x
x
x
cart-added The item has been added to your cart.

July Monthly Meenam Rasi Palangal 2019

May 3, 2019 | Total Views : 353
Zoom In Zoom Out Print

மீன ராசி - பொதுப்பலன்கள்

மீன ராசி அன்பர்களே! இது உங்களுக்கு வளம் தரும் மாதமாகத் திகழும்.  பொது வாழ்வில் நல்ல புகழ் பெறும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் ஈடுபட்டிருக்கும் தொழில் வழியில். பொது ஜனத் தொடர்பை அதிகரித்துக் கொள்வீர்கள். இதனால், சில நல்ல மனிதர்களின் தொடர்பும் ஏற்படும். இவர்கள் மூலம் உங்கள் நிலை உயரும். உங்கள் சமயோசித புத்தியைப் பயன்படுத்தி, சிறந்த முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களும் ஏற்படக் கூடும். எனினும், உணர்ச்சி வசப்படுவது, பல பிரச்சினைகளை உருவாக்கக் கூடும். எனவே, அதைத் தவிர்ப்பது அவசியம். உங்கள் மனமும், உடலும் ஒருசேர இயங்குமாறு செய்யப் பழக வேண்டும். இது, உங்களுக்கு ஒரு ஸ்திரத்தன்மையை அளிக்கும். இந்த நிலையை அடையும் வகையில், உங்கள் எண்ணங்களையும், செயல்களையும் சீராக அமைத்துக் கொள்ள, நீங்கள் தியானப் பயிற்சி  மேற்கொள்வது நல்ல பலன் தரும். இப்பொழுது, அதிக பயணங்களையும்  மேற்கொள்ள வேண்டியிருக்கும். நல்ல உடல் வலிமையுடன், ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.  

2019-july-months-rasi-palan-for-meenam

மீன ராசி - காதல் / திருமணம்
 
நீங்களும், உங்கள் காதல் துணையும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் பிரச்சினைகள் எழலாம். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பு, நீங்கள் யதார்த்தமாக யோசிக்க வேண்டும். உங்கள் கோப உணர்வு குடும்பத்தில் சில பிரச்சினைகளை உருவாக்கக் கூடும். எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் உறவுகளுடன் உரையாடும் பொழுதும், கருத்துப் பரிமாற்றத்தின் பொழுதும், மிக்க கவனத்துடன் இருப்பது நல்லது. . 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சந்திர பூஜை

மீன ராசி - நிதி

பொருளாதார ரீதியாக, உங்களுக்கு நன்மைகளும், நற்பலன்களும் நடக்கும் நேரம் இது. நிதிநிலை ஸ்திரத் தன்மை பெறும். உங்களுக்குச் சேரவேண்டிய தொகைகள் திரும்ப வந்து சேரும். சுப காரியங்களுக்கும், விழாக்களுக்கும், நீங்கள் தாராளமாகப் பணம் செலவு செய்வீர்கள். எனினும், தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: அங்காரக பூஜை

மீன ராசி - வேலை 

வேலை நிலவரம் உற்சாகம் தரும். உங்கள் செயல் திட்டங்கள், உதவிகரமாக அமையும். இது மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுத் தந்து, உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். உங்களுக்கு, நல்ல பெயரும், புகழும் கிடைக்கும். பதவி உயர்வு பெறுவதற்கு, நீங்கள் எடுக்கும் முயற்சிகள், நல்ல பலன் தரும். நீங்கள் ஈட்டியுள்ள நன்மதிப்பு, வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க உதவும். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு பூஜை

மீன ராசி - தொழில்

தொழிலில் முன்னேற்றம் தரும் நேரம் இது. சிறிய பின்னடைவுகள் ஏற்பட்டாலும், உங்களுக்கு சாதகமான காலம் தொடர்ந்து வரும். இது, உங்கள் கடின உழைப்பிற்கான நல்ல பலன்களைப் பெற்றுத் தரும். இதன் பயனாக, வாழ்க்கையில் அமைதியும், நிறைவும் ஏற்படும்.  
மீன ராசி - தொழில் வல்லுனர்கள் 

தொழில் வல்லுனர்கள் ஏற்றம் பெறுவர். உங்கள் தன்னம்பிக்கை, பணிகளை சிறப்பாக செய்து முடிக்க உதவும். இதற்காக நீங்கள் எதிர்பார்க்கும் பாராட்டும் உங்களுக்குக் கிடைக்கக் கூடும். ஆனால், பணியிடத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றலாம். உங்கள் தன்னம்பிக்கையின் துணை கொண்டு, இவற்றையும் நீங்கள் தீர்த்து விடுவீர்கள்.  

மீன ராசி - ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியத்துடன் கூட, இப்பொழுது நீங்கள் நல்ல மன அமைதியையும் பெற முடியும். மேலும், உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் மாதமாகவும் இது இருக்கும். எனினும், குழந்தைகளின் உடல் நலம் கெடலாம். ஆனவே, அவர்களின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், மிகுந்த மன எழுச்சி காரணமாக, இப்பொழுது நீங்கள், சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் போகலாம். இது, ஜீரணம் தொடர்பான கோளாறுகளை ஏற்படுத்தலாம். எனவே, துரித உணவு வகைகளை தவிர்த்து விடுவது நல்லது. 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை

மீன ராசி - மாணவர்கள் 

மாணவர்களின் கல்வி சிறந்து விளங்கும். படிப்பில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான உங்கள் சரியான, விரைவான முடிவுகள் நன்மை தரும்; மற்றவர்களின் பாராட்டையும் பெறும். இப்பொழுது எந்தப் பிரச்சினை எழுந்தாலும், அதனால் உங்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது. மேலும், விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம், நீங்கள் மகிழ்ச்சியும் ஆறுதலும் பெறுவீர்கள். இவ்வாறு, இந்த மாதம் பலவகையிலும் சிறந்து விளங்கும்.  

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை

சுப தினங்கள்: 4,5,7,13,14,16,17,18,19,20,22,23,24,27,28,29,30.
அசுப தினங்கள்: 1,2,3,6,8,9,10,11,12,15,21,25,26,31.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos