• பொருட்கள் 0 US $ 0
  பதிவு செய்யவும்
  Signin
 • x
  x
  தன்வந்தரி ஹோமம்

  தன்வந்தரி ஹோமம்

  தன்வந்திரி ஹோமம், தெய்வீக மருத்துவர் என்று அழைக்கப்படுகின்ற, பிரபஞ்சத்தின் பாதுகாவலரான விஷ்ணுவின் அவதாரமாக விளங்குகின்ற, தன்வந்திரி பகவானின் ஆசிகளைப் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. இந்த ஹோமத்தின் பொழுது வெளியாகும் ஆற்றல்கள் சக்தி வாய்ந்தவை. நம்மைப் பாதுகாக்கும் கவசமாக செயல்படக்கூடியவை. நோய் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகளை நீக்க வல்லவை. இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, தன்வந்தரி பகவானின் பரிபூரண அருளைப் பெற்று, நோயற்ற நீண்ட ஆயுளைப் பெற்று மகிழுங்கள்
  {{variation.Name}}:
  {{variationdetail.VariationName}}
  {{oldPrice}} You Save {{Save}}
  {{Price}}
  இலவச ஷிப்பிங்
  அளவு:
  {{requiredQty}}
  {{prdvariation.ParentName}}:
  {{variation.Name}}
  {{childname.ChildVariationTypeName}}:
  {{childDetails.VariationName}}

  உடல் ஆரோக்கியத்திற்கான ஹோமம்

  அறிமுகம்

  Dhanvantri Homa

  பிரபஞ்சத்தை காத்தருளும் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் தன்வந்தரி பகவான், தெய்வீக மருத்துவராக வணங்கப்படுபவர் ஆவார். இவர், பாற்கடலைக் கடைந்த பொழுது அமிர்த கலசத்துடன் தோன்றியவர். இவரை ஆராதிக்கும் வகையில் செய்யப்படுவதே தன்வந்தரி ஹோமம் ஆகும்.

  இந்த ஹோமத்தின் பொழுது வெளியாகும் ஆற்றல்கள் சக்தி வாய்ந்தவை. நம்மைப் பாதுகாக்கும் கவசமாக செயல்படக்கூடியவை. நோய் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகளை நீக்க வல்லவை. இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, தன்வந்தரி பகவானின் பரிபூரண அருளைப் பெற்று, நோயற்ற நீண்ட ஆயுளைப் பெற்று மகிழுங்கள்.

  தன்வந்தரி ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

  உடல் சம்பந்தப்பட்ட எதிர்மறை அம்சங்களை நீக்கி நல வாழ்வையும், பரவசத்தையும் அளிப்பதே இந்த ஹோமத்தின் சிறப்பம்சம் ஆகும். தன்வந்தரி ஹோமத்தில் 1௦8 மருத்துவ மூலிகைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. சிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளின் ஹோமப் புகையும், மணமும், நல்ல பல பலன்களை அளிக்க வல்லவை. தனது அமிர்த கலசத்தின் மூலம் தன்வந்தரி பகவான், தேவர்களைக் காத்தருளியவர். அத்தகைய பகவானின் அருளைப் பெற, இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது சிறந்தது, இது, உடல் ரீதியிலான நோய்களைத் தீர்க்க வல்லது. வருடத்திற்கு ஒரு முறை இந்த ஹோமம் செய்வதன் மூலம், நீடித்த நல்ல பலன்களைப் பெற முடியும்.

  பாரம்பரிய முறை ஹோமம்

  தன்வந்தரி ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன், முறையாக நடத்தப்படுகிறது. புனிதமான இந்த ஹோமத்தை நடத்துவதற்கு, ஏகாதசி திதி சிறப்பு வாய்ந்த நாளாகும். மேலும், அதிக பலன்களைப் பெற இந்த ஹோமத்தை குரு மற்றும் புத ஹோரைகளில் நடத்துவது நல்லது.

  பிரசாதங்கள்

  இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

  குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

  நன்மைகள்

  தன்வந்தரி ஹோமத்தின் நற்பலன்கள்
  • நோய்களுக்கு சக்தி வாய்ந்த தீர்வு கிடைக்கும்
  • உடல் நலப் பிரச்சினைகள் தீரும்
  • உடல் நலம் குன்றியவர்களும், உயிர்க் கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் பயன் பெறுவர்
  • நோயற்ற நீண்ட ஆயுள் பெறலாம்

  தன்வந்தரி ஹோம மந்திரம்

  ஓம் ஹ்ரீம் தன்வந்தரி மகாவிஷ்ணவே நமஹ

  தன்வந்தரி ஹோமம்

  வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

  வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

  ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here