• பொருட்கள் 0 US $ 0
  பதிவு செய்யவும்
  Signin
 • x
  x
  பிரத்தியங்கிரா தேவி ஹோமம்

  பிரத்தியங்கிரா தேவி ஹோமம்

  ப்ரத்யங்கிரா ஹோமம் மூலம் ப்ரத்யங்கிரா தேவியின் ஆசிர்வாதங்களைப் பெறமுடியும். ப்ரத்யங்கிரா ஹோமத்தை நிகழ்த்துவதினால், வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை நீங்கள் பெறுவீர்கள். இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் சக்தியானது தீமைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் -அதாவது எதிரிகள், விபத்துக்கள், திருஷ்டி என எந்த வடிவத்தில் இருந்தாலும் அவற்றை விரட்டுவதற்கு உதவியாக இருக்கிறது. நீங்கள் அன்னையின் அருளால் அமைதி மற்றும் , செல்வச் செழிப்பை பெறுவீர்கள். தேவயின் அருள் உங்களை அரண் போல் பாதுகாக்கும்.
  {{variation.Name}}:
  {{variationdetail.VariationName}}
  {{oldPrice}} You Save {{Save}}
  {{Price}}
  இலவச ஷிப்பிங்
  அளவு:
  {{requiredQty}}
  {{prdvariation.ParentName}}:
  {{variation.Name}}
  {{childname.ChildVariationTypeName}}:
  {{childDetails.VariationName}}

  தீமைகளை அகற்றி நன்மை அருளும் ஹோமம்

  அறிமுகம்

  Prathyangira Devi Homa

  சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சக்தியின் வடிவம், அன்னை பிரத்தியங்கிரா தேவி. இந்த இறைவி குறித்து நடத்தப்படும் சக்தி வாய்ந்த ஹோமமே, பிரத்தியங்கிரா தேவி ஹோமம் ஆகும். துஷ்ட சக்திகளை தவிடு பொடி ஆக்கவும், கண் திருஷ்டி மற்றும் பிற விரோத சக்திகளிலிருந்து பாதுகாப்பு பெறவும், இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. பிரத்தியங்கிரா தேவி ஹோமம், உங்களைச் சுற்றியுள்ள தீமைகளை விலக்கி நன்மை அருளி, உங்கள் வாழ்வை நல்ல முறையில் மாற்றக் கூடியது.

  வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் யாவற்றுக்கும் தீய சக்திகளே காரணமாக அமைகின்றன. இவையே, நமது உடல் மற்றும் மன வியாதிகளுக்கு காரணமாகவும் இருக்கின்றன. அவை யாவும் நீங்கி நன்மை பெற, பிரத்தியங்கிரா தேவி ஹோமம் உதவி புரிகிறது. எதிரிகள், விபத்துக்கள், கண் திருஷ்டி மற்றும் பிற விரோத சக்திகளிலிருந்து பாதுகாப்பு பெற, பிரத்தியங்கிரா தேவி ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள். இதன் மூலம், உங்கள் உடல் வியாதிகள், மன வேதனைகள் மற்றும் பிற தேவையற்ற நிகழ்வுகள் அனைத்தும், உங்கள் வாழ்விலிருந்து மாயமாக மறைந்து, உங்கள் உணமையான திறனை நீங்கள் உணர வழி ஏற்படும். பிரத்தியங்கிரா தேவி ஹோமத்தில் பங்கு கொண்டு, துரதிருஷ்டங்களை விலக்கி, அமைதி, மகிழ்ச்சி மற்றும் அனைத்து செயல்களிலும் வெற்றி காணுங்கள்.

  பிரத்தியங்கிரா தேவி ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

  தனிச் சிறப்பு வாய்ந்த இந்த ஹோமம் ஆன்மீக ஆற்றலை அளித்து, தீமைகள் மற்றும் இடையூறுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க வல்லது. இந்த ஹோமத்தின் மூலம், பணியிடத்தில் காணப்படும் அனுகூலமற்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கும் திறன் பெறுங்கள். மனக் கவலைகளை நீக்குங்கள். தீய கர்மாக்களை விலக்குங்கள். உங்கள் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் மற்ற தடைகளைத் தகர்த்து, வெற்றி காணுங்கள். இதன் மூலம், உங்கள் வாழ்க்கையையே அர்த்தமுள்ளதாக்குங்கள்.

  பாரம்பரிய முறை ஹோமம்

  பிரத்தியங்கிரா தேவி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு கொண்டு, பிரத்தியங்கிரா தேவியின் அருள் பெற்று, வாழ்க்கையில் தீமைகளை விலக்கி, பல நன்மைகளைப் பெற்றிடுங்கள்.

  அமாவாசை மற்றும் அஷ்டமி திதி நாட்களில் இந்த ஹோமம் செய்வது, மேலும் பல சிறந்த பலன்களைப் பெற்றுத் தரும்.

  பிரசாதங்கள்

  இந்த ஹோம வழிபாட்டில், நீங்கள் வழிபடுவதற்காக, சக்தியூட்டப்பட்ட பிரத்தியங்கிரா தேவி யந்திரம் (3 இன்ச் அளவு கொண்டது) வழங்கப்படும். மேலும், ஹோம பஸ்மம் மற்றும் குங்குமமும், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

  குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

  நன்மைகள்

  பிரத்தியங்கிரா தேவி ஹோமத்தின் நற்பலன்கள்
  • எதிர்மறை சக்திகளை வெல்லலாம்

  • துஷ்ட சக்திகளை அண்ட விடாமல் தடுக்கலாம்

  • நேர்மறை ஆற்றல் பெறலாம்

  • எதிரிகளை வெற்றி கொள்ளலாம்

  • விபத்துக்களைத் தடுக்கலாம்

  • கண் திருஷ்டிகளை களையலாம்

  • உடல் வியாதிகளை குணப்படுத்தலாம்

  • மனக் கோளாறுகளை நீக்கலாம்

  • அமைதி மற்றும் வளமான வாழ்வு பெறலாம்

  பிரத்தியங்கிரா தேவி ஹோம மந்திரம்

  அவும் ஹ்ரீம் க்ஷம் பக்ஷ ஜ்வால ஜிஹ்வே பிரத்யங்கிரே க்ஷம் பட் அவும் ஹ்ரீம் தும் உத்திஷ்ட புருஷி கிம் ச்வபிஷி பயம் மே சமுபாஸ்திதம் யதி ஷக்யம் அஷக்யம் வா தன் மே பகவதி சம்ய சம்ய ஸ்வாஹா தும் ஹ்ரிம் அவும்

  காணொளிகள்

  வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

  வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

  ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here