• பொருட்கள் 0 US $ 0
  பதிவு செய்யவும்
  Signin
 • x
  x
  லக்ஷ்மி குபேர ஹோமம்

  லக்ஷ்மி குபேர ஹோமம்

  செல்வ வளம் பெருக, பொருளாதார நிலை மேம்பட, வெற்றி பெற இந்த ஹோமம் நடத்தபடுகின்றது. இந்த ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் வருமானம் பெருகும், வாழ்வில் ஆஸ்தியை பெருக்கிக் கொள்வதன் முயற்சியில் ஏற்படும் தடைகளை சமாளிக்கலாம்.
  {{variation.Name}}:
  {{variationdetail.VariationName}}
  {{oldPrice}} You Save {{Save}}
  {{Price}}
  இலவச ஷிப்பிங்
  அளவு:
  {{requiredQty}}
  {{prdvariation.ParentName}}:
  {{variation.Name}}
  {{childname.ChildVariationTypeName}}:
  {{childDetails.VariationName}}

  சிறப்பான பொருளாதார நிலையை அருளும் ஹோமம்

  அறிமுகம்

  Lakshmi Kubera Homa

  செல்வத்திற்கு அதிபதியாக விளங்குபவள் லக்ஷ்மி தேவி ஆவாள். அந்த செல்வத்தைப் பாதுகாத்து, பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்பவர் குபேரன் ஆவார். செல்வ வளம் பெருக, பொருளாதார நிலை மேம்பட, வெற்றி பெற இவ்விருவரையும் போற்றி வணங்கி வழிபடும் விதமாக இந்த ஹோமம் செய்யப்படுகிறது. லக்ஷ்மி குபேரன் அருளாசிகளைப் பெற, இந்த ஹோமம் சிறந்த சாதனமாகத் திகழ்கிறது.

  லக்ஷ்மி குபேர ஹோமம், பொருளாதார மேன்மையை அளிக்கும் சக்தி வாய்ந்தது. தெய்வ அருளால் பெறும் செல்வ வளத்துடன் வாழும் போது வெற்றி, முன்னேற்றம் என அனைத்தையும், தடைகள் ஏதுமின்றி, நம்மால் எளிதில் அடைந்து விட முடியும் .லக்ஷ்மி குபேர ஹோமம் செய்து, இந்த தெய்வ சக்திகள் இருவரையும் ஒரு சேர வணங்குவதின் மூலம், வாழ்வில் பொன், பொருள், செல்வம் நிறையும், வியாபாரம் செழிக்கும், வசதிகள் பெருகும், ஆஸ்திகள் கூடும். வறுமையையும், முயற்சிகளில் ஏற்படும் தடைகளையும் நீக்கும் சக்தி, இந்த ஹோமத்திற்கு உண்டு. இதில் பங்கு கொண்டு, நிதி நெருக்கடி இல்லாத, சிக்கலில்லாத, மன நிறைவான வாழ்க்கையை வாழுங்கள்.

  லக்ஷ்மி குபேர ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

  செல்வத்தின் அதிபதியாம் லக்ஷ்மி தேவியையும், அதன் பாதுகாவலராய் விளங்கும் குபேரரையும் ஒரு சேர வணங்குவது, இந்த ஹோமத்தின் சிறப்பம்சம். இதன் மூலம் செல்வம் பல மடங்கு பெருகும். இந்த இரு பெரும் சக்திகளின் ஆசியும், ஒருங்கிணைந்து கிடைக்கும் போது, மக்கள், தம் பாதையில் எழும் தடைகள் அனைத்தும் நீங்கி, பொன் , பொருள், செல்வம் என அனைத்தையும் பெற இயலும். இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதின் மூலம், உங்கள் அதிர்ஷ்டத்தில் நல்ல மாற்றம் காண முடியும், வருமானத்தை பெருக்கிக் கொள்ள இயலும், பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்ள முடியும், செல்வம் குவிப்பதற்கு இடையூறாக உள்ள தடைகளையும் நீக்கிக் கொள்ள முடியும். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, இது போன்ற பலன்களையெல்லாம் நீங்கள் பெற்றிடலாம்.

  பாரம்பரிய முறை ஹோமம்

  லக்ஷ்மி குபேர ஹோமம், வேத சாஸ்திரங்களைக் நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. லக்ஷ்மி குபேரன் அருளால் , பொன், பொருள், செல்வம் என உங்கள் வாழ்க்கைகுத் தேவையான அனைத்தையும் குறைவின்றிப் பெற்றிட, இந்த ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள்.

  பிரசாதங்கள்

  இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

  குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

  நன்மைகள்

  லக்ஷ்மி குபேர ஹோமத்தின் நற்பலன்கள்

  லக்ஷ்மி குபேர ஹோமத்தினால் நாம் பல நல்ல பலன்களை அடையலாம் என்கின்றன, புனித நூல்களின். இதன் பயனாக

  • கடன்களில் இருந்து விடுதலை கிடைக்கும்

  • வருமானம் அதிகரிக்கும்

  • பண வரவு மகிழ்ச்சிகரமாக அமையும்

  • செல்வங்கள் சேரும்

  • தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும்

  • பொருள் மற்றும் பணம் சேர்ப்பதில் காணப்படும் தடைகள் அகலும்

  • செல்வம் சார்ந்த அதிர்ஷ்டம் பெருகும்

  லக்ஷ்மி குபேர ஹோம மந்திரம்

  ஓம் ஷ்ரீம் குபேராய நமஹ

  காணொளிகள்

  வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

  வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

  ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here