• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    சந்தான கோபால ஹோமம்

    சந்தான கோபால ஹோமம்

    சந்தான கோபால ஹோமம் கிருஷ்ண பகவானின் குழந்தை வடிவமான சந்தான கோபாலனை திருப்திபடுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த ஹோமமானது குழந்தை செல்வத்தை வழங்கி உங்களை ஆசீர்வதிப்பதற்கும், எதிர்பாரா கருச்சிதைவுகளுக்கு ஆளாகதவாறு தாய்மார்களைப் பாதுகாப்பதற்கும், குழந்தையைப் பாதுகாப்பான முறையில் பெற்றெடுப்பதற்கும் மிகவும் உதவியாக உள்ளது.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    குழந்தை வரம் அருளும் ஹோமம்

    அறிமுகம்

    Santhana Gopala Homa

    குழந்தை வடிவில் இருக்கும் கண்ணன், சந்தான கோபாலன் என அன்புடன் அழைக்கப்படுகிறார். சந்தான கோபால ஹோமத்தில் வழிபடப்படும் முக்கிய தெய்வம், பால கிருஷ்ணன் தான். இந்த ஹோமம், வம்சத்தை விருத்தி செய்ய குழந்தை வரம் வேண்டி நடத்தப்படுகிறது. குழந்தைக்காகத் தவமிருக்கும் தம்பதியரும், கர்பக் கோளாறுகளால் அவதியுறும் பெண்களும், இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது நல்ல பலன் தரும். இந்த ஹோமத்தினால், கருவுறுதலில் காணப்படும் பிரச்சினைகள் அல்லது தாமதங்கள், கருச்சிதைவு போன்றவற்றுக்குத் தீர்வு கிடைக்கும். குழந்தை பெறுவதில் உள்ள தடைகள் நீங்கவும், சுகப் பிரசவத்திற்கும், பிறந்த குழந்தையின் பாதுகாப்பிற்கும் இந்த ஹோமம் உதவி புரிகிறது.

    குறிப்பாக, இல்லற வாழ்வில் ஈடுபடும் புதுமணத் தம்பதியினர், இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறலாம்.

    சந்தான கோபால ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    பால கிருஷ்ணனுக்கு அர்ப்பணிக்கப்படும் இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகள், குழந்தை பெறுவதில், பெற்றோர்களுக்கு ஏற்படும் தடைகளை நீக்குகிறது. இந்த ஹோமத்தின் தெய்வீக ஆற்றல்கள், இதில் பங்கு கொள்ளும், தாயாகப் போகும் பெண்களின் உடலில் ஊடுருவி, கருவில் வளரும் குழந்தையை சிதையாமல் பாதுகாத்து வளர்க்கும் சக்தி கொண்டவை. இந்த வழிபாடு, குழந்தைச் செல்வம் மட்டுமன்றி ஆரோக்கியத்தையும், சிறந்த அறிவையும் அளிக்கக் கூடியது.

    பாரம்பரிய முறை ஹோமம்

    சந்தான கோபால ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தின் மூலம், மேலும் சிறந்த பலன் காண, புதன்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் இதைச் செய்வது நல்லது. நல்ல நேரங்களான சுப ஹோரைகளும், இந்த ஹோமம் செய்வதற்கு ஏற்றவை ஆகும்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

    நன்மைகள்

    சந்தான கோபால ஹோமத்தின் நற்பலன்கள்
    • குழந்தையற்ற தம்பதிகளுக்கு, வரப் பிரசாதமாக விளங்கும்

    • கருவுறுதலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்

    • சுகப் பிரசவத்திற்கு உதவும்

    • நல்ல அறிவும், குணமும், ஆரோக்கியமும் உள்ள குழந்தை பிறக்கும்

    சந்தான கோபால ஹோம மந்திரம்

    ஓம் தேவகி சுத கோவிந்த, வாசுதேவ ஜகத்பதே

    தேஹிமே தனயம் கிருஷ்ண தவமஹம் சரணம் கதஹ

    தேவ தேவ ஜகன்னாத

    கோத்ர வ்ருத்திகாரப் பிரபோ

    தேஹிமே தனயம் ஷீக்ரம்

    ஆயுஷ்மந்தம் யஸஸ்வினம்

    காணொளிகள்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here