• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    லக்ஷ்மி நாராயண ஹோமம்

    லக்ஷ்மி நாராயண ஹோமம்

    லக்ஷ்மி நாராயண ஹோமம் – இந்த ஹோமம் ஏராளமான பொருட்செல்வங்கள் பெற உதவும். ஸ்ரீமன் நாராயணின் இதய கமலத்தில் உறைவிடம் கொண்டவள் ஸ்ரீ லக்ஷ்மி தேவி. ஸ்ரீ லக்ஷ்மி தேவி சமேத ஸ்ரீமன் நாராயணன் தனது பக்தர்களுக்கு செல்வத்தையும் செழிப்பையும் வழங்குபவர்கள். இந்த ஹோமத்தை செய்வதன் மூலம் கடன்கள் விலகும், பொருளாதார கஷ்டங்கள் விலகும், உறவுப் பிரச்சினைகள் விலகும்.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    செல்வச் செழிப்பும் பாதுகாப்பும் அருளும் ஹோமம்

    அறிமுகம்

    Lakshmi Narayana Homa

    அனைத்து உலகங்களையும் காத்தருளும் ஸ்ரீமன் நாராயணின் இதய கமலத்தில் உறைபவள், ஸ்ரீ லக்ஷ்மி தேவி. லக்ஷ்மி தேவி உடன் உறையும் பகவான் நாராயணன், லக்ஷ்மி நாராயணனாகப் போற்றப்படுகிறார். என்றும் இணைபிரியாத இந்த தெய்வ தம்பதிகள், தங்கள் பக்தர்களுக்கு, செல்வத்தையும், செழிப்பையும் வாரி வழங்குபவர்களாகத் திகழ்கிறார்கள். லக்ஷ்மி நாராயண ஹோமம் என்பது, இந்த இணைந்த இறைவடிவங்களை ஆராதிக்கும் வழிபாடாகும். இந்த ஹோமத்தை செய்வதன் மூலம் கடன்கள் விலகும், பொருளாதார பிரச்சினைகள் தீரும், உறவுகள் வலுப்படும், பெரும் பொருட்செல்வங்கள் வந்து சேரும்.

    செல்வம் மற்றும் செழிப்பின் அம்சமாக விளங்கும் லக்ஷ்மி மற்றும் நாராயணர் இருவரையும் சேர்ந்து வழிபடுவதனால், இந்த ஹோமம் சிறப்பு வாய்ந்தது. அவர்கள் நல்லருளால், செல்வமும், வளமையும் பல மடங்கு பெருகலாம். இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, உங்கள் முன்னேற்றத்தில் காணப்படும் தடைகளை விலக்கி, நிதிநிலையில் மேன்மை பெற்று, வாழ்வில் வளம் காணுங்கள். இதன் மூலம், உங்கள் அதிர்ஷ்டத்தையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்

    லக்ஷ்மி நாராயண ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    ஸ்ரீ லக்ஷ்மி மற்றும் ஸ்ரீமன் நாராயணனுக்காக நடத்தப்படும் இந்த ஹோமம் ஒரு, தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். இதன் மூலம், இந்த இருவரின் ஆசியும் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்க்கை நடத்தலாம். செல்வத்தின் அதிபதியான ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் கடாட்சத்தால் உங்கள் வாழ்வில் செழிப்பும், பொருட் செல்வமும், நல் அதிர்ஷ்டமும், நல்லிணக்கமும், ஆன்மீக ஞானமும் பெருகும். ஸ்ரீமன் நாராயணனின் அருளால், எதிர்பாராத நிதி நெருக்கடிகள் நீங்கி உங்கள் செல்வம், சொத்து போன்றவற்றுக்குப் பாதுகாப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். நிறைந்த செல்வமும், மன நிறைவும் பெற்று வாழுங்கள்.

    பாரம்பரிய முறை ஹோமம்

    லக்ஷ்மி நாராயண ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. இதன் மூலம் உங்கள் உடல் மற்றும் மனதில் நேர்மறை ஆற்றல் தோன்றுவதை நீங்கள் அனுபவித்து உணரலாம். இதனால் உங்களால், கடன்களை தீர்க்கவும், நிதிப் பாதுகாப்பு பெறவும், உறவுகளை பலப்படுத்தவும், புதியவர்களுடன் நல்லுறவு கொள்ளவும் இயலும். நீடித்த நன்மைகள் பெற, இந்த ஹோமத்தை வருடத்திற்கு ஒருமுறை நடத்துவது சிறந்தது.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

    நன்மைகள்

    லக்ஷ்மி நாராயண ஹோமத்தின் நற்பலன்கள்

    தெய்வத் தம்பதிகலான லக்ஷ்மி தேவி மற்றும் பகவான் நாராயணரை ஹோமம் செய்து வழிபடுவதன் மூலம், நமக்கு பல நன்மைகள் விளைவதாக, வேத நூல்கள் கூறுகின்றன. இதனால்

    • நிதிநிலை சார்ந்த துன்பங்கள் தீரும்

    • செல்வச் செழிப்பு விளையும்

    • முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்

    • உறவுப் பிரச்சினைகள் தீரும்

    • பலவகைத் திறன்கள் ஏற்படும்

    லக்ஷ்மி நாராயண ஹோம மந்திரம்

    ஓம் ஷ்ரீம் க்லீம் லக்ஷ்மி நாராயண நமஹ

    காணொளிகள்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here