• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    ஹனுமான் ஹோமம்

    ஹனுமான் ஹோமம்

    ஹனுமன் ஹோமம் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். சிவபெருமானின் தெய்வீக அவதாரம் அல்லது பதினொன்றாம் ருத்ரன் என்று அழைக்கப்படும் ஹனுமன், வலிமை மற்றும் விசுவாசத்தின் அடையாளமாக விளங்குகிறார். ஹனுமனின் தெய்வீக ஆசீர்வாதத்தால் தைரியத்தையும் மன அமைதியையும் பெற முடியும். எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத அபாயங்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். சாபங்கள் மற்றும் திருஷ்டி காரணமாக ஏற்படும் ஆபத்துக்களை தடுக்க முடியும்
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    வலிமை, தைரியம் அளிக்கும் ஹோமம்

    அறிமுகம்

    Hanuman Homa

    ஹனுமான், சிறந்த ராம பக்தர். ருத்ர மூர்த்தியின் அம்சமாகக் கருதப்படுபவர். வலிமை, பக்தி மற்றும் பணிவைக் குறிப்பவர். ஹனுமானின் தெய்வீக சக்தி தைரியம், மன அமைதி, பாதுகாப்பு மற்றும் வெற்றியை அளிக்கும். தூய மனதுடன் அவரிடம் சரணடையும் அனைவருக்கும் அவர் அனுக்கிரகம் புரிகிறார்.

    ஹனுமான் ஹோமம், இந்த சக்தி வாய்ந்த கடவுளைக் குறித்து செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தின் தெய்வீக சக்தி, நம்முள் ஆன்மீக ஆற்றலை உருவாக்குகிறது. இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதின் மூலம் ஹனுமானின் பரிபூரண ஆசிகளைப் பெற்று, நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தலாம்.

    ஹனுமான் ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    ஹனுமான் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவர். சங்கட மோச்சன், அதாவது துன்பங்களைக் களைபவர், எனப் போற்றப்படும் இவர், மனித குலத்தை கஷ்டங்களிலிருந்து விடுவிக்கக்கூடியவர். ஹனுமான் ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், ஒருவர் தன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை தைரியத்துடன் எதிர் கொள்ள இயலும். மேலும், கடினமான பணிகளையும் எளிதாக மேற்கொண்டு முடிக்க இயலும். ஹோமத்திலிருந்து வெளிவரும் சக்திகள், உங்கள் மனதில் நேர்மறை ஆற்றலைத் தூண்டி, கடினமான பணிகளையும் சாதிக்கும் வல்லமை அளிக்கக் கூடியது.

    பாரம்பரிய முறை ஹோமம்

    ஹனுமான் ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. குறிப்பாக, சனி கிரகத்தின் தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்களுக்கு, இந்த ஹோமம் ஒரு வரப் பிரசாதமாக இருக்கும். எனவே, சனி தசை அல்லது சனி புக்தி நேரத்தில் இந்த ஹோமத்தைச் செய்து, அனைத்துத் தீய விளைவுகளிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

    நன்மைகள்

    ஹனுமான் ஹோமத்தின் நற்பலன்கள்
    • வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் தைரியத்தை அடையலாம்

    • தனிப்பட்ட மற்றும் சமூக குறிக்கோள்களை அடைய மன உறுதியை மேம்படுத்திக் கொள்ளலாம்

    • பணியில் ஸ்திரத்தன்மை காணலாம்

    • குறிக்கோள்களை அடைவதற்கான திறனை வளர்த்துக் கொள்ளலாம்

    • வெற்றி மற்றும் மகிழ்ச்சி காணலாம்

    • தொழில், அரசியல் போன்றவற்றில் செல்வாக்கு பெறலாம்

    ஹனுமான் ஹோம மந்திரங்கள்

    ஓம் ரீங் ஹ்ரீங் மர்கட மர்கடய ஸ்வாஹா

    அல்லது

    ஓம் ஆஞ்சநேயாய ஸ்வாஹா

    இத்துடன், ராம ராம ராம என ராம நாமத்தையும் ஜபிக்கலாம்

    காணொளிகள்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here