• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    லக்ஷ்மி ஹோமம்

    லக்ஷ்மி ஹோமம்

    லக்ஷ்மி ஹோமம் – இந்த ஹோமம் ஏராளமான பொருள் வளம் மற்றும் செல்வ வளம் பெற, தெய்வத்தின் ஆசியை பெற்றுத் தரும். ஸ்ரீமன் நாராயணின் இதயக் கமலத்தில் வாழும் ஸ்ரீ லக்ஷ்மி தேவி தனது பக்தர்களுக்கு செல்வத்தையும் செழிப்பையும் வழங்கி அருள்பாலிக்கிறார். கடன்களிலிருந்து மீளவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் செல்வச் செழிப்பை அடையவும் இந்த ஹோமத்தை செய்து லக்ஷ்மி தேவியின் அருளைப் பெறுங்கள்.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    செல்வச் செழிப்பை வழங்கும் ஹோமம்

    அறிமுகம்

    Lakshmi Homa

    செல்வத்திற்கு அதிபதியாக விளங்குபவள் அன்னை லக்ஷ்மி. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தனது பக்தர்களுக்கு தருவதில் அவளுக்கு நிகர் வேறு யாருமில்லை. ஏழ்மையை நீக்குபவள் அவளே. உங்கள் கடன்கள் தீர வழி காட்டுபவள் அவளே. செல்வம் பெற, பகவான் விஷ்ணுவின் திரு மார்பில் உறையும் லக்ஷ்மி தேவியை வழிபடும் விதமாக, இந்த ஹோமம் செய்யப்படுகின்றது. ஏராளமான பொருட் செல்வத்தையு,ம் வளத்தையும் வாரி வழங்கும் லக்ஷ்மி தேவியை குறித்து செய்யப்படும் இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு அவளின் அருளாசிகளைப் பெற்றிடுங்கள்.

    ஏழ்மை நிலை நீங்கவும், கடன்கள் தீரவும், வளம் பெருகி, வீட்டில் செல்வம் நிலைக்கவும் லக்ஷ்மி தேவியின் அருளைப் பெற வேண்டியது அவசியம். அன்னை லக்ஷ்மியின் அருளை உங்களுக்குப் பெற்றுத் தரும் வகையில் நாங்கள் இந்த ஹோமத்தை உங்கள் சார்பாக நடத்தி தருகிறோம். இதில் பங்கு கொள்வதன் மூலம் உங்கள் செல்வத்தைப் பெருக்கி, அதிர்ஷ்டத்தைப் பல மடங்கு உயர்த்திக் கொள்ளும் அரிய வாய்ப்பினை நீங்கள் பெறலாம்.

    லக்ஷ்மி ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

    ஹோமம் என்றாலே சிறப்பு வாய்ந்தது. லக்ஷ்மி தேவி ஹோமம் தனிச் சிறப்பு வாய்ந்தது என்று கூறவும் வேண்டியதில்லை. செல்வம், அழகு, செழிப்பு போன்றவற்றின் சின்னமாக விளங்குபவள் லக்ஷ்மி தேவி. அவளை ஹோமம் செய்து ஆராதிப்பதன் மூலம் வறுமை நீங்கும். செல்வம் பெருகும். வாழ்க்கைத் தரம் உயரும். உங்கள் அழகு, செல்வம் கூடும். உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

    பாரம்பரிய முறை ஹோமம்

    லக்ஷ்மி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு கொண்டு, லக்ஷ்மி தேவியின் தெய்வீக ஆசி பெற்று, வேலை, தொழிலில் உயர்வு, பொருளாதார மேன்மை, வளமான வாழ்க்கை போன்றவற்றை அடையுங்கள்.

    பிரசாதங்கள்

    இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

    நன்மைகள்

    லக்ஷ்மி ஹோமத்தின் நற்பலன்கள்

    புனித நூல்களின் படி, லக்ஷ்மி ஹோமத்தினால் நாம் அடையும் பலன்கள் ஏராளமானவை. இதன் மூலம்

    • நல்ல சிந்தனைகளைப் பெறலாம்

    • இலக்குகளில் வெற்றி பெறலாம்

    • மன அமைதி பெறலாம்

    • அழகு, செல்வம் மற்றும் அனைத்து வளங்களையும் பெறலாம்

    • பொருளாதார மேன்மை அடையலாம்

    • வாழ்வில் நல்ல வசதிகளைப் பெறலாம்

    • மனம், உடல் மற்றும் ஆன்மாவை தூய்மை படுத்திக் கொள்ளலாம்

    • மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்

    லக்ஷ்மி ஹோம மந்திரங்கள்

    ஓம் ஷ்ரீம் ப்ரிஸீ லக்ஷ்மியை ஸ்வாஹா

    அல்லது

    ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் ஷ்ரீம் மகாலக்ஷ்மி ஸ்வாஹா

    மேலும், கீழ கொடுக்கப்பட்டுள லக்ஷ்மி தேவிக்கான இந்த எளிய மந்திரத்தையும் நீங்கள் ஜெபம் செய்யலாம் அல்லது எழுதலாம்

    ஷ்ரீம் ப்ரிஸீ

    காணொளிகள்

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here