• பொருட்கள் 0 US $ 0
  பதிவு செய்யவும்
  Signin
 • x
  x
  உமா மகேஸ்வர ஹோமம்

  உமா மகேஸ்வர ஹோமம்

  உமா மகேஸ்வர ஹோமம், சிவனையும் சக்தியையும் ஒரு சேர வழிபடும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிவன் (மகேஸ்வரன்) மற்றும் அவரது துணைவியான சக்தி (உமா) ஆகிய இரு தெய்வங்களின் ஆசீர்வாதங்களைப் பெற இந்த ஹோமம் நடத்தப்படுகின்றது. உமா மகேஸ்வர ஹோமத்தைச் செய்வதால் உங்கள் வாழ்க்கைத்துணையுடன் ஏற்படும் உறவுச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதோடு ஒருவருக்கொருவர் இணக்கமான உறவை வளர்த்துக்கொள்ள இயலும்.
  {{variation.Name}}:
  {{variationdetail.VariationName}}
  {{oldPrice}} You Save {{Save}}
  {{Price}}
  இலவச ஷிப்பிங்
  அளவு:
  {{requiredQty}}
  {{prdvariation.ParentName}}:
  {{variation.Name}}
  {{childname.ChildVariationTypeName}}:
  {{childDetails.VariationName}}

  திருமண பந்தம் சிறப்பதற்கான ஹோமம்

  அறிமுகம்

  Uma Maheshwara Homa

  மகேஸ்வரன் என்பது சிவபெருமானைக் குறிக்கும். அவரது துணைவியான உமா, சிவனின் ஒரு பாதி பாகமாகத் திகழும் சக்தியாக விளங்குகிறாள். இந்த சிவ சக்தி வடிவம், தெய்வீக அன்பின் பிரதிபலிப்பாக விளங்குகிறது. இருவரையும், ஒருசேர போற்றி வழிபடும் வழிபாடு, உமா மகேஸ்வர ஹோமம் ஆகும். இந்த ஹோமம் தம்பதியரிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும்.

  அன்பும், இணக்கமும் கொண்ட திருமண உறவைப் பகிர்ந்து கொள்ளும் இந்த தெய்வீக தம்பதிகள் குறித்துச் செய்யப்படும் உமா மகேஸ்வர ஹோமம், கணவன் மனைவி இடையே ஏற்படும் விரிசலை சரி செய்து, இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வகை செய்யும். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, உங்கள் திருமண வாழ்க்கையை சுகமான அனுபவமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

  உமா மகேஸ்வர ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

  கணவன் மனைவி இடையே ஏற்படும் சச்சரவுகள் மற்றும் மண முறிவுகளை தீர்க்கும் சாதனமாக, உமா மகேஸ்வர ஹோமம் விளங்குகிறது. இது, தாம்பத்திய உறவில் ஏற்படும் சிக்கல்களைக் களைந்து, தம்பதியரிடையே நல்லுறவை ஏற்படுத்தக் கூடியாது. இதன் மூலம், உங்கள் துணையுடன் நல்ல இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, இதமான மண வாழ்க்கை வாழ முடியும். தம்பதியர் ஒருவரை ஒருவர் மதித்து, அன்பாய் வாழ இந்த ஹோமம் உதவுகிறது.

  பாரம்பரிய முறை ஹோமம்

  உமா மகேஸ்வர ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு கொண்டு, திருமண வாழ்வில் வெற்றி பெறுங்கள். மன நிறைவுடன் கூடிய வாழ்க்கையை நடத்துங்கள். இந்த ஹோமம் செய்வதற்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் அனுகூலமான நாட்கள் ஆகும். மேலும், சுப ஹோரைகளிலும் இந்த ஹோமத்தை நடத்தலாம். வருடம் ஒரு முறை இந்த ஹோமம் செய்வது, நீடித்த நல்ல பலன்களைக் கொடுக்கும்.

  பிரசாதங்கள்

  இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

  குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

  நன்மைகள்

  உமா மகேஸ்வர ஹோமத்தின் நற்பலன்கள்
  • திருமண வாழ்வின் துன்பங்கள் தீரும்

  • உங்கள் துணையுடனான தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்

  • வாழ்க்கைத் துணையுடன் நெருக்கமும், அன்பும் பெருகும்

  • மகிழ்ச்சியான, திருப்தியான திருமண வாழ்க்கை அமையும்

  • தம்பதிகள், ஆரோக்கியமான வாழ்க்கையையும், நீண்ட ஆயுளையும் பெறலாம்

  உமா மகேஸ்வர ஹோம மந்திரம்

  வாகர்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்த பிரதி பத்தயே

  ஜகதப் பிதரௌவ வந்தே பார்வதி பரமேஷ்வரௌ

  காணொளிகள்

  வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

  வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

  ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here