலும்

  • உடலும், மனமும் தூய்மை பெறும்

  • மனம், சோர்வு அகன்று, தளைகளிலிருந்து விடுபட்டு, ஒருமுகப்பட்டு, வலிமை பெறும்

  • ஆரோக்கியம் மேம்படும். ஆற்றல் பெருகும்

  • ஞானம் பிறக்கும்

  • எல்லையற்ற சிந்தனை மற்றும் செயல் திறன், சூரியனின் அபார சக்தி ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்படும். இதனால் பெரும் பயன் அடையும் வாய்ப்பு கிடைக்கும்

  காணொளிகள்

  வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

  வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

  ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here